வாயு புராணம் (சிவ புராணம்) - 22

 சுதநிகாவும்..சகஸ்ரநிகாவும்

------------------------------------------


மன்னன் சுதநிகா தினமும் அந்தணருக்கு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என நினைத்து நூற்றுக்கணக்கான பொற்காசுகளை தானம் செய்தான்.இதனிடையே அவன் இறந்துவிட அவன் மகன் சகஸ்ரநிகா பட்டத்துக்கு வந்தான்.அவன் தகப்பனைப் போல தானம் செய்வதை நிறுத்தி விட்டான்.வருமானம் இழந்த அந்தணர்கள் மன்னனிடம் சென்று..உங்கள் தந்தை எங்களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைத்  ட்ஹேடிக் கொண்டு விட்டார்.நீ ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்று கேட்டனர்.சகஸ்ரநிகா அவர்களைப் பார்த்து..தானத்தைப் பெற்றுக் கொண்டு என் தந்தைக்கு புண்ணியம் தேடித் தந்தீர்களே..இப்போது என் தந்தை எங்கிருக்கீறார்?என்று சொல்ல முடியுமா? என்றான்.அது முடியாது என்றதும்  மன்னனை எப்படியாவது திருப்தியடைய வைக்க வேண்டும் என்பதற்காக..பார்க்கவ முனிவரிடம் சென்ற அந்தணணர்கள்..இறந்த அரசன் எங்கிருக்கின்றான் என்பதை அவர் தன் தவ வலிமையால் அறிந்து சொல்லுமாறு வேண்டினர்.பார்க்கவ முனிவர் சூரியனின் உதவியை நாட, சூரியன் அவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான்.

வழியில் ஒரு அந்தணன் பார்க்கவரைத் தடை செய்தான்."நான் இறப்பதற்கு முன்னால் நீ எனக்கு ஒரு பொற்காசு தர வேண்டியுள்ளது..அதை இப்பொழுது கொடுத்தால் ஒழிய உன்னை மேலே போக விட மாட்டேன்" என்றான்.பார்க்கவரிடம் காசு இல்லாததால்,அவர் புண்ணியத்தில் சிறிது பெற்றுக் கொண்டு மேலே அனுப்பினான்.கடைசியாக நரகத்தின் மிக ஆழமான இடத்தில் இறந்து போன அரசன் பெரும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.ஆச்சரியப்பட்ட முனிவர் மன்னனைப் பார்த்து"நீ அந்தணருக்குத் தானம் செய்து பெரும் புண்ணியத்தைச் சேகரித்தாய் என்றூ கேள்விப்பட்டிருந்தேன்.உனக்கு ஏன் இந்த கதி?" என்று கேட்டார்.


அர்சன், "உழைக்கும் மக்களிடம் வரி என்ற பெயரில் அநியாயமாக பணத்தை சம்பாதித்து..புண்ணியம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கியயில் அந்தணர்களுக்கு கொடுத்தேன்.ஆனால் எந்தப் புண்ணியமும் என்னுடன் வரவில்லை.ஆனால் பாடுபட்டு வரியினைக் கொடுத்த அந்த ஏழை மக்களின் கண்ணீர் பாவமூட்டையாக என்னை வந்து அடைந்தது.அதனுடைய பலனை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றான்.


அதைக் கேட்ட முனிவர், நேரே சகஸ்ரநிகாவிடம் வந்து நடந்ததைக் கூறினார்.மன்னன் உழைப்பவர்களிடமிருந்து பெற்று வந்த கடுமையானவரிகளை நீக்கியதுடன்..தானும் உழைக்க ஆரம்பித்தான். 


(வாயு புராணம் (சிவ புராணம் முற்றும்)

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11