வாயு புராணம் (சிவ புராணம்) - 17

 சந்திரசேகரன்

------------------------


 

பார்வதி முற்பிறவியில் சதி என்ற பெயருடன் தட்சனின் மகளாய் பிறந்திருந்தாள்.தட்சன் யாகத்திற்குச் சென்ற சதி அவனால் அவமானப்படுத்தப்பட்டு அங்கேயே உயிர் நீத்தாள்.சதியை இழந்த  சிவன் கடும் தவம் மேற்கொண்டார்.அந்த கடுமையான தவத்தால் மரம், செடி,கொடிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.மலைகளும் இதில் அடக்கம்.


தேவர்கள் அனைவரும் கூடி பிரம்மனிடம் சென்று ஏதேனும் செய்யும்படி வேண்டினர்.பிரம்மன், சந்திரனை அமுத கலசத்துக்குள் போட்டு..அந்தக் கலசத்தையும்..வேறு ஒரு கலசத்தில் விஷத்தையும் நிரப்பிக் கொண்டு சிவனிடம் சென்றார்.சிவனிடம் இரண்டு கலசங்களையும் கொடுத்து..ஏதும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.சிவன் முதலில் அமுத கலசத்தை எடுத்து குடித்தார்.அதில் இருந்த சந்திரன் திடீரென சிவனின் நெற்றியில் ஒட்டிக் கொண்டு அவரை குளிர்ச்சியடையச் செய்தான்.விஷக்கலசத்தில் ஒரு விரலை நனைத்துக் கொண்டு சிவன் தொண்டையைத் தொட்டார்.உடன் அந்த இடம் நீல நிறமாக மாறியது.அதிலிருந்து சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வரலாயிற்று.நெற்றியில் ஒட்டிய சந்திரன் ஒரு அணியைப் போல இருந்ததால் அவருக்கு சந்திரசேகரன் என்ற பெயர் ஏற்பட்டது.


சிவ அணியும் விபூதி

------------------------------------

ஒருகாலத்தில் பிருகுவின் பரம்பரையில் வந்த அந்தணன் ஒருவன் மிகக் கடுமையான தவம் மேற்கொண்டான்.அதனால் சுற்றிலும் உஷ்ணம் பரவியது.அதன் மேல் மேகம் மழையை பெய்தது.உஷ்ணமோ..நீரின் குளிர்ச்சியோ அந்தணனை ஒன்றும் செய்யலில்லை.தவம் தொடர..அவனிடம் அச்சமின்றி விலங்குகளிலிருந்து மான் வரை பழகின.ஒருநாள் பசி ஏற்பட விலங்குகளிடம் "உண்ணுவத்ற்கு ஏதேனும் கொண்டு வாருங்கள்"என்றதும்..அவையும் கொண்டு வந்து தந்தன.தவம் தொடரத் தொடர பச்சை இலைகளை அவன் உண்ணத் தொடங்கினான்.பச்சை இலைக்கு வடமொழியில் "பர்னா" என்று பெயர்.அதனால் அவன் பிரன்னதா என அழைக்கப் பட்டான்.ஒருநாள் அவன் புல் அறுக்கும் கத்தியால் புற்களை வெட்டும் போது நடுவிரல் வெட்டிவிட்டது.ஆனால் அதிலிருந்து ரத்தம் வருவதற்கு பதில்..மரம், செடியில் இருக்கும் தாவர உயிர்ச்சாறு போன்ற திரவம் வெளியே கசிந்தது.உடனே..அவன்..தான் மிகப் பெரிய உயரிய நிலையை அடைந்து விட்டதாகவும்..ரத்தத்திற்குப் பதிலாக உயிர்ச்சாறு வருவதாகவும் குதித்தான்.ஆணவம் கொண்டான்.


இதைக்கண்ட சிவன்,இவனுக்கு சரியானப் பாடம் கற்பிக்க எண்ணி ஒரு பிராமணன் வேடம் பூண்டு அவன் முன் வந்தான்.அந்தணனைப் பார்த்து.."உனக்கு என்ன ஆனந்தம் இன்று.."என வினவினான்.அந்தணன் நடந்ததைக் கூறி..தவத்தில் உச்சக் கட்டத்தை அடந்து விட்டேன்..அதனால் குதிக்கின்றேன்" என்றான்.


இதைக் கேட்ட பிராமணன்,"இவ்வளவுதானா..இன்னமும் உன் உடலில் நீர்ச்சத்துதான் உள்ளது..என் உடலைப் பார்"என்று கூறி தன் விரலை வெட்டிக் கொண்டார்.அதிலிருந்து விபூதி கொட்டியது.அந்தணனின் அகந்தை அழிந்தது.அன்றிலிருந்து சிவன் மேனி எல்லாம் விபூதி விளங்கத் தொடங்கியது.   

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம் - 20

விஷ்ணு புராணம் - 22

வாயு புராணம் (சிவ புராணம்) - 11