பத்ம புராணம் - 4

 ஆண் - பெண் பன்றிகளின் கதை

----------------------------------------------------

இஷ்வாகு மன்னன் சுதேவா என்ற பெண்ணை மணந்து அயோத்தியை ஆண்டு வந்தான்.ஒருமுறை அவன் வேட்டைக்குப் புறப்பட்ட போது அவன் மனைவி சுதேவாவும் உடன் சென்றாள்.பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு இறுதியாக ஒரு ஆண் பன்றி,அதன் மனைவி பெண் பன்றி..அவற்றின் குட்டிகளாகிய ஆண்,பெண் பன்றிகள் அனைத்தும் ஒன்றாக நின்றிருந்த இடத்திற்கு வந்தனர்.இஷ்வாகுவின் வீரர்கள் அப்பன்றிகளை எதிர்க்க..ஆண் பன்றி பலரைத் தன் கொம்புகளால் குத்திக்  கிழித்து விட்டது.வியப்படைந்த மன்னன் தானே அந்தப் பன்றியின் மீது அம்பெய்திக் கொன்றான்.உடனே பெண் பன்றி சீறிப் பாய்ந்தது.மன்னனின் அம்புப்பட்டு அதுவும் குற்றுயிரும்..கொலை உயிருமாக ரத்தம் வழியக் கிடந்தது.மன்னனின் மனைவி அதன் மீது இரக்கப்பட்டு..அதன் முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க நீறும் கொடுத்தாள்.அப்பெண் பன்றி பேச முயல..சுதேவா அதனிடம் "நீ யார்..உன் கணவன் யார்? "என்றாள்.பெண் பன்றி கூறத் தொடங்கியது.


ஒரு காலத்தில் சுமேரு மலயுச்சியில் புலஸ்தியன் என்ற முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார்.ரங்க வித்யாதரன் எனும் கந்தர்வன் அருகில் நின்று பாடிக் கொண்டிருந்தான்.முனிவர் தவத்திற்கு இது இடையூறாக இருக்க..அவர் அவனை அழைத்து, "நீ அழகாக பாடுகிறாய்.ஆனால் என் தவத்திற்கு  இடையூறாய் உள்ளது.ஆகவே..வேறு எங்காவது சென்று பாடு" என்றார்.அதற்கு கந்தர்வன்."சுமேரு மலை அனைவருக்கும் சொந்தம்.பாடுவது என் உரிமை.அதைக் கேட்க நீயார்? வேண்டுமானால்..நீ வேறு எங்கேனும் சென்று தவத்தை மேற்கொள்" என்றான்.முனிவரும் வேறொரு பகுதிக்குச் சென்று தவத்தைத் தொடங்கினார்.அவர் அங்கே சென்றதும்..கந்தர்வன் ஒரு குறும்பு செய்ய நினைத்தான்.


ஒரு பன்றி உருவெடுத்து..புலஸ்திய முனிவர் சென்ற இடம் சென்று தோன்றத் தொடங்கினான்.தவம் கலைந்த் முனிவர்..பன்றி உருவில் வந்துள்ளது கந்தர்வனே என அறிந்து..சினம் கொண்டு "நீ பூமியில் பன்றியாய் பிறப்பாயாக"என சாபமிட்டார்.சாபம் கண்டு பயந்த வித்யாதரன் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்."இஷ்வாகு மன்னனின் அம்பு உன்னைக் கொல்லும் அன்று நீ பழைய கந்தர்வன் வடிவம் அடைவாய்"ஏன்று விமோசனத்திற்கான வழியைச் சொன்னார்.இப்போது இஷ்வாகு மன்னரின் அம்பு பட்டுஎன் கணவன் உயிர் பிரிந்தது"என்றது பெண் பன்றி.பின் தன் கதையைக் கூற ஆரம்பித்தது.

ஓரு காலத்தில் ஸ்ரீபுரம் எனும் ஊரில் வசுதத்தா எனும் பிராமணன் வசித்து வந்தான்.அவனுக்கு சுதேவா என்ற மகள் இருந்தாள் (மன்னனின் மனைவி அல்ல..இவள் வேறு).அவன் நல்ல கல்வியறிவு உள்ளவளாக இருந்தும்..ஒரே மகள் என்ற காரணத்தால்..அவளுக்கு அளவிற்கு அதிகமாகச் செல்லம் கொடுத்து அவளை ஒரு அகங்காரியாக வளர்த்தான்.எவ்வளவோ பேர் அவளை மணமுடிக்க வந்தும் ..அவன் மறுத்து விட்டான்.தன்னுடனேயே அவளை வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பியவன் அவளைசிவசர்மா எனும் ஒரு ஏழை பிராமணனுக்கு மணமுடித்து,அவர்களைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டான். 


கணவனை மதிக்காத சுதேவா..அவனை பலவிதத்தில் கொடுமைப் படுத்தினாள்...ஏசினாள்.அவளின்  கொடுமையினைத் தாங்காத சிவசர்மா வீட்டை விட்டு ஓடி விட்டான்.வசுதத்தாவின் மனைவி அவனிடம்"மகளை செல்லம் அதிகம் கொடுத்து வளர்த்ததால்தான் இப்பிரச்னை.அவள் இந்த் அவீட்டில் இருப்பது நல்லதல்ல..வீட்டை விட்டு அனுப்பி விடு"என்றாள்.வசுதத்தாவும்..மனைவியின் சொல்லில் இருந்த உண்மையினை உணர்ந்து அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டான்.


சுதேவா..வீடு வீடாக பிச்சை எடுத்து பிழைத்து வந்தாள்.ஒருநாள் ஒரு ராஜ்ஜியத்துக்குள் வந்தவள்..செல்வந்தன் ஒருவன் வீட்டில் பிச்சைக் கேட்க..அந்த செல்வந்தன்..தன் மனைவியை அழைத்து"மங்களா..யாரோ பசி என்கிறார்கள் உணவு கொடு "என்றான்.இவன் குரலை வைத்து சிவசர்மாவைக் கண்டு கொண்டாள் சுதேவா.சிவசர்மாவும் சுதேவாவைப் புரிந்து கொண்டான்.பின் மங்களாவிடம்..வந்திருப்பது தன் முதல் மனைவி எனக் கூற மங்களாவும் சுதேவாவை நன்குக் கவனித்துக் கொண்டாள்.ஆனால் சுதேவோ தன் குற்றத்தை எண்ணி எண்ணி வருந்தி உயிரினை விட்டாள்.பின் நாகலோகத்தில் பல தண்டனைகள் அனுபவித்து பின் கரையான்,பூச்சி வாழ்க்கை என எல்லாம் பிறந்து படிப்படியாக முன்னேறி பெண் பன்றியாக பிறந்தாள்.அந்த பன்றி நான் தான்"என தன் வரலாற்றைப் பெண் பன்றிக் கூறியது.பின் தேவகணங்கள் வந்து சுதேவாயும்,கந்தர்வனையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றன.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11