விஷ்ணு புராணம்


 

பதினெண் புராணங்களில் இப்புராணம் மிகவும் முக்கியமான ஒன்று என்பர். இந்தப் புராணத்திலும் பின்னர் வரும் பாகவத்ப் புராணத்திலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் வரலாறு மிக விரிவாகப் பேசப்படுகிறது.ஆதி சங்கர பகவத் பாதாள் தனது மகா பாஷ்யத்தில் விஷ்ணு புராணத்தில் இருந்து பலமேற்கோள்களை எடுத்துக் கூறுகிறார்.

ஆதி சங்கரர் காலம் 8ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் முடிவவாகும்.எனவே இந்தப் புராணம் அவரது காலத்திற்கு முந்தியே 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் மக்களிடையே பரவி இருக்க வேண்டும்.5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய காலம் என்பதால் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கருவூலம் இப்புராணங்கள் என்ற கருத்திற்கு தடையேதுமில்லை.


இப்புராணம் 6000 பாடல்களைக் கொண்டதாகும்.இப்புராணம் வியாசரின் மகனான பராசர முனிவரால் சொல்லப்பட்டதாகும்.மைத்ரேயி முனிவர் பராசர முனிவரிடம் பாரத நாட்டு தோற்றம் பற்றிக் கேட்க .பராசரர் விடை சொல்வது போல அமைந்தது இப்புராணம்.


இப்புராணம் ஆறு பகுதிகளாகவும் 126 அத்தியாயங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளது.நான்காவது பகுதி மட்டும் உரைநடையில் உள்ளது. இந்நாட்டு பழங்கால மன்னர்களின் வம்சாவளிப் பற்றிக் கூறுவதாகும்.


ஒரு புராணத்துக்கான ஐந்து பண்புகளும் விஷ்ணு புராணத்தில் முழுனையாக அமைந்துள்ளன.

முதல் பகுதி..பிரபஞ்சத் தோற்றம் பற்றியது

இரண்டாம் பகுதி..இந்நாட்டுப் புவியியல் பற்றியும்,வானியல் பற்றியும் கூறுவது

மூன்றாவது பகுதி..மன்வந்திரங்கள்,யுகங்கள் பற்றி விள்ககுவதாகும்..அதனுடன் இந்நாட்டின் சமுதாய அமைப்பு,நால்வகை வர்ணம் ஆகியவைப் பற்றி பேஸுவதாகும்.

நான்காவது பகுதி..சூரிய-சந்திர வம்ச மன்னர்கள் பற்றிய பட்டியலைத் தருவதாகும்.

ஐந்தாவது பகுதி..கிருஷ்ணனின் வரலாற்றுப் பகுதியும்..குப்த மன்னர்கள் பற்றிய பகுதியும் ஆகும்.


ஆறாவது பகுதி கலியுகத்தில் மக்கள் வாழ்க்கை பற்றி சொல்கிறது


பராசர முனிவரைப் பார்க்க ஒருமுறை மைத்ரேய முனிவர் வந்தார்.மைத்ரேயர் பராசரரைப் பார்த்து,"படைப்பு எப்படித் தோன்றியது என்பதைத் தாங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்" என வேண்ட பராசரர் சொல்லத் தொடங்கினார்.


(இப்புராணம் கிட்டத்தட்ட 20 தினங்கள் தொடர்ந்து வெளியாகும்.பொறுமையாகப் படிப்பவர்களுக்கு மட்டுமே இப்பதிவுகள்)


(தொடரும்)

Comments

Popular posts from this blog

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11