விஷ்ணு புராணம் - 8

 வேத வியாசர் பலர்

-------------------------------

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வேதவியாசராக உருவெடுத்துள்ளார்.உருவெடுத்தப் பின்னர் வேதங்களை வகைப்படுத்தியுள்ளார்.வைவஸ்த மன்வந்திரங்களாகிய இந்த காலகட்டத்தில் வேதவியாசர் வேதங்களை 28மூறை வகைப்படுத்தி விட்டார்.இதுவரை தோன்றியுள்ள வேதவியாசர்கள் இருபத்தெட்டுப் பேர் ஆவர்.

அவர்கள், சுவயம்பு வியாசர்,பிரஜாபதி வேத வியாசர்,பிருகஸ்பதி வேத வியாசர்,மிருத்யூ வேத வியாசர்,பரத்வாஜ வேத வியாசர்,கிருஷ்ண துவைபாயன வியாசர் முதலானோர்.விஷ்ணு புராணத்தின் படி வரப்போகும் வேத வியாசர் துரோணரின் மகனான அசுவத்தாமன் ஆவார்.இவர் சிரஞ்சீவி ஆவார்.


"ஓம்" எனும் பிரணவம் நான்கு வேதங்களின் சாரம் எனப்படும் பரப்பிரம்மம் எங்கும்,எப்பொழுதும்,எப்பொருளிலும் நிறந்திருந்தாலும் காண்பவர்க்குரிய மன வளர்ச்சி,அறிவு முதிர்ச்சி ஆகியவற்றிற்கேற்ப பல விஷயங்களாகத் தெரிபவர்.ரிக், யஜூர்,சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ஒரு லட்சம் பாடல்கள் உள்ளன.கிருஷ்ணதுவைபாயன வேத வியாசர் இந்த வேதங்களைப்  பிரிக்க வேண்டுமென முடிவு செய்ததும்,அவரைச் சுற்றி நான்கு முக்கியமான சீடர்கள் அமர்ந்திருந்தனர்.


பைலா என்பவர்க்கு ரிக் வேதமும்,வைசம்பாயனருக்கு யஜூர் வேதமும்,ஜைமினிக்கு சாமமும்,சுமந்துவிற்கு அதர்வணமும் கற்பிக்க்ப பட்டன.கிருஷ்ண துவைபாயன வியாசர் உரோமஹர்ஷனருக்குப் புராணங்களைக் கற்பித்தார்.  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11