விஷ்ணு புராணம் - 16

 விசுவாமித்திரர்...ஜமதக்கினி கதை

---------------------------------------------------------

ஜானுஷன் மகனான கதி என்ற அரசனுக்கு சத்தியவதி என்ற மகள் பிறந்தாள்.ரிஷிகா என்ற முனிவர்சத்தியவதியை மணந்து கொள்ள விரும்பினார்.ஒரு வயதான முனிவருக்கு தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத கதி, அதை நேரடியாக முனிவரிடம் சொல்லாமல்,உடம்பு முழுதும் வெள்ளையும், கரிய நிறமுடைய காதுகளும் உடைய ஆயிரம் குதிரைகளைப் பரிசாகத் தந்தால், தன் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினான் முனிவரால் அப்படிப்பட்ட குதிரைகளை சேர்க்க முடியாது எனும் எண்ணத்தில்.ஆனால்,முனிவரோ வருணனை வேண்டி அது போன்ற ஆயிரம் குதிரைகளைப் பெற்றார்.குதிரைகளைக் கண்ட மன்னன் வேறு வழியின்றி தன் மகளை ரிஷிகாவிற்கு மணமுடித்தான்.


சத்யவதி தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டுமென முனிவரை வேண்டினாள் அவரும் ஒரு யாகம் செய்து அதில் கிடைத்த பாயசத்தை சத்யவதியிடம் தந்தார்.அதைப் பார்த்த சத்யவதியின் தாயார் தனக்கும் ஒரு ஆண்மகன் வேண்டும் என மருமகனிடம் வேண்டினாள். மறுபடியும் ஒரு கிண்ணம் பாயசத்தை வரவழைத்து முனிவர் இரண்டு கிண்ணங்களியயும் சத்தியவதியிடம் கொடுத்து..இது உனக்கு..இது உன் தாய்க்கு எங்க கொடுத்து விட்டு காட்டிற்குச் சென்றார். 


அவர் சென்ற பின்னர் சத்தியவதியின் தாய்க்கு ஒரு சந்தேக்ம  வந்தது.யாருடைய பாயசம் சிறந்த புத்ல்வனைத் தரும் என தோன்ற மகளிடம், "நான் சத்திரியன் மனைவி.என் வயிற்றில் பிறக்கும் மகன் இவ்வுலகை ஆளப்போகிறவன்.நீயோ பிராமணன் மனைவி.உன் பிள்ளை சாதுவாகத் தவம் செய்ய வேண்டியவன்.ஆகவே உன்னுடைய பாயசத்தை எனக்குக் கொடுத்து விட்டு..என் பாயசத்தை நீ அருந்து "என்றாள். சத்தியவதியும் "சரி" என்று பாயசக் கிண்ணத்தை மாற்றிக் கொண்டாள். காடு சென்று திரும்பிய முனிவரிடம், சத்தியவதி நடந்ததைக் கூறினாள். முனிவரும் வருத்ததுடன்.."உன் தாயின் மனதில் உதித்த எண்ணம் என் மனதிலும் தோன்றியது.அகவே சிறந்த சத்திரியனாகிய இலக்கணப்படி ஒரு ஆண்மகன் பிறக்க வேண்டுமென உன் தாய்க்கு பாயசத்தைத் தயாரித்தேன்.துரதிருஷ்டவசமாக நிலைமை மாறிவிட்டது" என்றார்.


பாயசம் மாறியதால் சத்தியவதி வயிற்றில் ஜமதக்கினியும், அவள் தாய் வயிற்றில் விசுவாமித்திரரும் தோன்றினர்.தன் மகனைவிட தன் பேரனின்  வழித் தோன்றல்கள் சிறந்த   வீரர்களாக இருக்க வேண்டும் என அவன் தாய் விரும்பியதால் அவள் பேரனாகிய ஜமதக்கினியின் மகன் பரசுராமன் பிராமணனாகப் பிறந்தும் சத்திரியர்களை ஒழிக்கும் வீரமுடையவனாக இருந்தான்.  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11