பிரம்ம புராணம் - 10
கருட தீர்த்தம்
----------------------------
நாகலோகவாசியான அனந்தனுக்கு மணிநாகன் என்றொரு மகன் பிறந்தான்.கருடனைக் கண்டால் பாம்புகளுக்கு நடுக்கம்.இதைஅறிந்த மணிநாகன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான்.தவத்தை மெச்சிய சிவபெருமான்..கருடனால் ஒன்றும் செய்ய முடியாத ஆற்றலை மணிநாகத்திற்குத் தந்தார்.வரபலத்தின் தைரியத்தால் கருடனைக் கண்டு அஞ்சாமல் மணிநாகம் சுற்றித் திரிந்தான்.அவனை எதுவும் செய்ய முடியாது என அறிந்த கருடன் அவனைத் தூக்கிச் சென்று தன் வீட்டில் சிறை வைத்தான்.பல நாட்கள் மணிநாகத்தைக் காணாமையால் நந்திதேவன் சிவனிடம் சென்று முறையிட்டார்..சிவன், "நீ விஷ்ணுவிடம் சென்று மணிநாகனை விடுதலை செய்து கொண்டு வா"என்றார்.
நந்திதேவன் விஷ்ணுவிடம் சென்று தன் வேண்டுகோளைச் சொல்ல..விஷ்ணு கருடனிடம்..மணிநாகத்தை விடுவிக்கச் சொன்னார்.அதனை செய்ய விரும்பாத கருடன்,"சிவன் முதலானோர் எல்லாம்..தமக்கு உதவி செய்பவர்களுக்கும்..வாகனங்களுக்கும் எவ்வளவோ நன்மை செய்கிறார்கள்.பாராட்டுகிறார்கள்.உங்களது வாகனம் நான்.நீங்கள் அசுரர்களுடன் போராட வேண்டுமானால் என் மீது ஏறிக்கொண்டுதான் போர் செய்கிறீர்கள்.நான் இல்லையேல் உங்களால் போர் செய்ய முடியாது"என்றான்.
உடன் விஷ்ணு.."நீ சொல்வது உண்மைதான் என் பாரத்தை சுமக்கும் நீ பெரியவன்.இப்போது என் சுண்டுவிரலை உன் தலையில் வைக்கிறேன்.அதை எவ்வளவு எளிதாக சுமக்கிறாய் என்று பார்க்கிறேன்'என தன் சுண்டு விரலை விஷ்ணு கரிடனின் தலையில் வைத்ததும்..கருடன் தலை தட்டுமின்றி உடலும் நசுங்கியது.
கருடன் தன்னை மன்னிக்குமாறு கூற விஷ்ணு விரலை எடுத்தார்.கருடனின் தலைப்பாரம் குறைந்ததேத் தவிர நசிங்கியத் தலையும்..உடலும் பழைய நிலைக்கு வர்வைல்லை.
கருடனிடம் விஷ்ணு "நீ சிவனிடம் சென்று முறையிடு.அவர் உன் குறையைத் தீர்த்து வைப்பார்" என்றார்.
கருடன், சிவனிடம் சென்ற போது..அவர் கருடனை கௌதமி கங்கையில் 15நாட்கள் முழ்கி எழுமாறு கூறினார்.கருடனும் அவ்வாறு செய்ய குறை தீர்ந்து பழைய உடல் வந்தது.மணிநாகமும் விடுதலை பெற்றான்.அப்பகுதியே "கருட தீர்த்தம்" என்ற பெயரைப் பெற்றது.
Comments
Post a Comment