Posts

Showing posts from November, 2020

விஷ்ணு புராணம் - 9

 யாக்ஞவல்கியர் கதை ------------------------------- ஒரு காலத்தில் அனைத்து ரிஷிகளும் ஓரிடத்தில் கூடினர்.பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருந்ததால் ,அனைவரும் அக்கூட்டத்திற்கு வர வேண்டும்,அப்படி யாராவது வராமல் இருந்து விட்டால்..எட்டாவது நாள் ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் அவர்களைச் சென்றடையும் என ரிஷிகள் அறிவித்தனர். என்ன காரணத்தாலோ வைசம்பாயன மகரிஷியால் இக்கூட்டத்திற்கு வர முடியவில்லை.யாக்ஞவல்கியர் உள்ளிட்ட இருபத்தேழு சீடர்களுக்கு யஜூர் வேதத்தை இருபத்தேழு பங்குகளாகப் பிரித்து அவர் கற்றுத் தந்தி ருந்தார்.கூட்டத்திற்கு வராததால் எட்டாம் நாள் வைசம்பாயனர் தவறுதலாக அவர் மைத்துனர் தலையில் காலை வைத்து அவரைக் கொன்று விட்டிருந்தார்.இந்த பிரம்மஹத்தித் தோஷத்தைப் போக்க விரும்பிய வைசம்பாயனர் தன் இருபத்தேழு சீடர்களையும் அழைத்து ,இந்த தோஷம் தன்னை விட்டு அகல வேண்டுமானால் ஒரு யாகம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியும் சொன்னார்.   இதைக் கேட்டதும் அந்த இருபத்தியேழு பேரில் ஒருவரான யாக்ஞவல்கியர் எழுந்து "யாகத்தை நன்கு செய்து முடிக்க இவர்களுக்கு ஆற்றல் போதாது.நான் ஒருவனே இந்த யாகத்தை ச

விஷ்ணு புராணம் - 8

 வேத வியாசர் பலர் ------------------------------- ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வேதவியாசராக உருவெடுத்துள்ளார்.உருவெடுத்தப் பின்னர் வேதங்களை வகைப்படுத்தியுள்ளார்.வைவஸ்த மன்வந்திரங்களாகிய இந்த காலகட்டத்தில் வேதவியாசர் வேதங்களை 28மூறை வகைப்படுத்தி விட்டார்.இதுவரை தோன்றியுள்ள வேதவியாசர்கள் இருபத்தெட்டுப் பேர் ஆவர். அவர்கள், சுவயம்பு வியாசர்,பிரஜாபதி வேத வியாசர்,பிருகஸ்பதி வேத வியாசர்,மிருத்யூ வேத வியாசர்,பரத்வாஜ வேத வியாசர்,கிருஷ்ண துவைபாயன வியாசர் முதலானோர்.விஷ்ணு புராணத்தின் படி வரப்போகும் வேத வியாசர் துரோணரின் மகனான அசுவத்தாமன் ஆவார்.இவர் சிரஞ்சீவி ஆவார். "ஓம்" எனும் பிரணவம் நான்கு வேதங்களின் சாரம் எனப்படும் பரப்பிரம்மம் எங்கும்,எப்பொழுதும்,எப்பொருளிலும் நிறந்திருந்தாலும் காண்பவர்க்குரிய மன வளர்ச்சி,அறிவு முதிர்ச்சி ஆகியவற்றிற்கேற்ப பல விஷயங்களாகத் தெரிபவர்.ரிக், யஜூர்,சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ஒரு லட்சம் பாடல்கள் உள்ளன.கிருஷ்ணதுவைபாயன வேத வியாசர் இந்த வேதங்களைப்  பிரிக்க வேண்டுமென முடிவு செய்ததும்,அவரைச் சுற்றி நான்கு முக்கியமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். பைலா

விஷ்ணு புராணம் - 7

Image
 ஜடாபரதன் கதை ---------------------------- முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மக்ன இருந்தான்.அவன் எப்போதும் விஷ்ணுவை தியானித்தபடியே இருந்தான்.ஒருநாள் அவன் நீராட ஆற்றிற்குச் சென்றபோது,அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்த வந்தது.அந்த சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு பயந்த மான்,தன் குட்டியை ஈன்றதும் இறந்தது.ஆற்றில் விழுந்து விட்ட மான் குட்டியிய பரதன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான்.நன்கு உண்டு வளர்ந்த மான் பின் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவு அருந்தி வந்தது. தன் அரச பதவி, மக்கள்,உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டு,அதை நினைத்தபடியே உயிர் நீத்தான்..பரதன் மானை எண்ணியபடியே உயிர் நீத்ததால் மறுபிறவியில் பூர்வ ஜென்ம நினியவுகளை மறக்காமல் தன் பழைய ஊரான சாலக்கிரமாவிற்கு வந்து அங்கு வாழ்ந்து வந்தான்.சிலகாலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் அந்தணனாகப் பிறந்து வேத சாத்திரங்களில் தேர்ச்சிப் பெற்றான்.பரப்பிரம்மம் பற்றிய ஞானம் பெற்றதால் வேதங்களில்  நாட்டமின்றி துர்நாற்றமுடையத் தோற்றத்துடன் உலாவி வந்தான்.

விஷ்ணு புராணம் - 6

 பிற உலகங்கள் பற்றி ------------------------- பூமியிலிருந்து பல மைல்கள் அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து ச்ந்திரன்,செவ்வாய்,புதன், வியாழன்(குரு),வெள்ளி (சுக்கிரன்),சனி,சப்தரிஷி,துருவ மண்டலங்கள் உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தியச் சுற்றி வருகின்றன.துருவலோகத்திற்கு மேல் ஞான உலகமும்,அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் ட்ஹேவளோகமும் உண்டு.அது இரண்டாபப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம்,வைகுண்ட லோகம் உள்ளன. துருவ உலகம் முதல் சத்திய உல்கம் வரை உள்ள லோகங்கள் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ,புவர்,சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன.உலகங்களில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிட்ட ஏழு உல்கங்களும் இவற்றிற்குக் கீழே உள்ள ஏழு பாதாள உலகங்களையும் அடக்கியுள்ளது.கீழும், மேலுமாக இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கியுள்ள அண்டம் இருளால் சூழப்பட்டுள்ளது.அவ்விருளைக் கடந்து தண்ணீரும்,நீரைக் கடந்து நெருப்பும்,நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.  

விஷ்ணு புராணம் - 5

Image
  பிரகலாதன் கதை ---------------------------- தைத்திரியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன்.மாபெரும் தவங்கள் செய்து மூவுலகினையும் ஆளும் சக்தியினைப் பெற்றான்.தவிர,இந்திரன்,அக்னி,யமன்,நிருதி,வருணன்,வாயு,ஆகியவர்களையும் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான்.அவர்கள் அனைவரும் இங்கும்அங்கும்  அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவை சரணடைந்தனர். எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்யகசிபு தனக்கு மேல் யாருமில்லை,யாரும் இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்தான். அதனால் தைத்திரியர்கள்,தேவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் ..தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என ஆசைப்பட்டான்.மேலும் தைத்திரிய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப்பட்டார்.எனவே,அவர் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது அவனின் உத்தரவானது. இந்நிலையில் பிரகலாதன் எனும் குழந்தை அவனுக்குப் பிறந்தது.அவன் ஓரளவு வளர்ந்ததும்,ஒரு ஆசிரியரை வைத்து,அவனுக்குக் கல்விப் புகட்ட உத்தரவிட்டான் கசிபு.கல்வியைத் தொடங்கும் போது விஷ்ணுவின் பெயரை சொல்லக் கூடாது என்றும்,ஹிரண்யன் பெயரை மட்டுமே சொல்ல வேண்டும் என

விஷ்ணு புராணம் - 4

Image
  துருவனின் கதை -------------------------- பிரம்மனின் உடம்பிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் தோன்றினர்.மனு எனும் பெயரைப் பெற்றிருந்த அவர்கள் மரபில் பல மக்கள் தோன்றினர்.மனுவின் மரபில் தோன்றியதால் அவர்கள்"மானவர்கள்"என்று அழைக்கப் பட்டார்கள்.இவர்களை உத்தானபாதன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.சுனிதி,சுருச்சி என்ற இரு மங்கயர்களை அவன் மணந்தான்.இளையவளாகிய சுருச்சியின் மகன் உத்தமன்.அவன் ஒருநாள் அரசனின் மடியின் மீது அமர்ந்திருந்தான்.மூத்தவளான சுனிதியின் மகன் துருவன் தானும் தன் தந்தையின் மடியில் அமர விரும்பினான்.அப்படி அமர விரும்பும் போது இளையவளாகிய சுருச்சிஅவனை தடுத்தாள்.அரசன் மடியில் அமரும் உரிமை உத்தமனுக்கு மட்டுமே உண்டு என்றும், அடுத்தபடியாக ஆளப்போகிறவன் அவன்தான்என்றும் கூறினாள்.மிக வருத்தத்தோடு தாயிடம் வந்த துருவன் நடந்ததைக் கூறினான்.தாய் சுனிதியும் ,"மகனே!இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.முன்பிறவியில் நல்ல காரியங்களைச் செய்தவர்கள் நல்பதவிகளையும், சுகங்களையும் அடுத்தப் பிறவியில் அடைவர்.,  சுருச்சியும், உத்தமனும்..போன பிறவியின் புண்ணியம் செய்து இப்பிறவியில் இந்நிலையில் உள்ளனர்.நா

விஷ்ணு புராணம் - 3

 லட்சுமியின் தோற்றம் ---------------------------- மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுதும் சுற்றித் திரிந்தார்.ஒருநாள் ஒரு அழகியப் பெண்..வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள்.அம்மாலையின் மீது விருப்பம் கொண்ட முனிவர் அதைக் கேட்டார்.அப்பெண்ணும் மகிழ்வோடு அம்மாலையை அவ்ருக்குத்தந்தாள்.தலையில் அதை அணிந்து கொண்டு பல இடங்களுக்குச் சுற்றித் திருந்தார் அவர்.ஒருமுறை தன் யானையாகிய ஐராவதத்தில் இந்திரன் ஊர்வலம் வந்தான்.துர்வாசர் தன் தலையில் இருந்த அம்மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார்.அதன் சிறப்பினை அறியா இந்திரன்,அம்மாலையை வாங்கி யானையின் தந்தத்தின் மீது வைத்து விட்டான்.அற்புதமான வாசனையினைக் கண்ட ஐராவதம்...மேலும் வாசனையை அனுபவிக்க ..மாலையின் பக்கமாகத் தன் தும்பிக்கியயை நீட்டிற்று.ஆனால்..அம்மாலை துதிக்கைக்குக் கீழே விழுந்து விட்டது. மண்ணில் விழ்ந்த மாலையைக் கண்டு துர்வாசர் சினம் கொண்டார்.இந்திரன் எவ்வளவு  மன்றாடியும்,மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் தணியவில்லை..லட்சுமி உன்னைவிட்டுப் போய் விடுவாள் என சாபமிட்டார்.இந்திரன் அமராவதி

விஷ்ணு புராணம் - 2

 தொடக்கத்தில் எங்கும் நீர் நிறைந்திருந்தது.அதில் பெரிய முட்டை ஒன்று இருந்து கொண்டிருந்தது.முட்டையினுள் இந்த உல்கத்தில் நாம் காண்கின்ற..சர,அசரப் பொருள்கள் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன.அவற்றோடு சேர்ந்து விஷ்ணுவும் அதனுள் இருந்தார்.வெளியே ஆகாயம்,காற்று முதலிய ஐந்தும் இருந்தன.பூமி நீருக்கடியில் பாதாள ளோகத்துடன் சேர்ந்து இருந்தது.பூமியை மேலே கொண்டு வர விரும்பி விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பாதாள லோகத்திற்குச் சென்றார்.அங்கிருந்த பூமி தன்னை விடுவிக்குமாறு வேண்டியது.பூமியை எடுத்துத் தன் இரண்டு தந்தங்கள் நடுவே வைத்துக் கொண்டு மேலே வந்த விஷ்ணு பூமியை நீரில் மிதக்க விட்டார்.நீரில் மிதந்துக் கொண்டிருந்த காரணத்தால் நாராயணன் என்றப் பெயரைப் பெற்றார் விஷ்ணு.பிரம்மன் விஷ்ணுவைத் தாங்கி உலகத்து உயிர்களையெல்லாம் படைக்கத் தொடங்கினார். முதலில் படைக்கப்பட்டவர்கள் அவர்கள் வாயிலிருந்து வந்த தேவர்களும், தொடையிலிருந்து வந்த அசுரர்களும் விலாவிலிருந்து பிறந்த பிறர்களும் ஆவர்.படைக்கப்பட்ட யட்சர்கள் படத்தி பிரம்மனையேத் தின்ன முற்பட்டனர்.ஆனால்..அவ்வாறு செய்யக் கூடாது என ராட்சதர்கள் தடுத்தனர்.இதன் பிறகு பிரம்மனின் தல

விஷ்ணு புராணம்

Image
  பதினெண் புராணங்களில் இப்புராணம் மிகவும் முக்கியமான ஒன்று என்பர். இந்தப் புராணத்திலும் பின்னர் வரும் பாகவத்ப் புராணத்திலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் வரலாறு மிக விரிவாகப் பேசப்படுகிறது.ஆதி சங்கர பகவத் பாதாள் தனது மகா பாஷ்யத்தில் விஷ்ணு புராணத்தில் இருந்து பலமேற்கோள்களை எடுத்துக் கூறுகிறார். ஆதி சங்கரர் காலம் 8ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் முடிவவாகும்.எனவே இந்தப் புராணம் அவரது காலத்திற்கு முந்தியே 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் மக்களிடையே பரவி இருக்க வேண்டும்.5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய காலம் என்பதால் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கருவூலம் இப்புராணங்கள் என்ற கருத்திற்கு தடையேதுமில்லை. இப்புராணம் 6000 பாடல்களைக் கொண்டதாகும்.இப்புராணம் வியாசரின் மகனான பராசர முனிவரால் சொல்லப்பட்டதாகும்.மைத்ரேயி முனிவர் பராசர முனிவரிடம் பாரத நாட்டு தோற்றம் பற்றிக் கேட்க .பராசரர் விடை சொல்வது போல அமைந்தது இப்புராணம். இப்புராணம் ஆறு பகுதிகளாகவும் 126 அத்தியாயங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளது.நான்காவது பகுதி மட்டும் உரைநடையில் உள்ளது. இந்நாட்டு பழங்கால மன்னர்களின் வம்சாவளிப் பற்றிக் கூறுவதாகும். ஒரு பு

பத்ம புராணம் - 12

 மீண்டு வந்த மகன் கதை ----------------------------------------- துவார யுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தீனநாதன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.எல்லா செல்வங்கள் நிரம்பியிருந்தும் குழந்தைச் செல்வம் இல்லாமல் மிக மனம்  வருந்தி கால்வ முனிவரிடம் தன் குறையைச் சொல்லி வருந்தினான்..அவர் நரபலி இடும் ஒரு யாகத்தைச் செய்து அதில் உறுப்பு அழகுகள் சிறிதும் குறைவில்லாத ஒருவனை பலியிடுவதனால் உனக்குக் குழந்தைப் பிறக்கும் என்று கூறினர.உடன் அரசனின் ஆணைப்படி நாடு முழுதும் பலியிடுவதற்குரிய ஒருவனைத் தேடிச் சென்றனர் பணியாளர்கள்.இறுதியாக தாசபுரா எனும் இடத்தில் கிருஷ்ண தேவா-சுசீலா  என்பவர்களுக்குப் பிள்ளைகளாக்ப் பிறந்திருந்த மூண்று பேரைக் கண்டதும் ,திருப்தியடைந்து அனைத்து அழகுகளும் கொண்ட மூவரையும் அரசனிடம் அழைத்துச் செல்வது என்ற முடிவுக்கு வந்தனர்.தாய்-தந்தையர் எவ்வளவு கேட்டும் அவர்கள் இரக்கம் காட்ட மறுத்தனர்.இறுதியாக மூன்றில் ஒருவனும்,நடுமகனாகிய ஒருவனை அழைத்துச் செல்ல ஏற்பாடாயிற்று.அவனை அழைத்துக் கொண்டு  பணியாளர் சென்றதும் ,அத்துயரம் தாங்காமல் தாய்-தந்தையர் கண்களை இழந்தனர்.பணியாளரும்,பலிக்குரியவனும் செல்லும் வழியில் விச

பத்ம புராணம் - 11

 துவார யுகத்தில் சௌராஷ்டிரா தேசத்தில் பத்ராஷ்ரவன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.அவன் மனைவி பெயர் சுரதி சந்திரிகா.அவர்களுக்கு சியாமபாலா என்ற பெண் குழந்தை இருந்தது.ஒருநாள் குழந்தை வெளியே விளையாட்க் கொண்டிருந்த போது லட்சுமி தேவி ஒரு வயதான பிராமணப் பெண் வேடம் பூண்டு அரண்மனைக்கு வந்தாள்.அரண்மனைக் காவலாளி"அம்மா..நீங்கள் யார்?இங்கு வந்த காரணம் யாது?"என்று காரணம் கேட்க , அரசியின் பழைய பிறப்பையும்..இப்போது அவள் செய்யத் தவறிய சில காரியங்களையும் நினைவூட்ட வந்ததாக லட்சுமி தேவி கூறினாள். காவலாளி, "அம்மா..நீங்கள் சொவது புரியவில்லையே!"என்றதும் லட்சுமி தேவி விவரமாகக் கூற ஆரம்பித்தாள். இப்பொழுது அரசியாக இருக்கும் சுரதி சந்திரிகா, முன் ஜென்மத்தில் ஒரு வைசியனின் மனைவியாக இருந்தாள்.எவ்வித நற்பண்புகளும் இல்லாமல் செல்வச் செருக்குடன் இருந்தாள்.கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு அவனை விட்டுச் சென்றாள்.சென்ற அவளை மனித ரூபத்தில் இருந்த லட்சுமி தேவி..அவளது துயரம் நீங்க வேண்டுமானால் லட்சுமி விரதம் இருக்க வேண்டும் என்று கூறினாள்.இந்த வைசியன் மனைவி நன்கு லட்சுமி விரதம் இருந்தாள்.அதன் பயனாக அவள் இறந்ததும்

பத்ம புராணம் - 10

 ஆலமரத்தனடியில் அமர்ந்திருந்த சாயவனன், இக்கிளிகளின் உரையால்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டு ,தந்தைக் கிளியான குஞ்சலாவைப் பார்த்து, "நீ யார்? எப்படி இவ்வளவு விஷயங்களை அறிந்திருக்கிறாய்?என்று கேட்டவுடன் குஞ்சலா தன் கதையைக் கூற ஆரம்பித்தது. வித்யாதரன் என்ற பிராமணன் வாசு சர்மா,நாம சர்மா,தர்ம சர்மா எனும் மூன்று பிள்ளிகளுடன் வாழ்ந்து வந்தான்.முதலிரண்டு பிள்ளைகளும் தந்தையின் அடிச்சுவட்டைப் பின் பற்றி சாத்திரங்களைப் படித்தனர்.ஆனால் மூன்றாவது மகனாகிய தர்ம சர்மாவிற்கு இதில் நாட்டம் இல்லை.சோம்பேறியாகவேப் பொழுதினைப் போக்கிக் கழித்துவிட்டான்.நாளாவட்டத்தில் மக்கள் அவனை வெறுக்கத் தொடங்கினர்.மக்களின் வெறுப்புணர்ச்சி ஒரு எல்லையைக் கடந்ததால் மணம் நொந்து போன தர்மசர்மா எப்படியாவது கல்வி கற்க வேண்டுமென நினைத்து ஒரு தக்க அறிஞரைத் தேடி அலைந்தான்.நல்லாசிரியர் கிடைக்கவே தர்ம சாத்திரங்களைக் கற்றுக் கொண்டான்.அப்போது ஒரு வேடன் ஒரு கிளியைப் பிடித்துக் கொண்டு வந்து..தர்ம சர்மாவிடம் கொடுத்தான்.அன்பு செலுத்த யரௌம் இல்லாத நிலையில் இருந்த தர்ம சர்மா..தன் அன்பு முழுதும் அக்கிளியிடம் செலுத்தி வந்தான்.துரதிருஷ்டவிதமாக அக்

பதம புராணம் - 9

 அழுகையில் மலர்ந்த மலர்கள் ------------------------------------------- ஆலமரத்தில் இருந்த குஞ்சலா என்ற தந்தைக் கிளி, கபிஞ்சலா என்ற நான்காவது மகனைப் பார்த்து,"மகனே! நீ பார்த்த அதிசயத்தைக் கூறு" என்றது கபிஞ்சலா சொன்னது.. "நான் தினமும் கைலாச மலைக்குச் செல்கிறேன்.கைலாயம் மிகவும் அழகாக, இயற்கை எழில் கொஞ்ச உள்ளது.கங்கை முதல் நூற்றுக்கணக்கான் புண்ணிய நதிகள் அங்கே ஓடுகின்றன.லைலாயத்தின் ஒரு புறத்தில் ஒரு பெரிய ஏரியில்நீர் நிறைந்துள்ளது.அந்த ஏரியில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.அதன் ஒரு புறத்தில் ஒரு கற்பாறை உள்ளது.அதன்மீது ஒரு பெண் அமர்ந்து அழுதுக் கொண்டிருக்கிறாள். அவள் கண்ணீர் ஏரியில் வந்து விழுந்ததும் தாமரை மலர் போல ஒரு மலர் பூக்கின்றது.அந்தப் பாறையின் பக்கத்தில் சிவனுடைய விக்கிரகம் உள்ளது.அந்த மலர்ந்த மலரை ஒரு தவசி எடுத்து சிவனுக்குச் சாத்துகிறார்.பல மலர்களியச் சாத்தியப் பிறகு பாடுகிறார்,நடனம் ஆடுகிறார்.பிறகு கதறி அழுகிறார்.அவர் உடம்பு வெறும் எலும்புக் கூடாகத்தான் இருக்கிறது.காய்ந்து போன சரகுகளையே அவர் உண்கின்றார்.எனக்கு எதுவும் புரியவில்லை.அந்தப் பெண் ஏன் அழுகிறாள்?அவள் கண

பத்ம புராணம் - 8

 மூன்றாவது கிளி சொன்ன கதை ----------------------------------------- தந்தைக் கிளி தனது மூன்றாவது மகனான விஞ்வலாவைப் பார்த்து "நீ இரை தேடிப்போன இடத்தில் ஏதேனும் அதிசயம் உணடா?"என்று கேட்டது. அதற்கு அக்கிளி சொன்னது"ஆம்.தந்தையே நான் இரைதேட சுமேரு மலையில் அனந்தகானம் என்ற வனம் பக்கம் தினம் செல்கிறேன்.மிக அற்புதமான அவ்விடத்தில் இயற்கை எழில் பூத்து குலுங்குகிறது.ஒரு அருமையான் அகுள்மௌம் அங்கு உண்டு.அந்தக் குளத்தில் பூக்கள்,அன்னப்பறவைகள் ஆகியவை நிறந்துள்ளன.கந்தர்வர்கள்,வித்தியாதரர்கள்,ஏனைய தேவர்கள் ஆகிய பலரும் தினமும் அங்கு வருகிறார்கள்.குளத்தின் பக்கத்தில் ஒரு மரத்தில் அமர்ந்து குளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.திடீரென மிக ஒளி பொருந்திய விமானம் ஒன்றில் ஒரு அழகிய இளைஞனும்,ஒரு பெண்ணும் வந்து இற்னகினார்கள்.ஒளி படைத்த தேகமுடைய அவ்விருவரும் அக்குளத்தில் நீராடி மிக அற்புதமான உடைகளை அணிந்து கொண்டனர்.கையில் ஆளுக்கொரு கத்தியை ஏந்திக் கொண்டனர்.இந்த அமைதியான சூழலில் கத்தி எதற்கு என நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது..ஒரு கொடூரமானக் காட்சியினைக் கண்டேன்.குளத்துக் கரையில் இரு சடலங்கள

பத்ம புராணம் - 7

நிறம் மாறிய அன்னங்கள் --------------------------------- ஆலமரத்தில் குடியிருந்த கிளிக் குடும்பத்தின் தலைவன் குஞ்சலா தனது இரண்டாவது மகனாகிய சமுஜ்வலாவிடம் பேசத் தொடங்கியது.. "சமுஜ்வலா..நீ இரைத் தேடிப் போகும் பக்கம் ஏதேனும் விசேஷம் உண்டா?" "வடதிசையில் இமயத்தில் இருக்கும் மானசரோவர் என்ற ஏரிக்குத்தான் இரை தேடச் செல்கிறேன்.ஒருமுறை நான் அங்கு இருந்தபொழுது முழுவதும் கருநிறம் உடைய ஒரு பெரிய அன்னப் பறவையும் அதன் பின்னர் அதே நிறம் பொருந்திய பல அன்னங்களும் மானசரோவருக்கு வந்தன.சற்று நேரத்தில் உடல் முழுதும் வெள்ளையும், மூக்கும்,காலும் கருப்பாக உள்ள சில அன்னங்களும் வந்து சேர்ந்தன.இந்தப் பறவைகள் எல்லாம் நீரில் நீந்தி விளையாடிய பொழுது மிகப் பெரிய ஒரு ராஜ அன்னமும்,துணை அன்னங்களும் மானசரோவர்  உள்ளிருந்து புறப்பட்டு வெளியே பறந்து சென்று விட்டன.சற்று நேரத்தில் பேய் வடிவுடைய நான்கு பெண் பூதங்கள் மானசரோவர் கரைக்கு வந்து மிகப் பெரிய குரலுடன் ஓலமிட்டுக் கொண்டே இருந்தன.இதைப் பார்த்த எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.இது பற்றி நீங்கள் ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?"என்றது  சமுஜ்வலா

பத்ம புராணம் - 6

 திவ்விய தேவியின் கதை ----------------------------------- பிருகு முனிவரின் வழியில் சயவனன் என்ற முனிவன் தோன்றினார்.நிறைய ஞானத்தைப் பெற வேண்டும் என நினைத்தார்.அதைப் பெற சிறந்த வழி தீர்த்த யாத்திரை செல்வதுதான் என தீர்மானித்தார்.பல ஊர்களுக்குச் சென்று தீர்த்தங்களில் நீராடி விட்டு நர்மதை ஆற்றின் தென்கரையில் "அமரகந்தகா" என்ற ஊரின் எல்லையில் ஒரு ஆலமரத்தில் கீழ் அமர்ந்தார்.அப்போது ஆலமரத்தின் கிளைகளில் ஒரு கிளிக் குடும்பம் வசித்து வந்தது.ஆண் கிளியின் பெயர் குஞ்சலா.இக்கிளி,தன் மனைவி,நான்கு மகன் கிளிகளுடன் வசித்து வந்தது.பிள்ளைகளில் மூத்த கிளியாகிய "உஞ்வலா" காலை இரைத் தேடிச் சென்று இரையுடன் மாலை வரும்.அந்த உணவை மற்ற கிளிகள் பகிர்ந்து சாப்பிடும்.சயவன முனிவர் அங்கு தங்கியிருந்த நேரத்தில் மேலே உள்ள கிளிக்குடும்பத்தில் நடந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது.  குஞ்சலா கிளி மகனிடம் கேட்டது.."இன்று எங்கே இரைத் தேடப் போனாய்?" மூத்த மகன் கிளி சொல்லியது,"பிளக்க்ஷத்தீவு" என்ற பகுதிக்குத் தான் நான் இரைத் தேடிச் செல்வது வழக்கம்.அதை ஆள்கின்ற மன்னன் திவோதசா என்பவன் ஆவான்.அவனுக்

பத்ம புராணம் - 5

Image
  கிரிகலா-சுகலா கதை ----------------------------------- ஒரு காலத்தில் வாரணாய்ஸ்யில் கிரிகலா எனும் வைசியர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவர் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என விரும்பினார்.அவரது மனைவி சுகலாவும் தானும் உடன் வருவதாகக் கூறினாள்.ஆனால், போகும் வழியில் இடையூறுகள் வரக் கூடும் என அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலேயே புறப்பட்டு விட்டார்.ஆனால் கணவரிடம் முகவும் அன்பு கொண்ட சுகலா..உணவு,உறக்கம் துறந்து தரையில் படுத்திருந்தாள்.உறவினர்கள் "உன் கணவன் தீர்த்த யாத்திரைக்குத் தானே போயுள்ளார்.அதனால் நீ ஏன் உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்?"என்றனர்.அவர்கள் கூறியதை ஏற்காத சுகலா,"என்னிடம் சொல்லாமலேயே சென்று விட்டதால்..என்னை அவர் ஒதுக்கி வைத்தது போலத்தான்.ஆகவே, நான் விரதங்களை அனுஷ்டிப்பது நியாயமே" என்றாள். ஒருமுறை இந்திரனின் பணியாள் ஒருவன் வந்து ,"உங்கள் கணவர் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.எங்கு போனார் என்றும் தெரியவில்லை.அவரை நினைத்து அவதிப்பட்டு உங்கள் இளமையைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம்.என் எஜமானர் உங்களை மணக்கத் தயாராய் இருக்கிறார்" என்றான். அவன் சொன்னது இந்திரனை என உ

பத்ம புராணம் - 4

 ஆண் - பெண் பன்றிகளின் கதை ---------------------------------------------------- இஷ்வாகு மன்னன் சுதேவா என்ற பெண்ணை மணந்து அயோத்தியை ஆண்டு வந்தான்.ஒருமுறை அவன் வேட்டைக்குப் புறப்பட்ட போது அவன் மனைவி சுதேவாவும் உடன் சென்றாள்.பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு இறுதியாக ஒரு ஆண் பன்றி,அதன் மனைவி பெண் பன்றி..அவற்றின் குட்டிகளாகிய ஆண்,பெண் பன்றிகள் அனைத்தும் ஒன்றாக நின்றிருந்த இடத்திற்கு வந்தனர்.இஷ்வாகுவின் வீரர்கள் அப்பன்றிகளை எதிர்க்க..ஆண் பன்றி பலரைத் தன் கொம்புகளால் குத்திக்  கிழித்து விட்டது.வியப்படைந்த மன்னன் தானே அந்தப் பன்றியின் மீது அம்பெய்திக் கொன்றான்.உடனே பெண் பன்றி சீறிப் பாய்ந்தது.மன்னனின் அம்புப்பட்டு அதுவும் குற்றுயிரும்..கொலை உயிருமாக ரத்தம் வழியக் கிடந்தது.மன்னனின் மனைவி அதன் மீது இரக்கப்பட்டு..அதன் முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க நீறும் கொடுத்தாள்.அப்பெண் பன்றி பேச முயல..சுதேவா அதனிடம் "நீ யார்..உன் கணவன் யார்? "என்றாள்.பெண் பன்றி கூறத் தொடங்கியது. ஒரு காலத்தில் சுமேரு மலயுச்சியில் புலஸ்தியன் என்ற முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார்.ரங்க வித்யாதரன் எனும் கந்தர்வன்

பத்ம புராணம் - 3

Image
விருத்ராசுரன் கதை ---------------------------------  காசிப முனிவரின் மனைவியருள் திதி என்பவள் தைத்தியர்களைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.மற்றொரு மனைவியும், திதியின் சகோதரியுமான அதிதி தேவர்களைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.அவருள் இந்திரன் நான்கு கைகளும்,கோடி சூர்ய பிரகாசத்துடன் பிறந்தான்.நாளாவட்டத்தில்  இந்திரன் மிகுந்த பலவானாக ஆகி தேவர்களின் தலைவனாகவும் ஆகி விட்டான்.திதியின் பிள்ளைகளாகிய தைத்தியர்களை அழித்துக் கொண்டிருந்தான்.இதை அறிந்த திதி காசிபரிடம் மூறையிட்டாள்.பின்..அவர் உதவியுடன் பலி என்ற பிள்ளையைப் பெற்றாள்.மிகவு பலசாலியான அவன் தேவர்களை அழிக்க வேண்டி பெரும் தவம் செய்தான்.அவன் குறிக்கோளை அறிந்த இந்திரன்..இவன் தவத்தில் இருக்கும் போதே வஜ்ராயுதத்தால் இவனை அழித்தான்.இதை அறிந்த திதி, இந்திரன் செய்த அநியாயத்தை காசிபரிடம் சொல்ல..அவரும் அவன் செய்தது தவறு என்று கூறினார். எப்படியாவது இந்திரனை ஒழிக்க வேண்டும் என விரும்பிய திதி,மீண்டும் காசிபரிடம் முறையிட்டாள்.காசிபர் தன் தலையில் இருந்து ஒரு முடியைப் பிடுங்கி பூமியில் போட..அம்முடியிலிருந்து விருத்ராசுரன் எனும் அசுரன் தோன்றினான்.அவனிடம், காசிபர் "

பத்ம புராணம் - 2

Image
சிவசர்மாவின் கதை -----------------------------  மேற்குக் கடற்கரையில் துவாரவதி எனும் துவாரகையில் சிவ சரமா என்றொரு அந்தணர் சகல சாஸ்திரங்கள்,வேதங்கள்,யாகங்கல் ஆகியவற்றைக் கற்றவராக இருந்தார்.அவருக்கு பஜ்ஞ சர்மா,வேத சர்மா,தர்ம சர்மா,விஷ்ணு சர்மா,சோம சர்மா என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.அவர்களும் வேத, சாஸ்திர விற்பன்னர்களாய் சகல சாஸ்திரப் பண்டிதர்களால்,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என விளங்கினர்.ஆனால், அவர்கள் எந்த அளவு தன்னிடம் பயபக்தி உடையவர்களாக இருக்கிறார்கள் என அவர்களை சோதித்துப் பார்க்க விரும்பினார் சிவசர்மா.சகல வேதங்களையும் உணர்ந்த சிவ சர்மாவிற்கு பலவகை மந்திர தந்திரங்களும் தெரிந்திருந்தது.அவர் தன் மனைவி இறந்து கிடப்பதாக ஒரு மாயத்தைத் தோற்றுவித்துத் தன் பெரிய மகனான யக்ஞசர்மாவிடம் அந்த உடலை வாள் கொண்டு துண்டு துண்டுகளாக்கி வீசி எறியுமாறு கூற..அவனும் அவ்வாறே செய்தான்.அவன் தந்தையிடம் பக்தியுள்ளவன் என சிவசர்மா தீர்மானித்தார்.   அடுத்து ஒரு அழகியப் பெண்ணை உருவாக்கி,இரண்டாவது மகன் வேத சர்மாவிடம்,அவளை தன்னை மணக்குமாறு ஏற்பாடு செய்யச் சொன்னார்.அவளோ..மறுத்து தந்தைக்கு பதில் வேத சர்மாவை மணப்

பத்ம புராணம்

Image
  இப்புராணம் பற்றி... வேத வியாசர் எழுதிய பதினென் புராணங்களில் இரண்டாவது "பத்ம புராணம்"  ஆதியில் ஒரு புராணம்தான் இருந்தது.நூறு கோடி பாடல்களைக் கொண்டதாக அது இருந்தது. பிரம்மனின் ஒருநாள் என்பது ஒரு கல்பகமாகும்.பிரம்மனின் ஒரு நாள் முடிவில் இந்த பேரண்டம் அழிவுற்றது.எங்கும் இருள் சூழ்ந்தது.அடுத்தநாள் காலையில் உலகம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது.ஒவ்வொரு கல்பகத்திலும் ஒரு புராணம் இயற்றப்பட்டது. சென்ற கல்பகத்தில் இருந்த புராணம்..மனித வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்ம,அர்த்த,காமம் ஆகிய மூன்றையும் பற்றி  கூறி,அவற்றை முறையாக கடைபிடித்தால்தான் மோட்சம் கிட்டும் எனக் கூறியது. மிகப் பழங்காலத்தில் மனித வாழ்க்கை என்பது ஆன்மீகம்,உலகியல் என்ற இரண்டையும் ஓரளவில் கலந்து கடைபிடிப்பதையேக் குறிக்கோளாகக் கொண்ட சமுதாயம் ஆகும்.பத்ம புராணம் மிகப் பெரியதாக இருந்ததால் அதை சாதாரண மக்கள் படிப்பது என்பது கடினமாக இருந்தது.ஆகவே வேத வியாசர் அதைச் சுருக்கி நான்கு லட்சம் பாடல்களாகத் தொகுத்தார். பிரம்ம புராணத்தை அடுத்து பத்ம புராணம் ஆகும்.ஒரு காலத்தில் இப்பூமி ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால்..இதற்கு பத்ம