விஷ்ணு புராணம் - 3

 லட்சுமியின் தோற்றம்

----------------------------

மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுதும் சுற்றித் திரிந்தார்.ஒருநாள் ஒரு அழகியப் பெண்..வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள்.அம்மாலையின் மீது விருப்பம் கொண்ட முனிவர் அதைக் கேட்டார்.அப்பெண்ணும் மகிழ்வோடு அம்மாலையை அவ்ருக்குத்தந்தாள்.தலையில் அதை அணிந்து கொண்டு பல இடங்களுக்குச் சுற்றித் திருந்தார் அவர்.ஒருமுறை தன் யானையாகிய ஐராவதத்தில் இந்திரன் ஊர்வலம் வந்தான்.துர்வாசர் தன் தலையில் இருந்த அம்மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார்.அதன் சிறப்பினை அறியா இந்திரன்,அம்மாலையை வாங்கி யானையின் தந்தத்தின் மீது வைத்து விட்டான்.அற்புதமான வாசனையினைக் கண்ட ஐராவதம்...மேலும் வாசனையை அனுபவிக்க ..மாலையின் பக்கமாகத் தன் தும்பிக்கியயை நீட்டிற்று.ஆனால்..அம்மாலை துதிக்கைக்குக் கீழே விழுந்து விட்டது.

மண்ணில் விழ்ந்த மாலையைக் கண்டு துர்வாசர் சினம் கொண்டார்.இந்திரன் எவ்வளவு  மன்றாடியும்,மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் தணியவில்லை..லட்சுமி உன்னைவிட்டுப் போய் விடுவாள் என சாபமிட்டார்.இந்திரன் அமராவதி திரும்பச் சென்றதும்..அந்நகரமே பாழ்பட்டு, சீரழிந்து காணப்பட்டது.காரணம்..லட்சுமி அவனை விட்டுப் போய் விட்டாள்.இந்திரன்,தேவர்களுடன் பிரம்மனிடம்  முறையிட..பிரம்மனும் இவ்விஷயத்தை விஷ்ணுவிடம் சென்று தீர்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டார்.


இந்திரன் அனைவரையும் அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றான். விஷ்ணுவும்  பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உண்டால் அசுரர்களை வெல்லலாம் என்றார்.அப்படியே செய்வதாக முடிவாயிற்று.ஆனால்..பாற்கடலை தேவர்கள் மட்டும் கடைய முடியாது..அசுரர்கள் உதவியும் தேவை.எனவே அசுரர்களை அழைத்து உதவச் சொன்னால் கிடைக்கும் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்குத் தருவதாக தேவர்கள் பொய் சொன்னார்கள்..இதை அறியா அசுரர்கள்..மேரு மலையை மத்தாக்கி..வாசுகியை நாணாக்கி,திருமால் கொண்ட மிகப் பெரிய கூர்மை முதுகில் மேருமலையினை நிறுத்திக் கடைந்தார்கள்.வாசுகியின் தலைப் பாகத்தை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பார்த்துக் கொண்டனர்.கயிறாகப் பயன் படுத்தப் பட்டதால் வாசுகி பெரும் துன்பமுற்று விஷப் புகையைக் கக்கிற்று.அது ஆகாயத்தில் சென்று மழையாய்ப் பெய்தது.அதற்கு அடுத்தது முதலில் சுரபியும் (பசு), அடுத்து வருணிஎனும் தேவதையும் தொடர்ந்து பாரிஜாதமாயும் அடுத்து அப்சரஸ்களும் அடுத்து சந்திரனும் வந்தனர்.

 இவற்றோடு பல தீய பொருள்கள் தோன்றின.இதற்குப் பிறகு தன்வந்திரி அமுதக் கலசத்தை ஏந்துக் கொண்டு வந்தார்.தேவர்களும், அசுரர்களும் மகிழ்ந்தனர்.தன்வந்திரியை அடுத்து அழகிய தாமரைப் பூவில் ஒளி பொருந்திய லட்சுமி கையில் ஒரு தாமரை மலரை ஏந்திக் கொண்டுத் தோன்றினாள்.திசையானைகள் எட்டும் லட்சுமிக்கு அபிஷேகம் செய்தன.விஸ்வகர்மா லட்சுமிக்கு ஏற்ற ஆபரணங்களைச் செய்து வந்தார்.லட்சுமி, விஷ்ணூவை தழுவிக் கொண்டதாலும்,தேவர்களுக்கு புன்சிரிப்பைச் செய்ததாலும் லட்சுமியின் கிருபை தேவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

இது நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தன்வந்திரியின் கையில் இருந்த அமுத கலசத்தை அசுரர்கள் பறித்துக் கொண்டனர்.என்ன செய்வது?எனத் தெரியாமல் தேவர்கள் நின்ற போது..விஷ்ணூ ஒரு அழகியப் பெண் வடிவெடுத்து அசுரர்களை மயக்கி,அமுத கலசத்தைக் கொண்டு வந்து..தேவர்கள் உண்ணுமாறு செய்தார்.அமிர்தம் உண்ட தேவர்கள் அதிக வலுவினைப் பெற்று  அசுரர்களை விரட்டி அடித்தனர்.பின் லட்சுமியை வணங்கிய இந்திரன் சில வரங்களைப் பெற்றான்.முதலாவது லட்சுமி தேவருலகம் விட்டுப் போகக் கூடாது.இரண்டாவது யார் லட்சுமியை வணங்கினாலும் அவள் அவர்களுக்கு அருள் தர வேண்டும் என்பதாகும். (தொடரும்)  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11