வாயு புராணம் (சிவ புராணம் ) - 18

 அந்தகாசுரன் கதை

-------------------------------

ஒருநாள் சிவன் தனியே அமர்ந்து கொண்டிருந்தார்.அவருக்குத் தெரியாமல் பின்புறமாக வந்த பார்வதி அவரது இரண்டு கண்களையும் பொத்திவிட்டாள்.சிவனின் கண்களைப் பொத்தியதால் பார்வதியின் உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தால்..வியர்வைத் துளிகள் கீழே விழுந்தன. அந்த வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்று கூடி அரக்கனாக உருவாகிக் கூப்பாடு போட்டது.சிவன் கண் விழித்து "யார் உறுமுவது?"எனக் கேட்டார்.கரிய அரக்கன் ஒருவன் கண்கள் இன்றி இங்கும் அங்கும் அலைந்தான்.சிவனது கண்கள் பொத்தப்பட்ட  நிலையில் இந்த அரக்கன் பிறந்ததால்,அந்தகனாகவே இருந்தான்.அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் நிலைத்தது.


ஹிரண்ய நேத்திரன் என்ற அரசன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என சிவனைக் குறித்து தவமிருந்தான்.சிவன் தோன்றி,"உனக்கு பிள்ளைப் பிறக்கும் பாக்கியம் இல்லை.எனவே அவ்வரத்தைத் தர முடியாது.என்றாலும் அந்தகனாகப் பிறந்த அசுரன் என்னுடன் இருக்கின்றான்.அவனை வேண்டுமானால்..நீ பிள்ளையாக எடுத்து வளர்க்கலாம்" என்று சொன்னார்.ஹிரண்ய னேத்திரன் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தகாசுரனை எடுத்து வளர்த்தான்.


ஹிரண்ய நேத்திரன், சிவனைக் குறித்து பெரும் தவம் செய்து யாராலும் வெல்ல முடியாத வரங்களியப் பெற்று,தேவர்களை அங்கிருந்து விரட்டி விட்டான்.கடைசியில் பூமியையே சுருட்டிக் கொண்டு சென்று கடலுக்கடியில் வைத்து விட்டான்.விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனைத் தன் கொம்பினால் குத்திக் கொன்று விட்டு பூமியியத் தன் கொம்புகளூக்கு இடையே வைத்து மேலே கொண்டு வந்து அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டார்.பிறகு ஹிரண்ய நேத்திரனின் மகனாகிய அந்தகாசுரனை அரசனாக்கிவிட்டார்.


இது நிகழ்ந்த பின்னர் ஹிரண்ய நேத்திரன் தம்பியாகிய ஹிரண்ய கசிபு பெரும் வரங்கள் பெற்று தன்னை யாரும் கொல்லமுடியா சக்தி பெற்றதால், தேவர்கள் அனைவரும் ஓடி ஒளியுமாறு செய்து விட்டான்.தேவர்கள் விஷ்ணூவிடம் சென்று முறையிட்டனர்.அவர் சிங்க வடிவம் கொண்டு பல அசுரர்களைக் கொன்றுத் தீர்த்தார்.இறுதியாக அந்த சிம்மம் ஹிரண்ய கசிபுவின் கோட்டைக்குள் நுழைந்தது.ஹிரண்ய கசிபுவின் பல மைந்தர்களில் பிரகலாதனும் ஒருவன்.புத்திசாலியான அவன்,ஒரு சாதாரண சிங்கம் இவ்வளவு பெரிய அழிவினை செய்ய முடியாது..ஆகவே விஷ்ணுவே சிங்க வடிவுடன் வந்திருக்கிறார் என தெரிந்து கொண்டான்.தன் த்னஹ்தையிடம் சென்று சிங்கமாக வந்துள்ளது விஷ்ணு என்றும்,அவரிடம் போர் புரிய வேண்டாம் என்றும் சொன்னான்.ஆனால் கசிபு அதைக் கேட்கும் நிலையில் இல்லை.தன் வீரர்களையெல்லாம் சிங்கத்துடன் போர் புரிய அனுப்பினான்.அசுரர்கள் அனைவரும் மாண்டனர்.கடைசியில் தானே சென்று, தன்னிடம் உள்ள அஸ்திரத்தையெல்லாம் பயன் படுத்திப் பார்த்தான்.அவனுடைய ஆயுதங்கள் சிங்கத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை.இறுதியாக சிங்கம் தன் நகங்களால் கசிபுவின் இதயத்தைப் பிளந்து வென்றது.விஷ்ணு பின்னர் பிரகலாதனுக்கு அரசனாகப் பட்டம் சூட்டினார்


அந்தகாசுரன் சிம்மாசனத்தில் இருக்கும் போது பிரகலாதன் "நீயோ, குடும்பத்து பெரிய தந்தையார்  உன்னை தத்தெடுத்த போது குருடனாகிய நீ எப்படி ஆட்சி செய்ய முடியும்? ஆகாவே உன் ராஜ்ஜியத்தை என்னிடம் கொடுத்து விடு"ஏன்று சொன்னதுடன் அல்லாது அந்தகனை விரட்டி விட்டான்.அந்தகன் காடு சென்று பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தான்.பிரம்மன் எதிர்ப்படாததால் அக்னியை வளர்த்துத் தன் உடம்பிலுள்ள சதைகளையெல்லாம் வெட்டி பலியிட்டான்.கடைசியில் பிரம்மன் வெளிப்பட்டு "என்ன வரம் வேண்டும்?" என்றார்.


அதற்கு அந்தகாசுரன்,"விலங்குகள்,அரக்கர்கள்,அசுரர்கள்,மனிதர்கள்,தேவர்கள் ஆகிய யாராலும் எனக்கு சாவு வரக்கூடாது.விஷ்ணுவும் என்னைக் கொல்ல முடியா வரம் வேண்டும்" என்றான்.


"பிறந்தவர்கள் இறந்தேத் தீர வேண்டும்.உனக்கு எப்படி சாவு வர வேண்டும் என நீயே முடிவு செய்" என பிரம்மா சொன்னதும்..அந்தகன் "என்னை விட மூத்த  ஒருத்தியிடம் நான் விருப்பம் கொள்வேனாயின் அப்போது எனக் தன் மூகு சாவு வரலாம்" எனக் கேட்க.."அப்படியே ஆகட்டும்" என பிரம்மா வரம் தந்தார்.


தன் தவத்தால் கண் பார்வை பெற்று விட்ட அந்தகாசுரன் மூன்று உலகங்களையும் அடைமைப்படுத்தினான்.அனைவரையும் துன்புறுத்தினான்.சில காலம் கழித்து மந்தார மலைக்கு தன் மூன்று சேனாதிபதிகளுடன் சென்றான்.அந்த மலை மிகவும் அழகாக இருந்ததால் அங்கு தங்கவும் செய்தான்.அவனுடைய சேனாதிபதிகள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க சென்ற போது..ஒரு குகையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.அந்த முனிவர், புலித்தோலை இடையில் கட்டி,மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருந்தார்.அவருடைய சடையில் சந்திரன் இருந்தான்.முனிவரின்   பக்கத்தில் ஒரு அழகான் அபெண் அமர்ந்திருந்தாள்.இதைக் கண்ட சேனாதிபதிகள் முனிவரிடம், "துறவியாகிய உனக்கு இவ்வளவு அழகானப் பெண் எதற்கு?எங்கள் அரசனுக்கு இவளைக் கொடுத்து விடு" என்றனர்.


முனிவர் வேடத்தில் இருந்த சிவன், "அப்படியானால் உங்கள் அரசனே வந்து இவளை அழைத்துச் செல்லட்டும்" என்றார்.


முனிவராய் இருந்தவர் யார் என்பதை அறியாதவர்கள்..அப்பெண் பார்வதி என எப்படி அறிவார்கள்?..அவர்கள் அரசனிடம் சென்று சொல்ல,அவனும் ஆசையுடன் புறப்பட்டான்."வயதில் மூத்தப் பெண்ணை நன விரும்பினால் சாவு வரட்டும்" என பிரம்மாவிடம் வரம் பெற்ற அந்தகாசுரன் இறக்கும் காலம் வந்து விட்டது.


அணைத்திற்கும் மூத்தவளாகிய  பார்வதியை விரும்பியதால்..முனிவர் வேடத்தில் இருந்த சிவன் எதிரே வந்து நின்றார். அவனுக்கோ பக்கபலமாக பல அசுரர்களூம்,குருவாகிய சுக்ராச்சாரியரௌம் வந்தனர்.


முனிவர் பக்கம் நந்தி, விஷ்ணு ஆகியோர் போருக்குத் தயாராயினர்.நந்தி பல அசுரர்களை அழித்தார்.அந்தகனின் சேனாதிபதியான விசாகா என்பவன் விஷ்ணு உட்பட அனைத்தையும் விழுங்கிவிட்டான்.இந்நிலையில் சிவன் காளை வடிவம் கொண்டு வந்து விசாகாவின் வயிற்றைக் கிழித்து அனைவரையும் விடுவித்தார்.அசுரர்கள் படைகளைக் கொல்லக் கொல்ல இறந்தவர்களை எழுப்பும் மந்திரத்தைக் கற்ர சுக்ராச்சாரியார் அத்தனை அசுரர்களையும் மறுபடியும் எழுப்பினார்.இதைக் கண்ட சிவன் சுக்ராச்சாரியாரை விழுங்கிட..இறந்தவர் உயிர் பெறும் நிலை மாறியது.


இந்திரனுடைய பாணங்கள், விஷ்ணுவின் கதாயுதம் ஆகியவை அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.சிவன் தன் படைகளை அந்தகன் மீது ஏவினார்.அவனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் கீழே விழுந்ததும் ..ஒவ்வொன்றும் ஒரு அந்தகனாக உருவாகியது.அப்பொழுது சிவன், காளியைப் படைத்து ரத்தம் ஒரு சொட்டுக் கூட கீழே விழாதவாறு குடிக்கச் சொன்னார்.பின் தன் திரிசூலத்தை அந்தகன் மீது செலுத்தி அவனைக் கொன்றார்.போருக்குப் பின் சுக்ராச்சாரியாரை தன் வயிற்றிலிருந்து எடுத்து வெளியே விட்டார்.




.


Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11