பத்ம புராணம் - 5

 



கிரிகலா-சுகலா கதை

-----------------------------------

ஒரு காலத்தில் வாரணாய்ஸ்யில் கிரிகலா எனும் வைசியர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவர் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என விரும்பினார்.அவரது மனைவி சுகலாவும் தானும் உடன் வருவதாகக் கூறினாள்.ஆனால், போகும் வழியில் இடையூறுகள் வரக் கூடும் என அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலேயே புறப்பட்டு விட்டார்.ஆனால் கணவரிடம் முகவும் அன்பு கொண்ட சுகலா..உணவு,உறக்கம் துறந்து தரையில் படுத்திருந்தாள்.உறவினர்கள் "உன் கணவன் தீர்த்த யாத்திரைக்குத் தானே போயுள்ளார்.அதனால் நீ ஏன் உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்?"என்றனர்.அவர்கள் கூறியதை ஏற்காத சுகலா,"என்னிடம் சொல்லாமலேயே சென்று விட்டதால்..என்னை அவர் ஒதுக்கி வைத்தது போலத்தான்.ஆகவே, நான் விரதங்களை அனுஷ்டிப்பது நியாயமே" என்றாள்.


ஒருமுறை இந்திரனின் பணியாள் ஒருவன் வந்து ,"உங்கள் கணவர் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.எங்கு போனார் என்றும் தெரியவில்லை.அவரை நினைத்து அவதிப்பட்டு உங்கள் இளமையைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம்.என் எஜமானர் உங்களை மணக்கத் தயாராய் இருக்கிறார்" என்றான்.


அவன் சொன்னது இந்திரனை என உணர்ந்த சுகலா"அவரை இங்கு வரச்சொல்"என்றாள்.இந்திரனும் நன்கு அலங்கரித்துக் கொண்டு அங்கு வந்தான்.அவனை சுகலா நன்கு கடிந்து கொண்டதுடன், "இப்படிப்பட்ட பாவச் செயலில் தேவேந்திரன் இறங்கக் கூடாது"என ஏசி அனுப்பி விட்டாள்.


தீர்த்தயாத்திரை முடிந்துத் திரும்பிய கிரிகலாவிற்கு அசரீரி கூறிற்று.."இத்தனை தீர்த்தங்களில் நீ குளித்தும் உனக்கு கடுகளவும் புண்ணியம் இல்லையாம்.அதனால் உன் முன்னோர்கள் நரகத்திலேயே உள்ளனர்"என்றார்.


கிரிகலா,"நான் என்ன தவறு செய்தேன்?" என்றான்.


"உன்னையே நம்பியிருக்கும் மனைவியை அழைத்துச் செல்லாமல்..நீ மட்டும் போனதால் பயன் இல்லை.அவளைச் சென்று அடைவாயாக!"என்றது அசரீரி.வீடு திரும்பிய அவன்..மனவியுடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.அப்போது இந்திரன் அங்கு வந்து, அவனைப் பார்த்து,"இப்படி ஒரு மனைவி கிடைத்தது நீ செய்த புண்ணியம்.எவ்வளவோ முயன்றும் அவள் மனதைக் கலைக்க முடியவில்லை.ஆகவே உனக்கு ஒரு வரம் தருகிறேன்.கேள்"என்றான்.


கிரிகலாவும் "நாங்கள் நேர்மையான வழியில் இருந்து விலகாமல் இருக்க வேண்டும்" என்றும், :"நாங்கள் வாழ்கின்ற இந்த இடம் "நாரி தீர்த்தம்"என்ற பெயருடன் புண்ணியத் தலமாக விளங்க வேண்டும்"என்று கேட்க..இந்திரனும் அவ்வாறே கொடுத்து மகிழ்ந்தான். 


பிப்பலாவின் கதை

----------------------------

காசிபனின் மகனாகிய பிப்பலா உலகத்தில் உள்ள அனைவரையும் விட அதிக ஆற்றலைப் பெற வேண்டும் எனும் எண்ணத்துடன் தவம் செய்தான்.ஊண்,உறக்கம் அனைத்தையும் துறந்து  தவம் செய்த அவன் உடலைச் சுற்றிலும் பாம்புகள்,கொடிய விலங்குகள் ஆகியவை இருந்தும் அவன் தவத்திலேயே இருந்தான்.அவன் உட்லைச் சுற்றி கரையான் புற்று வைத்தும் தவம் கலையவில்லை.இப்படியே 3000 ஆண்டுகள் கழிந்தன.ஆனால் அவன் ஆற்றல் அவனைச் சுற்றி நிறைந்திருந்ததுடன் அவன் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் உண்டாயிற்று.பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகிய மூவரில் யாரை நினைத்தும் அவன் தவம் செய்யாததால்..ஒரு அசரீரி குரல் கேட்டது"பிப்பலா..உன் தவத்தை மெச்சினோம்.என்ன வரம் வேண்டும் கேள்"என்றது.உடனே பிப்பலா "இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆளும் ஆற்றல் நான் பெற வேண்டும்"என்றான்."அப்படியே ஆகட்டும்"என்றது அசரீரி.மகிழ்ச்சி அடைந்த பிப்பலா..ஒரு குளக்கரையில் அமர்ந்து தன்னையும்,தான் பெற்ற வரத்தையும் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான்.அப்போது அக்குளத்தில் இருந்த் அஒரு கொக்கு "பிப்பலா..3000ஆண்டுகள் தவம் செய்து என்ன செய்து விட்டாய்..ஒரு தவமும் செய்யாத சுகர்மா உன்னைவிட மிகப்பெரியவன்.அவனைப் போய்ப் பார்.நீ எவ்வளவு சாதாரணமானவன் எனத் தெரியும்"என்றது.


கொக்கு பேசிய அதிசயத்தைக் கேட்ட பிப்பலா.."நீ யார்?" என்றான்.


"அதையும் சுகர்மாவையேக் கேட்டுத் தெரிந்து கொள்"என்றது கொக்கு.கொக்குக் கூறிய சுகர்மா இருக்குமிடத்திற்கு வந்தௌ சேர்ந்தான் பிப்பலா.சுகர்மா தன் பெற்றோர்கலை உபசரித்துக் கொண்டிருந்தான்.உபசரணை முடிந்து வெளியே வந்தவன்..பிப்பலாவைப் பார்த்து"இந்த உடம்பை வருத்தி 3000 ஆண்டுகள் செலவு செய்து என்ன பயனைப் பெற்றாய்?ண்ஹான் உன்னைப் போள தவம் செய்யவில்லை.வேதங்களைக் கரைத்துக் குடிக்கவில்லை.ஆனாலும் இந்திரன் முதலான தேவர்கள் நான் அழைத்தால் இங்கு வந்து நிற்பார்கள்.அதுமட்டுமல்ல உன்னிடம் பேசிய கொக்கு பிரம்மனே ஆவார்.இன்னமும் ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமா?" என்று கேட்டான் சுகர்மா.இந்திரன் முதலானவர்களை அங்கு வரவழைத்தான்."என்னுடைய சக்தியைக் காட்டவே இவர்களை வரவழைத்தேன்"என்றபடியே..இதற்கு மேலும் உனக்கு ஒரு விளக்கம் தர யயாதியின் கதையினைச் சொல்கிறேன்..கேள்' என்றார்.

(யயாதியின் கதை முன்னரே பிரம்மபுராணத்தில் சொல்லியுள்ளேன்.அங்கு சொன்னதற்கும்..இதில் வந்துள்ளதற்கும் ஒரு வேறுபாடு உண்டௌ.பிரம்ம புராணத்தில் புரு என்ற தன் மகனிடம் முதுமையைக் கொடுத்து   இளமையை யயாதி வாங்கக் காரணம் உலகம் சுற்றிப்பார்க்க என இருக்கும்.ஆனால் இளமையைப் பெற்றுக் கொள்வது ரதியின் மகளாகிய அஷ்ருவிந்துமதியை மணந்து கொள்வதற்காக என இங்கு கூறப்படுகிறது)

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11