பத்ம புராணம் - 12

 மீண்டு வந்த மகன் கதை

-----------------------------------------

துவார யுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தீனநாதன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.எல்லா செல்வங்கள் நிரம்பியிருந்தும் குழந்தைச் செல்வம் இல்லாமல் மிக மனம்  வருந்தி கால்வ முனிவரிடம் தன் குறையைச் சொல்லி வருந்தினான்..அவர் நரபலி இடும் ஒரு யாகத்தைச் செய்து அதில் உறுப்பு அழகுகள் சிறிதும் குறைவில்லாத ஒருவனை பலியிடுவதனால் உனக்குக் குழந்தைப் பிறக்கும் என்று கூறினர.உடன் அரசனின் ஆணைப்படி நாடு முழுதும் பலியிடுவதற்குரிய ஒருவனைத் தேடிச் சென்றனர் பணியாளர்கள்.இறுதியாக தாசபுரா எனும் இடத்தில் கிருஷ்ண தேவா-சுசீலா  என்பவர்களுக்குப் பிள்ளைகளாக்ப் பிறந்திருந்த மூண்று பேரைக் கண்டதும் ,திருப்தியடைந்து அனைத்து அழகுகளும் கொண்ட மூவரையும் அரசனிடம் அழைத்துச் செல்வது என்ற முடிவுக்கு வந்தனர்.தாய்-தந்தையர் எவ்வளவு கேட்டும் அவர்கள் இரக்கம் காட்ட மறுத்தனர்.இறுதியாக மூன்றில் ஒருவனும்,நடுமகனாகிய ஒருவனை அழைத்துச் செல்ல ஏற்பாடாயிற்று.அவனை அழைத்துக் கொண்டு  பணியாளர் சென்றதும் ,அத்துயரம் தாங்காமல் தாய்-தந்தையர் கண்களை இழந்தனர்.பணியாளரும்,பலிக்குரியவனும் செல்லும் வழியில் விசுவாமித்திரர் ஆசிரமம் இருந்தது.அவர்களைப் பார்த்த விசுவாமித்திரர், "நீங்கள் யார்? வருத்தத்துடன் இருக்கும் இந்த இளைஞன் யார்?"எனக்  கேட்டார்.பணியாளர்கள் விளக்கமாகக் கூறினார்கள்.விசுவாமித்திரர்,"இந்தப் பையனை விட்டுவிட்டு அதற்கு பதிலாக என்னை அழைத்துச் செல்லுங்கள்"என்றார்.பலியாவதற்கு அழகான இளைஞன் தேவையேத் தவிர ,ஒரு கிழவனை அழைத்துப் போவது சரியில்லை என சொல்லி பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.

ஆனாலும் விசுவாமித்திரர் அரசரிடம் சென்று "நரபலி இடுவது தேவையில்லா ஒன்று"என விளக்கி தானே ஒரு யாகத்தை செய்து,அவர்களுக்கு ஒரு அழகான குழந்தையினைப் பிறக்கச் செய்தார்.பலிக்காக அழைத்து வரப்பட்டவன் திரும்பச் சென்றான்.அவன் வரவைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவன் பெற்றோர்க்குக் கண் பார்வை மீண்டும் கிடைத்தது.விசுவாமித்திரர் ஒரு மாபெரும் முனிவர் என்பது விளங்கிற்று.


பின் குறிப்பு

---------------------

பத்ம புராணம் பலப்பல குட்டிக் கதைகளைப் பேசுகிறது.இவற்றைப் பெரும்பாலும் ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்களைச் சொல்கிறது.விரதம் இருப்பதன் சிறப்பை அறிந்து அதை மேற்கொள்வதும்,எதிர்பாராது அது ஏகாதசி எனத் தெரியாது பட்டினி இருந்தாலும் விஷ்ணுலோகம் செல்லலாம் என்பதை பொதுவாகக் கூறுகிறது. 

அடுத்துள்ள சில கதைகள் விஷ்ணு பக்தி எனத் தனியே இல்லாவிட்டாலும் விஷ்ணுவிற்கு அபிஷேகம் செய்த தண்ணீரைக் குடித்தவன் விஷ்ணுலோகம் போகலாம் எனக் கதைகள் கூறுகிறது.துவாரயுகத்திலும்,திரேதாயுகத்திலும் நடந்தவை என்று புராணம் கூறுகிறது.


பத்ம புராணத்தின் முடிவுரையை அதைத் தொடங்கிய உரோமஹர்ஷனரே எடுத்துச் சொல்கிறார்.பத்ம புராணத்தில் ஒரு பாடலைப் படித்தால்..அல்லது கேட்டால் ஒருநாள் செய்த பாவம் விலகும்.ஒரு அத்தியாயத்தை படித்தாலோ/கேட்டாலோ ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.புராணம் முழுதும் படித்தாலோ..கேட்டாலோ  ஒரு அசுவமேதயாகம் செய்த பலன் கிட்டும்...என்று உரோமஹர்ஷனர் கூறியதைக் கேட்ட முனிவர்கள் திருப்தியுடன் சென்றனர்.


(பத்ம புராணம் முடிந்தது.அடுத்து விஷ்ணு புராணம் சிறு இடைவெளிக்குப் பின் தொடரும்)    

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11