Posts

Showing posts from January, 2021

வாயு புராணம் (சிவ புராணம்) - 14

    ஜோதிர்லிங்கங்கள் ----------------------------------  1) சோமநாதர் ------------------------ தட்சனின் 27 பெண்களை மணந்து கொண்ட ச்னஹ்திரன், ரோகிணியின் மீது மட்டும் அதிக அளவில் அன்பு செலுத்தி வந்தான்.இதனால்  மற்றவர்கள் மனம் வருந்தினர்.அவர்கள் தட்சனிடம் சென்று முறையிட்டனர்.தட்சனும் சந்திரனிடம்..எல்லோரிடமும் சமமாக நடந்துக் கொள்ளுமாறுக் கூறினான்,.இப்படி பலமுறை எச்சரித்தும் சந்திரன் அதைக் காதில் வனகிக் கொள்ளவே இல்லை.இதனால் கோபம், அடைந்த தட்சன்,"நீ தேய்ந்து போவாயாக" என சாபமிட்டான்.பயந்து போன சந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான்..பிரம்மன், "உனக்கு உதவும் சக்தி எனக்கில்லை.நீ சிவனிடம் சென்று முறையிடு"என்று கூற..சந்திரன் சரஸ்வதி நதியின் கரையில் பிரபச தீர்த்தத்தில் ஒரு லிங்கம் அமைத்து ஆறுமாதங்கள் தீவிரமாக வழிபட..சிவன் நேரில் தோன்றி,"என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார். சோமன், நடந்ததையெல்லாம் கூறி,தன்னைக் காக்கும்படி வேண்டினான். செய்த தறுக்கு கொடுத்த தண்டனையை போக்க முடியாது என்ற சிவன்.."இதற்கு ஒரு வழி சொல்கிறேன்..கிருஷ்ணபட்சம் 14 நாட்கள் உன் மாமனார் சாபப்படி நீ தேய்ந்

வாயு புராணம் (சிவ புராணம்) - 13

  அத்ரிஈஸ்வரதீர்த்தம் --------------------------------------- சுமதா என்றொரு காடு இருந்தது.அங்கு பல ஆண்டுகள் மழையில்லாததால் மரங்கள் கருகி உயிரினங்கள் மிகவும் துன்புற்றன.அவ்வனத்தில் அத்திரி என்றொரு முனிவரும்..அவரது மனைவி அனுசுயாவும் வாழ்ந்து வந்தனர்.மழை வேண்டி சிவனைக் குறித்து அத்ரி தவமிருந்தார்.அன்ன, ஆகாரமின்றி அவர் தவ்ம இருப்பதைக் கண்ட அவரது மனைவி அனுசுயாவும் சிவனை வேண்டி தவமிருந்தாள்.பல ஆண்டுகள் தவம் நீடித்தது.திடீரென அத்ரிக்கு அதிக தாகம் எடுக்க அனுசுயாவைப் பார்த்து..எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்..என்றார்.அனுசுயாவும் ஒரு குடத்தியத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள். அப்போது அவள் எதிரே ஒரு பெண் தென்பட்டாள்.அப்பெண் இவளைப் பார்த்து,"அனுசுயா..நான் கங்காதேவி..உன் தவத்தைக் கண்டு மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றாள். உடன் அனுசுயா, "நீதான் கங்கை என்றால் இங்கே ஒருகுளத்தை உண்டாக்கி அதில் கங்கை நீரை நிரப்புவாயாக" என்றாள்.அவ்வறே நடந்தது. அனுசுயாவும், குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு அத்ரியிடம் வந்து நடந்ததைக் கூறினாள்.அவர் உடன் அனுசுயாவுடன் குளக்கரைக்குச்

வாயு புராணம் (சிவ புராணம்) - 12

 நந்திகேசுவர தீர்த்தம் --------------------------------- வெகு காலத்திற்கு முன் கர்ணகி என்ற இடத்தில் ஒரு வேதியன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரு பிள்ளைகள்.மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு விட்டு அவன் வாரணாசி சென்றான்.அங்கேயே  அவன் இறந்துவிட்டதாக செய்தி வந்ததால்..அங்கேயே பிள்ளைகள் சடங்கு செய்தனர்.வேதியனின் மனைவியும் இறக்கும் நேரம் வந்தது.ஆனாலும் உயிர் பிரியாது அவதிப் பட்டாள்.அவளது பிள்ளைகள் "அம்மா! உன் விருப்பம் ஏதோ ஒன்று நிறைவேறாமல் இருக்கின்றது..ஆகவேதான் உன் உயிர் பிரிய மறுக்கின்றது.அது என்னவெனக் கூறினால்..அதைச் செய்கிறோம்" என்றனர். அதற்கு  அவள்"இறப்பதற்குள் உங்களது தந்தையைப் போல வாரணாசி போக நினைத்தேன்.அது முடியவில்லை.ஆகவே நான் இறந்ததும் என் எலும்புகளை அங்குக் கொண்டு செல்வதானால்..நான் அமைதியாகச் சாவேன்" என்றாள்.பிள்ளைகளும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர்.உடன் அவள் உயிர் பிரிந்தது. அவளது மூத்த மகன் சுவடி..எலும்புகளை எடுத்துக் கொண்டு வாரணாசி சென்றான்.மிகவும் நீண்ட தூரமானதால்..இரவு ஒரு அந்தணன் வீட்டுத் திண்ணையில் தங்கினான்.அந்தணன் காலையில் எழுந்து அவன் வீட்டுப் பசுவிடம்

வாயு புராணம் (சிவ புராணம்) - 11

 கணேசனும்..கார்த்திகேயனும் ----------------------------------------- சிவனுக்கும் , பார்வதிக்கும்...கணேசன்,கார்த்திகேயன் என இரு மகன்கள் இருந்தனர்.பருவம் அடைந்த இருவருக்கும் திருமணம் செய்விக்க தாய்- தந்தை எண்ணினர்.ஆனால்..இருவரில் யாருக்கு முதலில் திருமணம் செய்விப்பது என்பதில் இருவருக்கும் பிரச்னை.ஒருவருக்கு முதலில் செய்தால்..மற்றவரின் மன்ம வருத்தப்படுமே என நினத்தவர்கள்..அவர்களை அழைத்து.."நீங்கள் இருவரும் உலகைச் சுற்றி வர வேண்டும்..யார் முதலில் வருகிறார்களோ..அவர்களுக்கு முதலில் திருமணம் செய்து வைக்கிறோம்" என்றனர். இதைக் கேட்ட கார்த்திகேயன் உடன் புறப்பட்டு விட்டான்.ஆனால் கணேசனோ சிறிது தூரம் கூட  களைப்பின்றி தன்னால் போக முடியாது என சிறிது நேரம் யோசனை செய்தான்.பின் குளித்து வந்து தந்தை-தாய் இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் அமரச் செய்தான்..பின் அவர்களை வணங்கி..ஏழு முறை சுற்றி வந்து..உடன் தன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்.சிவன் அவனிடம், "உலகை சுற்றி வர வேண்டுமென உனக்குக் கட்டளையிட்டோமே..நீ இங்கேயே இருக்கின்றாயே....கார்த்திகேயன் புறப்பட்டுச் சென்று விட்டான்.நீயும் செல்&

வாயு புராணம் (சிவ புராணம்) - 10

 பார்வதிக்கு தனியாக ஒரு அரண்மனை இருந்தது.அதன் காவலர்களாக நந்தியும்,பிருங்கியும் காவல் செய்தனர்.அவர்கள் உத்தரவு  இல்லாமல் யாரும் பார்வதியைப் பார்க்க இயலாது.பார்வதியின் தோழிகளான ஜெய,விஜய என்பவர்களுக்கு இந்த நிலை நீடிப்பதில் விருப்பமில்லை.எனவே இது குறித்து பார்வதியிடம் முறையிட்டனர்.அவர்களிடம் பேசிய பிறகு பார்வதி அருகில் இருந்த குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து அழகிய பிள்ளை வடிவம் உண்டாக்கினாள்.பிறகு அந்தப் பிள்ளையை அலங்காரம் செய்து "நீ என் மகன்.உனக்கு கணேசன் என்று பெயர் வைக்கின்றேன்.இன்று முதல் நீயே என் மெய்க்காவலன்" என்று கூறினாள். அப்பிள்ளை ஒரு தடிக் கம்பை எடுத்துக் கொண்டு காவல் தொழில் செய்ய ஆரம்பித்தான்.யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை.சிவன் வந்ததும் அவரையும் தடுத்து நிறுத்தி விட்டான்.சிவன்.."நான்தான் சிவபெருமான்" என்று கூறியும்..அப்படி யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டான்.எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை..அவனைத் தாண்டியும் உள்ளே செல்ல இயலவில்லை.கணேசன் அவரை தடியால் அடித்துத் துன்புறுத்தினான்.உதவிக்கு வந்த நந்தி முதலியவ்ரகளையும் தடியால் அடித்தான்.பின்னர்

வாயு புராணம் (சிவ புராணம்) - 9

 நாரதரும் சம்பங்கி மரமும் ------------------------------------- (சிவன் சம்பங்கி மலரை ஏற்காததற்கு சொல்லப்ப்ட்டுள்ள மற்றொரு சம்பவம்) ஓருமுறை நாரதர் திருக்க்கோகர்ணம் சென்று சிவனை வணங்கப் புறப்பட்டார்.வழியில் ஒரு அழகான சம்பங்கி மரம் பூத்துக் குலுங்கி நின்றது.அதன் அருகே ஒரு அந்தணன் வந்தான்.அவன் கையில் ஒரு பாத்திரம் இருந்தது.நாரதர் அவனிடம், "நீ யார்? எங்கு போகிறாய்?" என்று கேட்டார்.அதற்கு அவன், "நான் பிச்சை எடுக்கப் போகிறேன்" என்று பொய் சொன்னான்.நம்பிய நாரதரும் கோயிலுக்குள் சென்று சிவனை வழிபட்டுவிட்டு வந்தார்.அந்த அந்தணன் கையில் இருந்த பாத்திரத்தில் சம்பங்கிப் பூக்களை நிறைத்துக் கொண்டு, அதை மூடி வைத்திருந்தான். அவன் மீது சந்தேகப்பட்ட நாரதர் சம்பங்கி மரத்திடம்,"ஏ..மரமே..அவன் உன் பூக்களைப் பறித்தானா?"எனக் கேட்டார்.அந்த அந்தணனைப் போல மரமும் "என் பூக்களை யாரும் பறிக்கவில்லை"என பொய் சொன்னது.நாரதர் மீண்டும் கோயிலுக்குள் சென்றார்.சிவலிங்கத்தின் தலையில் புதிய சம்பங்கிப் பூ வைக்கப் பட்டிருந்தது.பக்கத்தில் தியானம் செய்து கொண்டிருந்தவரிடம்"இந்தப் பூவை யார் ல

வாயு புராணம் (சிவ புராணம் ) - 8

 சிவன் ஏற்காத சம்பங்கிப் பூ -----------------------------------  லோமஹர்ஷன் முனிவர் மற்ற முனிவர்களுக்கு சிவ புராணத்தை சொல்லிக் கொண்டு வரும் போது"சிவனை திருப்தியடைய செய்வது எளிது.சம்பங்கிப் புவைத் தவிர வேறு எந்தப் பூ கிடைத்தாலும் அதைச் சிவனுக்கு அர்ப்பணித்தால் அதை அவர் ஏற்று மகிழ்வார்"என்றார்.முனிவர்கள் "அது ஏன் அவர் சம்பங்கிப் பூவை ஏற்பதில்லை"என்றனர்.லோமஹர்ஷன் கூற ஆரம்பித்தார். ராம, லட்சுமணர்கள் சீதையை அழைத்துக் கொண்டு வனவாசம் சென்றனர்.அவர்கள் காட்டில் இருக்கும் போது தசரதன் இறந்த செய்தி அவர்களுக்கு எட்டிற்று.உடன் ராமன் லட்சுமணனிடம் அருகில் இருக்கும் கிராமம் சென்று சிரார்த்தம் செய்ய தேவையானப் பொருள்களை பெற்று வரச் சொல்லி அனுப்பினார்.லட்சுமணன் சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததாலும், உச்சி நேரத்தில் சிரார்த்தம் செய்து முடிக்க வேண்டும் என்பதாலும் ராமன், லட்சுமமணனைத் தேடிச் சென்றார்.இருவருமே நீண்ட நேரம் வராததாலும்..உச்சி காலம் நெருங்கியமையினாலும் சீதாவே சிரார்த்தத்தை செய்து முடிக்கச் சென்றாள்.பால்கு நதியில் குளித்து விட்டு,ஒரு விளக்கை ஏற்றி, பக்கத்தில் இருந்த சம்பங்கிச் செ

வாயு புராணம் (சிவ புராணம்) - 7

திரிபுரத்தின் அழிவு -------------------------- தாரகாசுரனின் மைந்தர்களாகிய வித்யுனமாலி,தாரகாட்சன்,வீர்வயனா ஆகிய மூவரும் கடும் தவம் செய்தனர்.ஒரே காலில் நின்றனர்.நீரின் இருந்தும், தலை கீழாக நின்றும் வருடக்கணக்கில் தவம் செய்தனர்.தவத்தின் முடிவில் எதிர்ப்பட்ட பிரம்மனிடம் தாங்கள் சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டினர்.அப்படி ஒரு வரத்தைத் தர  தனக்கு ஆற்றலில்லை என பிரம்மன் கூறியதும்,அப்படியானால் தங்கம், வெள்ளி,இரும்பு ஆகியவற்றில் ஆன மூன்று கோட்டைக  அமைத்துக் கொண்டு தாங்கள் ஆயிரம் ஆண்டுகள் அவற்றுள் வாழ வேண்டும் என்றும்,அதன்பின் மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டையில் அடங்கி பலம் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டனர்.மேலும் யர தன்னை அழிக்க வந்தாலும் ஒரே அம்பை மட்டும் பயன்படுத்தி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இந்த மூன்று கோட்டைகளை அழித்தால் அதை ஏற்பதாகவும் கூறினர். பிரம்மன் தந்த வரத்தின் படி மூன்று கோட்டைகளை அமைத்து ஆயிரக்கணக்கான தைத்திய்ரகள் அவற்றுள் வாழ வழி செய்தனர்.பல்லாண்டுகள் கழிந்து,அவர்கள் சிவ பூஜை செய்வதை மறந்து அகங்காரம் மிக்கவர்களாக தங்களை யாரும் அழிக்க முடியாது என்ற காரணத்தால் தவறான வழிகளில் 

வாயு புராணம் (சிவ புராணம் ) - 6

 சிவ பார்வதி திருமணம் ----------------------------------------- கயிலையில் இருந்த சிவன் சப்தரிஷிகள் என சொல்லப்படும் ஏழு முனிவர்களை அழைத்து இமவானிடம் சென்று அவளது மகளான பார்வதியை தான் மணக்க விரும்புவதாகச் சொல்லுமாறு பணித்தான்.மிக்க மகிழ்ச்சி கொண்ட முனிவர்கள் இமவானிடம் சென்று விஷயத்தைக் கூர அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான்.திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது. திருமணத்தன்று முனிவர்கள், யோகிகள்,ரிஷிகள்,கந்தர்வர்கள்,அப்சரஸ்கள்,தேவர்கள்,திக்பாலர்கள் ஆகியவர்களும், திருமால், நாரதர்,பிரம்மன் ஆகியோரும் வந்து கூடினர்.பார்வதியின் தாயாகிய மேனகைக்குக் தன் மருமகனாகிய சிவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே வந்தவள்..கந்தர்வர்களின் தலைவனாகிய விஸ்வவசு அழகாக இருந்ததால் அவன் தான் மருமகன் என நினைத்தாள்.நாரதர், "இல்லை" என்று சொன்னதும் அவனைவிட அழகனான குபேரனைப் பார்த்தாள்.அழகில் சிறந்த வருணன்,அக்னி,இந்திரன்,சந்திரன், சூரியன்,பிரம்மன், பிரகஸ்பதி,விஷ்ணு என ஒவ்வொருவராகப் பார்த்து ..ஒருவரோடு ஒருவர் அழகாய் இருப்பதால்..இவர்தான் மாப்பிள்ளையோ என சந்தேகப்பட்டாள்.நாரதர், "இவர

வாயு புராணம் (சிவ புராணம் ) -5

 பார்வதியின் தவம் ----------------------------- சிவபெருமானிடம் மனதைப் பறி கொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்துவிட்டதால்..என்ன செய்வது? என அறியாது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.அப்பொழுது நாரதர் வந்து"அம்மா! நான்முகனும்,விஷ்ணுவும் கூட சிவனைப் பார்க்க முடியாது. நீங்கள் முன்னர் செய்த தவத்தைவிட கடுமையான தவம் மேற்கொண்டால் அவரை மணக்கலாம்.எனவே நீங்கள் "கௌரிசிகரம்"என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்"என்று கூறினார். பார்வதியும், தன் தாய்,தந்தை அனுமதி பெற்று தம் அணிகல், ஆடைகள் அனைத்தும் துறந்து மரவுறி உடுத்தி கௌரிசிகரம் மலையுச்சிச் சென்று தவம் இருந்தாள்.வெயில், மழை,குளிர், பனி ஆகிய எதைக் கண்டும் துவளாது தவத்தை மேற்கொண்டாள்.அவள் தவத்திற்கு அஞ்சி அங்கிருந்த கொடிய விலங்குகள் அப்பால் சென்று விட்டன.தேவர்கள் அனைவரும் கூடி, சிவனிடம் சென்று, "ஐயனே! பார்வதியின் கடும் தவத்திற்கு பரிசாகத் தாங்கள் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் "என்றனர். அதற்கு இணங்க சிவன், அந்தண வேடம் பூண்டு பார்வதியின் பர்ணசாலைக்குச் சென்றார்.அந்தணரைக் கண்ட பார்வதி,அவருடைய பாதங்களுக்கு மலரிட்டு வழி பட்டாள்

வாயு புராணம் (சிவ புராணம்) - 4

 தாரகாசுரன் கதை --------------------------- தாரா என்ற அரசனுக்கு தாரகன் என்ற மக்ன பிறந்தான்.அவன் தேவர்களை வெல்ல வேண்டும் என கடும் தவத்தில் இருந்தான்.ஒரு கால் கட்டைவிரலை ஊன்றிக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே ,தண்ணீர் மட்டும் பருகி தவம் இருந்தான்.பின், தண்ணீரும் குடிக்காது..காற்றை மட்டும் உட்கொண்டு தவம் இருந்தான்.நீரின் நடுவே நின்றும்,பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் தவமிருந்தான்.ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி தவம் செய்தான். இறுதியில். பிரம்மன் தோன்றி, அவன் தவத்தை மெச்சி, அவனுக்கு என்ன வேண்டும்?எனக் கேட்டார். "சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக்கூடாது.என்னளவு பலமுடைய மற்றொருவரை பிரம்மா படைக்கக் கூடாது"என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.சிறிது காலத்தில் தேவர் உலகம் உட்பட அனைத்து உலகங்களையும் எரித்து தேவர்களையெல்லாம் தனக்கு அடிமை ஆக்கினான்.நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மன், "நான் கொடுத்த வரத்தைத் திரும்பப் பெற முடியாது.மகாதேவ்ன இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார்.பார்வதியும் தனியே தவமிருக்கிறார்.இவர்கள

வாயு புராணம் (சிவ புராணம் ) - 3

 பிரபஞ்ச தோற்றம் -------------------------------- எங்கும் நிரம்பியிருந்த நீரில் விஷ்ணு ஒரு மிகப் பெரிய முட்டையை உண்டாக்கினார்.பின், விஷ்ணு மிகப் பெரிய வடிவெடுத்து அம்முட்டைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.இதனிடையே பிரம்மன் தியானத்தின் மூலமாக கர்தமன்,தட்சன்,மரீச்சி ஆகிய முனிவர்களை உண்டாக்கினான்.மரீச்சியின் பிள்ளை காய்ஸ்பன் தட்சனின் 60 பெண்களில் 13 பேரை மணந்து கொண்டான்.காசிபனின் பிள்ளைகளும்,தட்சனின் மற்ற பெண்களும் ஆதித்தகளாகவும், தைத்தியர்களாகவும்,தானவர்களாகவும்,மரங்களாகவும்,பறவைகளாகவும், பாம்புகளாகவும் ஆயினர். ருத்ரன் என்ற பெயரில் தோன்றிய சிவன், தட்சனின் மகளாகிய சதியைத் திருமணம் செய்து கொண்டார்.ஆனால் ருத்ரனும், தட்சனும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர்.ருத்ரனை தள்ளி வைத்து விட்டு தட்சன் யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தான்.சதியை அழைக்காவிடினும் அவள் சென்று அதில் கலந்து கொண்டாள்.தட்சன் அவளைப் பேசிய ஏச்சுக்களால் சதி தன் உயிரை விட்டு விட்டாள்.இதனால் கோபமடைந்த ருத்ரன் தன்னுடைய துணைவனை அழைத்து தட்சனின் யாகத்தை அழித்து,அவனையும் கொன்றுவிடுமாறுக் கூறினார்.தட்சன் யாகம் அழைக்கப்பட்டு,அங்கு வந்திருந்த தேவர்கள்

வாயு புராணம் (சிவ புராணம்) - 2

 பிரம்ம்னௌம், விஷ்ணுவும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது ஜோதி வடிவமான லிங்கம் ஒன்று வந்து நின்றது.பிரம்மனும், விஷ்ணுவும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, வந்தது யார்? என வியந்தனர். அந்த ஜோதி கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர்ந்தும்,மிகக் கீழேச் சென்றும் காட்சியளித்தது.விஷ்ணு பிரம்ம்னைடம் ,"நாம் சண்டையிடுவதை நிறுத்திக் கொள்வோம்,இந்த விஷயத்தில் நாம் ஆதியையும், அந்தத்தையும் காண வேண்டும்.நான் காட்டுப் பன்றி உருவெடுத்து இதன் அந்தத்தைக் காண்கிறேன்.நீ அன்னப் பறவையாக வடிவெடுத்து..இதன் முடி எங்கிருக்கிற்டஹு எனப் பார்"என்று கூறினார். விஷ்ணுவின் யோசனையைக் கேட்ட பிரம்மன் அன்னப்பறவையாகி மேலே பறந்து சென்றார்.விஷ்ணு ஆண் பன்றி உருவெடுத்து பூமையைத் துளைத்துக் கொண்டு கீழே சென்றார்.அவர்கள் பல காலம் தேடும் பணியில் ஈடுபட்டும் லிங்கத்தைன் அடியையும், முடியையும் காண முடியவில்லை.பிறகு இருவரும் பழைய இடத்திற்கேச் சென்று சிவனைத் துதித்தனர்.அப்போது 5 முகங்களும், 10 கைகளும் கொண்ட லிங்க வடிவில் ஈசன் தோன்றினார்.இவர்களைப் பார்த்து,"பிரம்மனே!விஷ்ணுவே! நீங்கள் இருவரும் என்னில் ஒரு பகுதியாகும்.நாம்

வாயு புராணம் (சிவ புராணம்) - 1

 வாயுபுராணம்..எனப்படும் சிவ புராணம் மிகப் பழமையான புராணங்களில் ஒன்று.இதில் 24000 பாடல்கள் இருப்பதாக ஸ்கந்தம் சொல்கிறது.பதினெட்டு மகா புராணங்களில் இதுவும் ஒன்று.இந்த புராணம் நட்சத்திரங்களை எண்ணுவதில் கிருத்திகியயில் ஆரம்பித்து பரணியில் முடிகிறது.கிமு 550ல் இருந்த கார்காவின் காலத்திலிருந்து அஸ்வினியை முதலாக வைத்து எண்ணும் வழக்கம் ஏற்பட்டதால்,சிவ புராணம் அதற்கும் முற்பட்டது என எண்ண இடமுண்டு.புராணங்களுக்குரிய ஐந்து பொருள்களைப் பற்றி இதுவும் பேசுகிறது. இப்புராணத்தில் காணப்படும் பல பாடல்கள் மார்க்கண்டேய புரானத்திலும் காணப்படுகின்றது.ஸ்கந்த புராணம் இதில் 24000 பாடல்கள் உண்டு எனக் கூறினாலும்,இப்போது நமக்குக் கிடைக்கும் வாயு புராணத்தில் 12000 பாடல்களே உள்ளன.இது நான்கு எரும் பாசுரங்களையும் 112 அதிகாரங்களையும் கொண்டது.  பாகவத யோக்ம பற்றியும் இப்புராணம் பேசுகிறது.இப்புராணத்தில் விஷ்ணுவாகிய தானும்,பிரம்மனும் தெய்வங்கள் என்றாலும் சிவனே எல்லாவற்றிலும் மூலமாக உள்ளார் என்றும்..விஷ்ணூவாகிய தாமும்,பிரம்மனும் சிவனிடத்தில் இருந்தே தோன்றினர் என்றும், விஷ்ணு பிரம்மனுக்குக் கூறுவதாக இப்புராணம் சொல்கிறது.மனித