விஷ்ணு புராணம் - 6

 பிற உலகங்கள் பற்றி

-------------------------


பூமியிலிருந்து பல மைல்கள் அப்பால் உள்ளது சூரிய உலகம்.


அடுத்து ச்ந்திரன்,செவ்வாய்,புதன், வியாழன்(குரு),வெள்ளி (சுக்கிரன்),சனி,சப்தரிஷி,துருவ மண்டலங்கள் உள்ளன.


சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தியச் சுற்றி வருகின்றன.துருவலோகத்திற்கு மேல் ஞான உலகமும்,அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் ட்ஹேவளோகமும் உண்டு.அது இரண்டாபப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம்,வைகுண்ட லோகம் உள்ளன.


துருவ உலகம் முதல் சத்திய உல்கம் வரை உள்ள லோகங்கள் யுக முடிவில் அழிவதில்லை.


இவற்றிற்குக் கீழே உள்ள பூ,புவர்,சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன.உலகங்களில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிட்ட ஏழு உல்கங்களும் இவற்றிற்குக் கீழே உள்ள ஏழு பாதாள உலகங்களையும் அடக்கியுள்ளது.கீழும், மேலுமாக இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கியுள்ள அண்டம் இருளால் சூழப்பட்டுள்ளது.அவ்விருளைக் கடந்து தண்ணீரும்,நீரைக் கடந்து நெருப்பும்,நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11