பத்ம புராணம் - 8

 மூன்றாவது கிளி சொன்ன கதை

-----------------------------------------

தந்தைக் கிளி தனது மூன்றாவது மகனான விஞ்வலாவைப் பார்த்து "நீ இரை தேடிப்போன இடத்தில் ஏதேனும் அதிசயம் உணடா?"என்று கேட்டது.


அதற்கு அக்கிளி சொன்னது"ஆம்.தந்தையே நான் இரைதேட சுமேரு மலையில் அனந்தகானம் என்ற வனம் பக்கம் தினம் செல்கிறேன்.மிக அற்புதமான அவ்விடத்தில் இயற்கை எழில் பூத்து குலுங்குகிறது.ஒரு அருமையான் அகுள்மௌம் அங்கு உண்டு.அந்தக் குளத்தில் பூக்கள்,அன்னப்பறவைகள் ஆகியவை நிறந்துள்ளன.கந்தர்வர்கள்,வித்தியாதரர்கள்,ஏனைய தேவர்கள் ஆகிய பலரும் தினமும் அங்கு வருகிறார்கள்.குளத்தின் பக்கத்தில் ஒரு மரத்தில் அமர்ந்து குளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.திடீரென மிக ஒளி பொருந்திய விமானம் ஒன்றில் ஒரு அழகிய இளைஞனும்,ஒரு பெண்ணும் வந்து இற்னகினார்கள்.ஒளி படைத்த தேகமுடைய அவ்விருவரும் அக்குளத்தில் நீராடி மிக அற்புதமான உடைகளை அணிந்து கொண்டனர்.கையில் ஆளுக்கொரு கத்தியை ஏந்திக் கொண்டனர்.இந்த அமைதியான சூழலில் கத்தி எதற்கு என நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது..ஒரு கொடூரமானக் காட்சியினைக் கண்டேன்.குளத்துக் கரையில் இரு சடலங்கள் கிடந்தன.அவர்கள் யார் என நான் பார்த்த போது வியந்தேன்.விமானத்திலிருந்து இறங்கிய அந்த இருவரின் முகம்..அங்க அடையாளங்கள் அப்படியே அந்த சடலங்களில் இருந்தன. நான் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருந்த போதே..மிகவும் கொடுமையான செயல் ஒன்று நடந்தது.அந்தப் பெண்,பெண் சடலத்தின் சில பகுதிகளை வெட்டித் தின்றுக் கொண்டிருந்தாள்.அந்த ஆண்..ஆண் சடலத்தின் சில பகுதிகளை வெட்டித் தின்றுக் கொண்டிருந்தான்.திடீரென சில அழகியப் பெண்கள் அங்கு வந்து இவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து எள்ளி நகையாடினர்.பேய் வடிவம் கொண்ட இரு பெண்கள்,"எங்களுக்கும் கொஞ்சம் கொடு" என் இவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.வெட்டிய தசைடைத் தின்று முடித்ததும்,கத்தியை வைத்து விட்டு அவ்விருவரும் விமானத்தில் சென்று விட்டனர்.இந்தக் கொடுமையான நாடகம் தினமும் நடக்கிறது.இதன் அடிப்படை என்ன?அதை விளக்க வேண்டும்." .

 

"சொல்கிறேன்" என்று தந்தைக் கிளி சொல்ல ஆரம்பித்தது,"சோழநாட்டைச் சுவாகு என்ற மன்னன் ஆண்டுக் கொண்டிருந்தான்.அவன் மனைவி பெயர் தார் க்ஷி.மன்னன் தன் குருவாகிய ஜைமினி முனிவரின் உதவியுடன் பல யாகங்களைச் செய்தான்.ஒருநாள் ஜைமினி முனிவர், அரசனைப் பார்த்து,"இந்த யாகங்கள் செய்வதை விட அதிக புண்ணியம் தான, தருமம் செய்வதல கிடைக்கும்.ஆகவே இவற்றைச் செய்வதைவிட  என்போன்றோர்களுக்கு தானம் கொடுப்பது மிக நல்லது"என்றார்.அரசர் குருவைப் பார்த்து, "அவ்வாறு செய்வதால் எனக்கு என்ன பயன் கிட்டும்?" என்றான்.அதற்கு குரு,"உனக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும்.அப்புண்ணியத்தின் உதவியால் நீ சொர்க்கலோகம் செல்லலாம்"என்றார்.


"நான் சொர்க்கலோகம் போனால் அங்கேயே நிலையாக இருக்க முடியுமா?"


"அது முடியாது.உன் புண்ணியம் தீர்ந்ததும் மறுபடியும் உலகில் பிறந்துதான் ஆக வேண்டும்"


அதைக் கேட்ட அரசன்,"தற்காலிகமான பலனை அளிக்கும் இந்தப் புண்ணியம் எனக்கு வேண்டாம்"என்று கூறிவிட்டன.பின்..நிலையான இன்பத்தை அடைய என்ன வழி என ஆராய்ந்து, விஷ்ணுவை தியானிப்பதுதான் நிலையான இன்பம் தரும் என கண்டு கொண்டான்.உடனே அரசை துறந்துவிட்டு,அவனும்..அவனது மனைவியும் காடு சென்று விஷ்ணுவை தியானித்து கடும் தவம் இருந்தான். உரிய காலத்தில் அவர்கள் இருவரும் இந்த உடலை நீத்து விஷ்ணு லோகம் சென்றனர்.மிக அற்புதமான அந்த உலகத்தில் வாழத்தொடங்கிய அவர்களுக்கு ஒரு பிரச்னை உண்டானது.அங்கு வாழ்ந்த மற்றவர்கள் எதுவும் உண்பதில்லை.தண்ணீர் பருகுவதில்லை.காரணம் அவர்களுக்கு பசி,தாகம் கிடையாது.ஆனால்..அரசனும், அவன் மனைவியும் பசி, தாகம் வாட்டியது.செய்வதறியாது அவர்கள் வாமதேவன் என்ற முனிவரின் பர்ணசாலைக்குச் சென்று அவரிடம் தங்கள் பிரச்னைகளைக் கூறினார்கள்.முனிவரும், "நீங்கள் கடும் தவமிருந்தது உண்மை..அதனால் விஷ்ணுலோகம் வந்தீர்கள்.ஆனால், நீங்கள் உயிருடன் இருக்கும் ஏழைகளின் பசியையோ,தாகத்தையோ போக்க மறந்துவிட்டீர்கள்.அவ்வாறு பிற உயிர்களின் பசி, தாகத்தைப் போக்கியிருந்தால் இப்போது அது உங்களுக்கு இருக்காது"


"இது தீர என்ன வழி?"


"காட்டில் நீங்கள் விட்டு வந்த உங்கள் உடல்கள் சுமேரியில் உள்ள குளக்கரையில் உள்ளன.அங்கு சென்று உங்கள் உடல்களை வெட்டி உண்டு உங்கள் பசியை தணித்து கொள்ளுங்கள்"என்றார்.


"இதற்கு விமோசனம் கிடையாதா?"


"ஏதாவது ஒருநாள்..யாரோ ஒருவர் விஷ்ணுவுன் மந்திரங்களை உங்கள் காதுகளில் விழும்படிப் பாடினால் உங்கள் பிரச்னை ட்ஹீரும்"


அந்த அரசனும்,அவன் மனைவியும் விஷ்ணுலோகத்தில் இருந்து வந்து தங்கள் உடல்களைத் தாங்களே வெட்டித் தின்பதைத்தான் நீ பார்த்தாய்.எங்களுக்கும் தா என்று கேட்கும் இரு பேய்களும் பசி, தாகம் என்பனவாகும்.கைகொட்டி எள்ளி நகையாடுவது பிரக்ஞை,சிரத்தை ஆகும்" என்று சொல்லி முடித்த கிளி மேலும் சொன்னது.."நாளைக்கு நான் உனக்கு அந்த மந்திரத்தைச் சொல்கிறேன்.நீ அவர்கள் காதில் விழுமாறு அந்த மந்திரத்தைக் கூறு.அவர்கள் துயரம் நீங்க உதவி செய்வாயாக!" என்றது.


மறுநாள் அந்த குஞ்சுக் கிளி அரசனும், அவன் மனையும் வரும்போது..அவர்கள் காதில் விழுமாறு அந்த மந்திரத்தைப் பாட..அரசனும்..அவனதுமனைவியும் இக்கொடுமையிலிருந்து விடுபட்டு விஷ்ணுலோகம் சென்றனர். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11