விஷ்ணு புராணம் - 20

 நரகாசுரனை வென்ற கிருஷ்ணன்,இந்திரனின் நகரமான அமராவதிக்கு, சத்யபாமாவுடன் சென்றான்.தேவர்கள் வந்து அவர்களை வழிபட்டனர்.இந்திரனின் தாயாகிய அதிதியிட்ம் இருந்து நரகாசுரன் பறித்துச் சென்ற காதணிகளை கிருஷ்ணன் அவளிடம் தந்தான்.சத்யபாமாவையும், கிருஷ்ணனையும் அவள் ஆசிர்வதித்தாள்.


அமராவதியில் இருந்த பாரிஜாத மரத்தைப் பார்த்து அதை துவாரகைக்கு வேரோடு தூக்கிச் செல்ல கிருஷ்ணன் விரும்பினான்.மரத்தை வேருடன் பறித்து கருடனின் முதுகில் ஏற்றினான்.அந்த மரம் இந்திரனின் மனைவி சச்சிக்கு சொந்தமானதாகும்.கிருஷ்ணனையும், சத்யபாமாவையும் சாதாரண மனிதர்கள் என நினைத்த அவள்..தேவர்களையும்,இந்திரனையும்.. கிருஷ்ணனுடன் போரிட வைத்தாள்.தேவர்கள்,குபேரன்,அக்னி,எமன், வருணன்.மிருத்துகள்,அஸ்வினிக்கள் ஆகிய அனைவரும் தோற்று ஓடினார்கள்.இந்திரன் வஜ்ராயுதத்தை கிருஷ்ணன் மீது ஏவினான்.கிருஷ்ணன் சக்கரத்தை ஏவாது, தன் வலது கையால் வஜ்ராயுதத்தியப் பிடித்துக் கொண்டான்.இதைக் கண்ட இந்திரன், கிருஷ்ணன் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.பாரிஜாத மரத்தையும், வஜ்ராயுதத்தையும் திருப்பிக் கொடுத்தான் கிருஷ்ணன்.ஆனால், இந்திரனோ வஜ்ராயுதத்தை மட்டும் வாங்கிக் கொண்டு,பாரிஜாத மரத்தை துவாரகையிலேயே இருக்கட்டும் என்றான்.கிருஷ்ணன் இறந்ததும் அது தானே தேவலோகம் வந்துவிடும் என்றான்


கிருஷ்ணனின் பதினாறு ஆயிரம் மனைவியருக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் மக்கள் தோன்றினர்.அவற்றுள் ருக்மணியின் மகனான பிரத்யும்னன் முக்கியமானவன்.அவன் ருக்மியின் மகளை மணந்தான்.அவர்களுக்கு அநிருத்தன் எனும் மகன் பிறந்தான்.இதனிடையே மகாவலியின் மகனான வானாசுரனுக்கு, உஷா என்றொரு பெண் இருந்தாள்.ஒருமுறை உஷா, மகாதேவனையும், பார்வதியையும் வணங்கி "எனக்கு எப்படிப்பட்ட கணவன் வருவான்?" என்று கேட்டாள்.பார்வதி சொன்னாள்,"வைகாசி மாதம் பௌர்ணமி அன்று உன் கணவ்ன உன் கனவில் காட்சியளிப்பான்" ..அதுபோலவே, உஷா ஒரு கனவு கண்டாள்.ஆனால்..அவன் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.அவளுடைய தோழி சித்ரலேகா, தேவர்கள்..அசுரர்கள் ஆகியோரின் பல படங்களை அவளீடம் காட்டிய போதும்..அப்படங்களீல் உள்ள யாருமில்லை என்றாள் உஷா.பின் அவள் தோழி, பூலோகத்தில் உள்ள அரசகுமாரர்களீன் படங்களைக் காட்டினாள்.அநிருத்தனின் படத்தைப் பார்த்ததும் இவன் தான் தன் கனவில் வந்தவன் என்றாள்.அநிருத்தனை, யார் என அறிந்த தோழி, ரகசியமாக அவனை அழைத்து வந்து உஷாவிடம் ஒப்படைத்தாள்.   


அநிருத்தன்,வாநாசுரன் கோட்டைக்குள் நுழைந்ததும் கொடி இரண்டாக உடைந்தது.ஆயிரம் கைகளையுடைய வானாசுரன்,யாரிடமாவது போர் செய்ய வேண்டும் எனக் கேட்ட போது,மகாதேவன் 'என்று உன் கொடி இரண்டாக உடைகிறதோ அன்று உன் விருப்பப்படி சண்டை செய்யலாம்" என்றார்.அதனால், அநிருத்துடன்,வானாசுரன் போர் தொடுத்தான்.அனிருத்தனுக்குத் துணையாக யாதவர்கள்,பலராமன்.கிருஷ்ணன் ஆகியோர் போரில் ஈடுபட்டனர்.


மகாதேவனும், கார்த்திகேயனும்..வானாசுரன் பக்கம் இருந்தனர்.கிருஷ்ணன் சக்கரம் ஏவ, வானாசுரனின் ஆயிரம் கைகளும் வெட்டப்பட்டன.அவனைக் கொல்ல கிருஷ்ணன் முற்பட்டபோது மகாதேவன் குறுக்கிட்டு..அவனுக்கு உயிர் பிச்சை அளிக்குமாறு கேட்டார்.கிருஷ்ணனும் ஒப்புக் கொண்டான்.இறுதியில் உஷா,அனிருத்தன் இருவரும் துவாரகைக்குச் சென்றனர்

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11