வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

  யமன் சொல்லிய கதை

--------------------------------


ஒருமுறை பிரம்மாவின் மகனாகிய சனத்குமாரன், யமனைக் கண்டு பேசி விட்டுப் போக வந்தான்.அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது பொன்னிற விமானத்தில் ஒருத்தர் வந்தார்.உடன் யமன் எழுந்து மிக்க மரியாதையுடன் அவரைக் குசலம் விசாரித்து..பிரம்மலோகத்தில் உங்கள் இடம் தயாராக உள்ளது..நீங்கள் அங்கே போகலாம் என வழி அனுப்பிவிட்டு வந்து அமர்ந்தான்.உடன், மற்றொரு விமானத்தில் இன்னொருவர்  வந்தார்.மறுபடியும் யமன் அவரை வரவேற்று பிரம்மலோகம் அனுப்பினார்.இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சனத்குமாரன், "யமனே! உன்னைக் கண்டு அனைவரும் அஞ்சுகின்றனர்.ஆனால்..உன்னிடம் வந்த இருவருக்கு இவ்வளவு மரியாதை செய்வது எனக்கு ஆச்சரியமளிக்கிறது" என்றான்.


வைதிஷா என்ற நகரத்தை தாரபாலா என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவன் நாட்டில் ஓடும் விதஸ்தா என்ற நதியும், வேத்ரவதியும் சங்கமாகும் இடத்தில் ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து..ஒரு சிறு நரி பூஜை  செய்து வந்தது.


கயிலையில் பார்வதி தவம் செய்தபோது சிவனிடம் வேறு யாரும் தன்னைப் பொல வேஷமிட்டபடி நெருங்காமல் இருக்க ஏவி விட்டு பார்வதி சென்று விட்டாள்.அதி என்ற அசுரன் பார்வதியின் வடிவினை ஏற்று சிவனிடம் வந்தான். உண்மையான பார்வதிக்கும், போலி பார்வதிக்கும் வேறுபாடு தெரியாத நந்தி ,அசுரனை உள்ளே விட்டு விட்டான்.நந்தி தன் கடமையை சரியாக செய்யாததால் 12ஆண்டுகள் பூமியில் நரியாக இருக்குமாறு நந்திக்கு சாபமிட்டாள். அந்த சாபத்தால் நரியான நந்தி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தது.அந்த நரியின் செயலை அடிக்கடி பார்த்து வந்த தாரபாலா..சாபம் முடிந்து நரி ஜோதியுடன் சிவனிடம் சென்றதைப் பார்த்தான்.சிவபூஜையின் சிறப்பை அறிந்த தாரபாலா தானும் சிவபூஜை செய்ய ஒரு கோயிலைக் கட்டி அங்கே புராண பிரசங்கம் நிகழ ஏற்பாடு செய்தான்.அந்தப் புண்ணியத்தாலேயே இப்போது பிரம்மலோகம் சென்றான்.


பயங்கர கஞ்சனாக வாழ்ந்தவன், ஒருமுறை புராண பிரசங்கத்தைக் கேட்ட தும் மாறிவிட்டான்.பல இடங்களில் பலரை ஏற்பாடு செய்து ஆங்காங்கே புராண பிரசங்கங்கள் நடக்குமாறு செய்தான்.தன் செல்வத்தையெல்லாம் அதற்கென செலவிட்டான்.புராணத்தைக் கேட்டதாலும்,பிறரைக் கேட்கச் செய்ததாலும் ஏற்பட்ட புண்ணியத்தால் அவன் பிரம்ம லோகம் சென்றான்.

புராணங்களின் பலன் அது.புராணத்தைக் கேட்பது பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகியோரை வணங்குவது போலாகும் என்று கதையை முடித்தான் யமன்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம்) - 11