பத்ம புராணம் - 10

 ஆலமரத்தனடியில் அமர்ந்திருந்த சாயவனன், இக்கிளிகளின் உரையால்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டு ,தந்தைக் கிளியான குஞ்சலாவைப் பார்த்து, "நீ யார்? எப்படி இவ்வளவு விஷயங்களை அறிந்திருக்கிறாய்?என்று கேட்டவுடன் குஞ்சலா தன் கதையைக் கூற ஆரம்பித்தது.


வித்யாதரன் என்ற பிராமணன் வாசு சர்மா,நாம சர்மா,தர்ம சர்மா எனும் மூன்று பிள்ளிகளுடன் வாழ்ந்து வந்தான்.முதலிரண்டு பிள்ளைகளும் தந்தையின் அடிச்சுவட்டைப் பின் பற்றி சாத்திரங்களைப் படித்தனர்.ஆனால் மூன்றாவது மகனாகிய தர்ம சர்மாவிற்கு இதில் நாட்டம் இல்லை.சோம்பேறியாகவேப் பொழுதினைப் போக்கிக் கழித்துவிட்டான்.நாளாவட்டத்தில் மக்கள் அவனை வெறுக்கத் தொடங்கினர்.மக்களின் வெறுப்புணர்ச்சி ஒரு எல்லையைக் கடந்ததால் மணம் நொந்து போன தர்மசர்மா எப்படியாவது கல்வி கற்க வேண்டுமென நினைத்து ஒரு தக்க அறிஞரைத் தேடி அலைந்தான்.நல்லாசிரியர் கிடைக்கவே தர்ம சாத்திரங்களைக் கற்றுக் கொண்டான்.அப்போது ஒரு வேடன் ஒரு கிளியைப் பிடித்துக் கொண்டு வந்து..தர்ம சர்மாவிடம் கொடுத்தான்.அன்பு செலுத்த யரௌம் இல்லாத நிலையில் இருந்த தர்ம சர்மா..தன் அன்பு முழுதும் அக்கிளியிடம் செலுத்தி வந்தான்.துரதிருஷ்டவிதமாக அக்கிளியை ஒரு பூனை கொன்றுவிட்டது.எல்லை மீறிய துயரம் அடைந்த தர்ம சர்மா   கிளியையே நினைத்துக் கொண்டிருந்தான்.அவன் சாக நேர்ந்தபோது கூட கிளியின் நினைவாகவே இருந்தான்.கிளியின் நினைவோடு இறந்ததால் மறுபிறப்பில் கிளியாகப் பிறந்தான்.அந்தக் கிளி வேறுயாருமில்லை நான்தான் என்றுதந்தை கிளி குஞ்சாலா ..சாயவனனிடம் சொல்லி முடிந்தது.


விஷ்ணுலோகம் சென்ற எலியின் கதை

-----------------------------------

திரேதாயுகத்தில் ஒரு விஷ்ணுவின் கோயிலில் ஒரு எலி வாழ்ந்து வந்தது.அந்த ஊரில் வாழும் ஒரு பக்தன் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றிவிட்டுச் சென்றான்.அவன் போன பிறகு திரி கொஞ்சம் மங்கி எரிந்தது.ஆனால் விளக்கில் இருந்த நெய் வாசம் வெகு தூரம் பரவியது.இந்த வாசனையால் இழுக்கப்பட்ட எலி, மெல்ல வந்து விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க ஆரம்பித்தது.அதன் பயனாக திரி..சற்று உயரத்துக்கு வர..திடீரென அதிகவெளிச்சம் பரவியது.அதிக வெளிச்சத்தால் விஷ்ணுவின் சிலை "பளீச்" என தெரிய ஆரம்பித்தது.சிலையைச் சுற்றியிருந்த இருள் அகன்றது.காலாந்திரத்தில் விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துச் சென்ற எலியை ஒரு பாம்பு கடிக்க எலி இறந்தது.யமதூதர்கள்  வந்து எலியின் ஆவியைக் கட்டி இழுத்துக் கொண்டு யமலோகம் செல்லப் புறப்பட்டனர்.திடீரென விஷ்ணுவின் பணியாளர்கள் அங்கு வந்தனர்."நீங்கள் எல்லாம் என்ன காரியம் செய்கிறீர்கள்? இந்த எலி  ஒருநாள் கோயிலுக்குள் இருக்கும் விளக்கைத் தூண்டி, விஷ்ணுவின் சிலைக்கு மேல் அதிகமாக ஒளி படரச் செய்தது.இந்தத் தொண்டினால் அது செய்த பாவ்னகள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன"ஏன்று கூறிவிட்டு எலியின் ஆவியை விஷ்ணு லோகத்திற்கு அழைத்துச் சென்றனர்.பலகாலம் விஷ்ணுலோகத்தில் இருந்து மகிழ்ந்த அந்த எலி பின்னர் ஒரு அரசகுமாரியாகப் பிறந்தது.

விஷ்ணு கோயிலின் விளக்கேற்றுவதால்  ஏற்படும் மிகப் பெரிய பலனை இக்கதை தெரிவிக்கிறது. 


திரேதாயுகத்தில் ஸ்ரீதரன் என்ற அரசனும், ஹேமப் பிரபாவதி என்ற அரசியும் சுகமாக வாழ்ந்து வந்தனர்.எல்லா சுகம் இருந்தும்..தங்களுக்குப் பிள்ளை இல்லையே என்ற கவலை வாட்டி வதைத்தது..ஒருமுறை ஸ்ரீதரன் வேத வியாசரை சந்தித்து "தனக்கு ஏன் பிள்ளை இல்லை" என்று கேட்டான்.

"உன்னுடைய பூர்வ ஜன்மத்தில் சந்திரன் என்ற பெயரையுடைய பிராமணனாக இருந்தய.இப்போதுள்ள உன் மனைவி சங்கரி என்ற பெயருடைய உன் ம்னைவியாக வாழ்ந்தாள். நீங்கள் இருவரும் ஒரு காரியமாக அவசரமாகப் புறப்பட்டுச் செல்கியயில் ஒரு குழந்தை தண்ணீரில் மூழ்கி இறக்கும் நிலையில் இருந்தது. உங்கள் காரியமே முக்கியம் என சட்டை செய்யாமல் போனீர்கள்.அதனால் இந்த ஜன்மத்தில் உங்களுக்கு பிள்ளை இல்லாமல் போய் விட்டது"என்றார்.

அதுகேட்ட ஸ்ரீதரன்,"இப்போது என்ன செய்யலாம்?" என்று கேட்க, பூசணிக்காயும், பொன் முதலானவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்தால் குழந்தை பிறக்கும் என்றார். ஸ்ரீதரன் அவ்வாறே செய்து அழகிய பிள்ளை பெற்று வாழ்ந்தான்.இக்கதை தர்மத்தின் பயனைக் கூறுகிறது.  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11