Posts

Showing posts from December, 2020

விஷ்ணு புராணம் - 24

 பிரளயங்கள் ----------------- மூன்று வகையான பிரளயங்கள் உண்டு.முதலாவது பிரளயம், பிரம்மனின் ஒரு நாள் கழிந்தவுடன் நடைபெறுவதாகும்.இதற்கு நியமித்திக்க பிரளயம் என்று பெயர்.இந்த பிரளயம் தொடங்குவதற்கு முன்னர் நூறு ஆண்டுகள் மழை என்பதே இல்லை..இப்போது விஷ்ணு ருத்ர சொரூபம் எடுத்து ஆறு,கடல் எல்லாவற்றிலும் உள்ள நீரைக் குடித்து விடுவார்.சூரியனு ய கிரணங்களும் தனித்தனியாக ஒரு சூரியன் போலவே இருந்து நிலத்தைக் கொளுத்தும்.இந்த சூரிய கிரணங்கள் இந்த பூலோகத்தை அல்லாமல், யுவர்,புவர்,சுவர் ஆகிய மூன்று லோகங்களையும் கொளுத்திவிடும்.இதன் பிறகு சூரிய மேகங்கள் சூழ்ந்து  நூறு வருடங்கள் வரை விடாது மழை பெய்யும்.மறுபடியும் உல்காம் தோற்றுவிக்கப்படும் வரை விஷ்ணு தண்ணீரிலேயே மிதந்து உறங்கிக் கொண்டிருப்பார். இரண்டாவது பிரளயம், பிரகிருத பிரளயம் எனப்படும்.தாமசம்,ராஜசம்,சத்துவம் ஆகிய மூன்று குணங்களும் தம்முள் அளவொத்து இருப்பது பிரகிருதி எனப்படும்.பிரளய காலத்தில் பிரகிருதி ,பரமாத்மாவிடம் சென்று அடங்கிவிடும்.இதுவே பிரகிருத பிரளயம் எனப்படும். மூன்றாவது பிரளயம்,அத்யதிக பிரளயம் எனப்படும்.ஆதி ஆத்மீகம்,ஆதிதைவிகம்,ஆதிபௌதிகம் என்று சொல்

விஷ்ணு புராணம் - 22

 பிண்டாரகா எனும் க்ஷேத்திரத்தில் கண்வர்,விஸ்வாமித்திரர்,நாரதர் ஆகிய முனிவர்கள் பலர் தங்கியிருந்தனர்.ஆணவம் படைத்த யாதவ இளைஞர்கள் சிலர், கிருஷ்ணன் மகனாகிய சம்பாவிற்கு பெண் வேடமிட்டு அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்றனர்.முனிவர்களிடம், "இப்பெண்ணுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா" எனச் சொல்லுமாறுக் கேட்டனர்.முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் இவர்களின் கேலியியப் பார்த்து, கோபம் அடைந்து.."இது பெண் அல்ல..ஆண்.இவன் உடம்பிலிருந்து ஒரு இரும்பு உலக்கைத் தோன்றப் போகிறது.அந்த உலக்கை யாதவ சமுதாயத்தையே அழிக்கப் போகிறது"என்றனர். பயந்து போன இளைஞர்கள்..அரசன் உக்ரசேனனிடம் சென்று நடந்ததைக் கூறினர்.உரிய காலத்தில் சம்பாவின் உடலிலிருந்து ஒரு உலக்கை வெளியாயிற்று.அரசன் அந்த உலக்கையைப் பொடிப் பொடியாக்கி சமுத்திரக் கரையில் தூவி விட்டான்.முழுதும் பொடி செய்ய முடியாமல்,உலக்கையின் சிறு பகுதி மட்டும் நின்றது.அது பொடியாகவில்லை.அத்துண்டை கடளுக்குள் வீசி ஏரிந்துவிடச் சொன்னான்.கடல் கரையில் தூவப்பட்ட சிறு துகள்கள் மிகக் கூர்மையான ..வலிமையுடைய கோரைகளாக முளைத்தன.அக்கோரைகள் முளைத்த இடத்தில் "ப

23 - கலியுகம்

 கலியுகம் பிறந்து விட்டால் அது எப்படி இருக்கும்? என கேட்க பராசர முனிவர் பதில் சொல்ல ஆரம்பித்தார். தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள வர்ணாஸ்சிர தர்மங்கள் கலியுகத்தில் பின்பற்ற மாட்டாது. கடவுளை ஒருவரும் வழிபடமாட்டார்கள் குரு-சிஷ்யன் உறவு மறையும் தடி எடுத்தவ்ன எல்லாம் தண்டல்காரன் ஆவான் பெண்கள் கூந்தலை அழகு செய்வதிலேயே  காலம் தள்ளுவர் பணம் பாதாளம்வரை பாயும்.பணத்தை பிறர் பொருட்டு செலவு செய்யாமல்..செல்வந்தர்கள் தன் நலனுக்கே பயன்படுத்துவர். பணத்தை அறவழிகளில் சம்பாதிக்காது தீயவழிகளிலேயே சேர்ப்பார்கள் ஆண்கள் சாப்பிடும் முன் குளிக்கக்கூட மாட்டார்கள் ஆண்களும், பெண்களும் குட்டையாகிவிடுவர் பெண்கள் கணவனுக்குப் பணிந்து நடக்க மாட்டார்கள் அரசர்கள் குடிமக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். அதற்கு பதிலாக வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதையேத் தொழிலாகக் கொள்வார்கள் இளமையிலேயே முதுமை அடைவார்கள் யாரும் விஷ்ணுவை வணங்க மாட்டார்கள் சத்திய யுகத்தில் பத்து ஆண்டுகள் தவம் செய்து பெரும் பயனை, திருதாயுகத்தில் ஒரு ஆண்டிலும், துவாபர யுகத்தில் ஒரு மாதத்திலும்..கலியுகத்தில் ஒரே நாளிலும் தவம் செய்து அதன் பலனை அடைய முடியும்.கலிய

விஷ்ணு புராணம் - 21

 சம்பாவின் திருமணம் --------------------------------------  கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனாகிய சம்பா,துரியோதனனின் மகளைக் களவாடி மணம் புரிந்துகொண்டதால் கௌரவர்களால் கைது செய்யப்பட்டான்.இதை அறிந்த யாதவர்கள் கௌரவர்களின் மேல் போர் தொடுக்க விரும்பினர்.அதைத் தடுத்த பலராமன் தான் தனியாகச் சென்று , காரியத்தை முடித்து வருவதாகக் கூரிவிட்டு அஸ்தினாபுர எல்லையினை அடைந்தான். பலராமன் வருவதைக் கேள்வியுற்ற பீஷ்மர்,கர்ணன்,துரியோதனன் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வந்து அவனை வணங்கி வரவேற்றனர்.உபசரனை முடிந்த பின்னர் பலராமன் "சம்பாவை விடுவித்துத் தன்னுடன் அனுப்ப வேண்டும்" என யாதவர்கள் விரும்புவதாகக் கூறினான்.  இதைக் கேட்ட கௌரவர்கள் கடுங்கோபம் கொண்டனர்."யாதவர்கள் எங்களுக்குச் சமமானவர்கள் இல்லை.எங்கள் தரத்திற்கு மிகவும் கீழாக உள்ள அவர்கள் எங்களை இவ்வாறு கேட்பது, வேலைக்காரன் தன் முதலாளியைப் பார்த்து ஏவுவது போல உள்ளது.பலராமரே..நீர் திரும்பிச் செல்லலாம்" என்று அவர்கள் கோபத்துடன் சொல்லிவிட்டு , போய் விட்டனர். அவர்கள் சென்ற பின் பலராமன் நகர எல்லைக்குள் காலடி எடுத்து வைத்த பலராமன், தன் கலப்பையை பூமியில்

விஷ்ணு புராணம் - 20

 நரகாசுரனை வென்ற கிருஷ்ணன்,இந்திரனின் நகரமான அமராவதிக்கு, சத்யபாமாவுடன் சென்றான்.தேவர்கள் வந்து அவர்களை வழிபட்டனர்.இந்திரனின் தாயாகிய அதிதியிட்ம் இருந்து நரகாசுரன் பறித்துச் சென்ற காதணிகளை கிருஷ்ணன் அவளிடம் தந்தான்.சத்யபாமாவையும், கிருஷ்ணனையும் அவள் ஆசிர்வதித்தாள். அமராவதியில் இருந்த பாரிஜாத மரத்தைப் பார்த்து அதை துவாரகைக்கு வேரோடு தூக்கிச் செல்ல கிருஷ்ணன் விரும்பினான்.மரத்தை வேருடன் பறித்து கருடனின் முதுகில் ஏற்றினான்.அந்த மரம் இந்திரனின் மனைவி சச்சிக்கு சொந்தமானதாகும்.கிருஷ்ணனையும், சத்யபாமாவையும் சாதாரண மனிதர்கள் என நினைத்த அவள்..தேவர்களையும்,இந்திரனையும்.. கிருஷ்ணனுடன் போரிட வைத்தாள்.தேவர்கள்,குபேரன்,அக்னி,எமன், வருணன்.மிருத்துகள்,அஸ்வினிக்கள் ஆகிய அனைவரும் தோற்று ஓடினார்கள்.இந்திரன் வஜ்ராயுதத்தை கிருஷ்ணன் மீது ஏவினான்.கிருஷ்ணன் சக்கரத்தை ஏவாது, தன் வலது கையால் வஜ்ராயுதத்தியப் பிடித்துக் கொண்டான்.இதைக் கண்ட இந்திரன், கிருஷ்ணன் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.பாரிஜாத மரத்தையும், வஜ்ராயுதத்தையும் திருப்பிக் கொடுத்தான் கிருஷ்ணன்.ஆனால், இந்திரனோ வஜ்ராயுதத்தை மட்டும் வாங்கிக் கொ

விஷ்ணு புராணம் - 19

 காளிங்க நர்த்தனம் ------------------------ காளிங்க நர்த்தனம் கதையை விஷ்ணு புராணம் வேறு மாதிரி சொல்கிறது.முன்னொரு காலத்தில் கருடனால் கொல்லப்பட்ட காளிங்கன் என்ற பாம்பு..கடலை விட்டு விட்டு யமுனையில் குடியிருந்தது.யமுனையின் ஒரு பகுதியில் காளிங்கனும்,அதன் குடும்பமும்,உறவினர்களும் ஒரு மடுவில் வசித்து வந்தனர்.யமுனையின் அப்பகுதி நீர் மட்டும் முழுதும் விஷமாக மாறிவிட்டது.இந்நிலையில் கிருஷ்ணன் நீருக்குள் புகுந்தான்.காளிங்கனும், மற்ற பாம்புகளும் கிருஷ்ணனின் உடலை சுற்றிக் கொண்டு அவனை கடிக்கத் தொடங்கின.நந்தன்,யசோதை, பலராமான் ஆகியோர் இதைப் பார்த்து "கிருஷ்ணா..விளையாடியது போதும்..விரைவில் அவற்றை அழித்து விட்டு வா" என்றனர். உடன் கிருஷ்ணன் எல்லா பாம்புகளையும் அழித்து..காளிங்கனின் தலையில் ஏறி நடனமாடி, அதன் உயிர் போகும் நிலைக்குக் கொண்டு வந்தான்.காளிங்கனும், அவன் மனைவிமார்களும் வேண்டிக் கொள்ள, கிருஷ்ணன் அவர்களை மன்னித்து,"இனியும் யமுனையில் நீங்கள் தங்கக் கூடாது.கடலுக்கு சென்று விடுங்கள்"என ஆணையிட்டான். கிருஷ்ணன் காளிங்கனின் படத்தின் மேல் ஆடியதால், அந்த பாதத்தின் சின்னம் எல்லா நாகங்கள்

விஷ்ணு புராணம் - 18

 சந்தனுவின் கதை ------------------ குரு வம்சத்தில்  வந்த பிரதிபாவின் மகனாகிய சந்தனு இரண்டாவது மகனாகப் பிறந்தும் முதல் மகனாகிய தேவபி காட்டிற்கு சென்று விட்ட படியால் அரசுப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.சந்தனு கங்கையையும், சத்தியவதியையும் மணந்தர.கங்கையின் மகனாக பீஷ்மர் பிறந்தார்.சத்தியவதியின் வயிற்றில் விசித்திரவீரியனும்,சித்ராங்கதனும் பிறந்தனர்.விசித்திரவீரியன் மரபில் திருதிராஷ்டிரனும், பாண்டுவும் தோன்றினர்.திருதிராஷ்டிரன் புதல்வர்கள் துரியோதனன் முதல் நூறுபேர் ஆவர்.பாண்டுவின் புதல்வர்கள் ஐவர்.அவர்கள் பஞ்ச பாண்டவர்கள் ஆவர். , கலியுகத்தின் தோற்றம் -------------------------------- விஷ்ணு புராணத்தில் நான்காம் பகுதி கலியுகத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளை விரிவாகத் தெரிவிக்கிறது.பத்மநந்தன் என்ற மன்னன் தோன்றி,சத்திரியர்கள் அனைவரையும் இரண்டாவது பரசுராமனைப் போல ஒழித்து விடப் போகிறான்.அவனுக்கு எட்டு பிள்ளைகள் தோன்றுவர்.இவர்கள் நூறு ஆண்டுகள் ஆட்சி புரிவர்.ஆனால் கௌடில்யன் எனும் அந்தணன் இவர்களைக் கொன்று விடுவான்.அதன் பிறகு மௌரியர்கள் எனப்படுபவர் ஆள்வர்.சந்திரகுப்தனையே கௌடில்யன் அரசனாக நியமிப்பான்.மௌ

விஷ்ணு புராணம் - 17

 சயமந்தக மணியின் கதை -------------------------------------- சத்தியபாமாவின் தந்தையாகிய சத்ரஜித் கடற்கரையில் இருந்து கொண்டு சூரியனை பிரார்த்தித்தான்.ஆழ்ந்த அந்த பிரார்த்தனையில் மகிழ்ந்த சூரியன் சத்ரஜித் முன் தோன்றினான்.அவன் கண்களைத் திறந்தாலும்,சூரியனின் ஒளியால் கண்கள் மீண்டும் மூடியது.அவன் சூரியனைப் பார்த்து, "ஐயனே! உங்கள் கழுத்தில் ஏதோ ஒளி பொருந்தியதை அணிந்துள்ளீர்கள்.அந்த ஒளியின் காரணமாகவே என்னால் உங்களை தரிசிக்க முடியவில்லை.உம்மை தரிசிக்க அருள் புரிய வேண்டும்" என வேண்டினான். உடனே சூரியன் தன்கழுத்தில் இருந்த சயமந்தக மணியைக் கழட்டிவிட்டான்.இப்போது சூரியனைக் கண்டு மகிழ்ந்த சத்ரஜித் அவரைத் துதித்தான்.சூரியனும் "உனக்கு என்ன வேண்டுமோ..அதனைக் கேள்" என்றான்.சத்ரஜித், "உங்களது சயமந்தக மணியை எனக்குத் தர வேண்டும்" என்றான்..சூரியனும் ஏதும் பேசாது  அம்மாலையைக் கழட்டிக் கொடுத்து விட்டான்.அதை அணிந்து கொண்டு சத்ரஜித் துவாரகையில் நுழைந்தான்.அவன் போட்டிருந்த மாலையின் காரணமாக மிகப் பெரிய ஒளி வீசியது.மக்கள் அவனை சூரியன் என்றே எண்ணி விட்டனர். வீட்டிற்கு கொண்டு வந்து அந்த மணி

விஷ்ணு புராணம் - 16

 விசுவாமித்திரர்...ஜமதக்கினி கதை --------------------------------------------------------- ஜானுஷன் மகனான கதி என்ற அரசனுக்கு சத்தியவதி என்ற மகள் பிறந்தாள்.ரிஷிகா என்ற முனிவர்சத்தியவதியை மணந்து கொள்ள விரும்பினார்.ஒரு வயதான முனிவருக்கு தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத கதி, அதை நேரடியாக முனிவரிடம் சொல்லாமல்,உடம்பு முழுதும் வெள்ளையும், கரிய நிறமுடைய காதுகளும் உடைய ஆயிரம் குதிரைகளைப் பரிசாகத் தந்தால், தன் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினான் முனிவரால் அப்படிப்பட்ட குதிரைகளை சேர்க்க முடியாது எனும் எண்ணத்தில்.ஆனால்,முனிவரோ வருணனை வேண்டி அது போன்ற ஆயிரம் குதிரைகளைப் பெற்றார்.குதிரைகளைக் கண்ட மன்னன் வேறு வழியின்றி தன் மகளை ரிஷிகாவிற்கு மணமுடித்தான். சத்யவதி தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டுமென முனிவரை வேண்டினாள் அவரும் ஒரு யாகம் செய்து அதில் கிடைத்த பாயசத்தை சத்யவதியிடம் தந்தார்.அதைப் பார்த்த சத்யவதியின் தாயார் தனக்கும் ஒரு ஆண்மகன் வேண்டும் என மருமகனிடம் வேண்டினாள். மறுபடியும் ஒரு கிண்ணம் பாயசத்தை வரவழைத்து முனிவர் இரண்டு கிண்ணங்களியயும் சத்தியவதியிடம் கொடுத்து..இது உனக்கு..இது உன் தாய்க்கு எங்க கொடுத்து வி

விஷ்ணு புராணம் - 15

 ஜனக மன்னனின் கதை -------------------------------------- இட்சுவாகுவின் மகனாகிய நிமி ஒரு யாகம் செய்தான்.அது ஆயிரம் வருடங்கள் நடந்தது.அதற்கு வசிட்டனை ஆச்சார்யனாக வர வேண்டும் என வேண்டினான்.அச்சமயம் ஐந்நூறு வருடங்கள் நடைபெறும் யாகம் ஒன்றினை இந்திரன் தொடங்கப் போவதாகவும், அதற்கு தலைவனாக தான் இருக்க வேண்டியிருப்பதால்,அது முடிந்த பின் நிமியின் யாகத்தைத் தான் ந்டத்தித் தருவதாக வசிட்டன் கூறினான்.அதற்கு ஏதும் பதில் கூறாது நிமி சென்று விட்டான். நிமி ஐந்நூறு ஆண்டுகள் வசிட்டனுக்காகக் காத்திருந்து யாகம் செய்ய விரும்பவில்லை.கௌதம முனிவரைத் தலைவனாகக் கொண்டு,மற்ற முனிவர்களையும் வைத்துக் கொண்டு நிமி யாகத்தை நடத்தினான்.இந்திரனின் யாகத்தை முடித்து விட்டு வசிட்டன், நிமியின் யாகத்தைத் தொடங்க வசிட்டன் வந்தான்.கௌதமரை தலைவனாக் கொண்டு யாகம் ந்டைபெற்றுக் கொண்டிருப்பதை வைஸ்ட்டன் கண்டான்.தன்னைக் கேட்டு,தான் சொன்னபடி நடக்காத நிமி ,தன்னை அவமதித்து விட்டதாக எண்ணி கோபத்தில் நிமியின் பூத உடல் இல்லாமல் போகட்டும் என சாபமிட்டான் வசிட்டன்.நிமியும் வசிட்டனின் கோபம் நியாயமற்றது என நினைத்து வசிட்டனின் பூத உடல் இல்லாமல் போகட்டும

விஷ்ணு புராணம் - 14

 சகர மன்னன் கதை ------------------------- மாந்தாதாவின் பரம்பரையில் வந்தவன் புருட்சா எனும் அரசன்.அவன் காலத்தில் நாகலோகத்தில் வசிக்கும் நாகர்களின் மாணிக்கங்களைத் திருடுவத்ற்காக கந்தர்வர்கள் நாகலோகத்தில் புகுந்து முற்றுகையிட்டனர்.கந்தர்வர்களை எதிர்க்கமுடியாத நாகர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.விஷ்ணுவும், "உலகை ஆளும் புருட்சாவை அழையுங்கள்.அவனது உடம்பில் நான் புகுந்து கொண்டு கந்தர்வர்களை அழிக்கிறேன்" என்றார்.நாகர்தள், நர்மதா என்ற பெண்ணை புருட்சாவிடம் அனுப்பினர்.அவள் சென்று புருட்சாவை நாகலோகத்திற்கு அழைத்து வந்தாள்.புருட்சாவின் உடலில் புகுந்து விஷ்ணு கந்தர்வர்களைத் தோற்கடித்தார்.புருட்சாவை அழைத்துக் கொண்டு வந்த  நர்மதாவை நாகர்கள் பாராட்டினர்.மேலும் அவளை காலை, மாலை வணங்குபவர்களை விஷம் தீண்டாது, பாம்புகளும் அவர்களைக் கடிக்காது என்ற வரத்தைப் பெற்றாள்.  அந்த பரம்பரையில் வந்தவன் பகு என்ற மன்னன்.அவன் மைந்தன் சகரன் ஆவான்.பெருவலி படைத்தலைவனாகிய சகரன் உலகம் முழுதும் ஆண்டு ஒரு அசுவமேயாகம் செய்ய எண்ணினான்.அவன் இரு மனைவிகளில் ஒருத்திக்கு ஒரு மகனும் மற்றொருத்திக்கு அறுபதனாயிரம் மகன்களும் இருந்தன

விஷ்ணு புராணம் - 13

 ககுத்தனின் முன்னோர் ----------------------------- மனுவின் தும்மலில் பிறந்தவன் இட்சவாகு.இட்சவாகுவின் மகன் பிரஞ்செயன்.ஒருமுறை தேவர்களும்,அசுரர்களும் கடும் போர் புரிந்தனர்.போரில் வெல்ல முடியாத தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர்.அவர்களிடம் விஷ்ணு..தான் பரஞ்செயன் என்ற பெயரில் பூமியில் அவதரித்திருப்பதாகவும்..அவ்வாறு அவதரித்த பரஞ்செயன் தலைமையில் தேவர்கள், அசுரர்களை வெல்ல முடியும் என்றும் கூறினார். தேவர்கள் பரஞ்செயனிடம் வந்து தங்களுக்குத் தலைமையேற்று போரிட வேண்டுமென வேண்டினர்.அதற்கு பரஞ்செயன், "இந்திரனின் தோளில் ஏறிக்கொண்டுதான் போரிட வேண்டும்" என்றான்.அதற்கு  தேவர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்குத் தான் தலைமைத் தாங்கி போரிடத் தயார் என்றான்.உடன் இந்திரனும் காளை உருவெடுக்க, காளையின் மீது அமர்ந்து போரிட்டு அசுரர்களை வென்றான் பரஞ்செயன்.தோள் என்ற பொருளுடையது "ககுத்" எனும் சொல்.தோளின் மீது அமர்ந்து போரிட்ட்டதால் பரஞ்செயன் அன்று முதல் ககுத்தன் என அழைக்கப்பட்டான். ககுத்தனின் வழியில் வந்தவன் யுவனசா என்ற அரசன்.நீண்டநாள் குழந்தை பேறு இல்லாததால்,அதற்கு வேண்டி யாகம் செய்யுமாறு முனிவர்களிடம் க

விழ்ணு புராணம் - 12

 சடங்குகள் -------------------- ஒரு குழந்தை பிறந்த போதும்,ஒருவன் மரித்த போதும் வெவ்வேறு வகையான சடங்குகள் செய்யப்படுகின்றன.குழந்தை பிறந்த பத்தாம் நாள் தந்தை குழந்தைக்குப் பெயர் சூட்டுகின்றான். திருமணங்கள் எட்டு வகியப்படும்.அவை ,பிரம்மம்,தெய்விய,அர்ஷ,பிரஜாபத்ய,அசுர,காந்தர்வ,ராட்சச,பைசாச என்பவை ஆகும்.ஒவ்வொரு வர்ணத்திற்கும் குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் குறிக்கப் பட்டுள்ளன.ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் சில கடமைகள் வகுக்கப் பட்டுள்ளன.கடவுளை வணங்குதல்,பசு, பிராமணர்கள்,முனிவர்கள்,வயது முதிர்ந்த ஆசிரியர் ஆகியோரை வணங்க வேண்டும்.திருடுதல்,பொய் பேசுதல்,பிறரை நோகச் செய்தல் ஆகியவற்றை செய்யக் கூடாது.பிறர் குற்றம் கூறக்கூடாது.பிறரது செல்வம் கண்டு பொறாமைப் படக் கூடாது.தீயவர் சேர்க்கை கூடாது.தீப்பிடித்த வீட்டிற்குள்ளோ,மரத்தின் உச்சியின் மீதோ நுழையவோ/ஏறவோக் கூடாது.வாய் பொத்திக் கொட்டாவி விட வேண்டும்.கொடிகளையும்,வணக்கத்துக்குரிய தெய்வங்களின் நிழல்களையும் மிதிக்கக் கூடாது.வீட்டிலும்.காட்டிலும் தனித்து வாழக்கூடாது.கொடிய விலங்குகள் அருகே செல்லக் கூடாது.வீட்டை விட்டு புறப்படும் முன் வீட்டுத் தலைவன் தெய்வம்,

விஷ்ணு புராணம் - 11

 நான்கு வர்ணங்கள் ------------------------- விஷ்ணு பக்தன் என்பவர்கள் விஷ்ணுவினால் நியமிக்கப்பட்ட வர்ணாசிரம  தர்மங்களைத் தவறாமல் கடை பிடிப்பர்.நான்கு வர்ணங்கள்..பிராமணர், சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்பவை ஆகும். பிராமணர் கடமைகள் - கற்றல், கற்பித்தல்,வேட்டல், வேட்பித்தல், ஈதல்,ஏற்றல் என் ஆஅறும் ஆகும். சத்திரியர் கடமைகள் - கற்றல்,வேட்டல், வேட்பித்தல்,ஈதல் இவற்றுடன் தனுர் வேதம் அறிந்து நாட்டைக் காக்கப் போர் புரிதல் .அரசனுடைய கடமை தீயவர்களைத் தண்டிப்பதும்,நல்லவர்களைக் காத்தலும் ஆகும். வைசியர்கள் கடமை - விவசாயம், ஆடு மாடு வளர்த்தல்,வாணிபம் என்பவற்றுடன் கற்றல்,யாகம் செய்தல்,ஈதல் என்பவற்றைச் செய்ய வேண்டும் சூத்திரர்கள் கடமை - ஏனைய மூவருக்கும் தொண்டாற்றுதல்..தவிர்த்து வாணிபம்,கைத்தொழிலிலும் ஈடுபடுதல். நால்வருக்கும் பொதுவாக சில கடமைகள் உண்டு..அவை..பிறரிடம் அன்பு பாராட்டுதல்,தூய்மையுடன் இருத்தல்,கடினமாக உழைத்தல்,சத்தியத்தைக் கடைபிடித்தல்,நட்புப் பாராட்டல்,துன்பத்தைப் பொறுத்தல்,கொள்முதல் ஆகியவை ஆகும். இவற்றையெல்லாம் பிரம்மச்சரியம்,கிரஹஸ்தம்,வானப்ரஸ்தம்,சந்நியாசம் என நான்கு நிலைகளையும் ஒருவன் மேற

விஷ்ணு புராணம் - 10

 புராணங்கள் தோன்றிய கதை ------------------------------------ விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியில் இந்தப் புராணமும் ,ஏனைய புராணங்களும் தோன்றிய வரிசை சொல்லப் படுகிறது.புராண சம்ஹிதை என்ற மூல நூலை வேதவியாசர் தன் மாணவனாகிய லோபஹர்ஷனுக்குக் கற்றுக் கொடுத்தார்.லோபஹர்ஷனிடம் பயின்ற , சுமதி,அக்னிவர்சா,மைத்ரேயி,சவர்னி,அக்ரிதவர்னா,சம்சவியனா ஆகிய ஆறு சீடர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட புராண சம்ஹிதையிலிருந்து ஒவ்வொரு புராணத்தை விரிவாக சொல்லினர். இந்த அடிப்படையில் தான் விஷ்ணு புராணமும் சொல்லப்பட்டது.பத்ம புராணத்தை அடுத்து வருகிற விஷ்ணு புராணம், விஷ்ணுவின் சிறப்புகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது.இப்புராணத்தின்படி ஞானம் பதினான்கு வகைப்படும்.அவை நான்கு வேதங்கள்,ஆறு வேத அங்கங்கள்,மீமாம்சை,நியாயம்,புராணம்,தர்மசாத்திரம் ஆகியவை ஆகும்.இந்த பதினான்கோடு, ஆயுர்வேதம்,தனுர் வேதம்,சங்கீதம்,அர்த்த சாஸ்திரம் ஆகிய நான்கையும் சேர்த்து பேசுவதுண்டு.ரிஷிகளுள் பிரம்ம ரிஷிகள்,தேவ ரிஷிகள்,ராஜ ரிஷிகள் என்று மூன்று வகையினர் உண் டு.  யமன் கதை  ------------------ உலகத்தில் இறந்தவர்களையெல்லாம் கொண்டு வந்து அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்