பத்ம புராணம் - 11

 துவார யுகத்தில் சௌராஷ்டிரா தேசத்தில் பத்ராஷ்ரவன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.அவன் மனைவி பெயர் சுரதி சந்திரிகா.அவர்களுக்கு சியாமபாலா என்ற பெண் குழந்தை இருந்தது.ஒருநாள் குழந்தை வெளியே விளையாட்க் கொண்டிருந்த போது லட்சுமி தேவி ஒரு வயதான பிராமணப் பெண் வேடம் பூண்டு அரண்மனைக்கு வந்தாள்.அரண்மனைக் காவலாளி"அம்மா..நீங்கள் யார்?இங்கு வந்த காரணம் யாது?"என்று காரணம் கேட்க , அரசியின் பழைய பிறப்பையும்..இப்போது அவள் செய்யத் தவறிய சில காரியங்களையும் நினைவூட்ட வந்ததாக லட்சுமி தேவி கூறினாள்.

காவலாளி, "அம்மா..நீங்கள் சொவது புரியவில்லையே!"என்றதும் லட்சுமி தேவி விவரமாகக் கூற ஆரம்பித்தாள்.

இப்பொழுது அரசியாக இருக்கும் சுரதி சந்திரிகா, முன் ஜென்மத்தில் ஒரு வைசியனின் மனைவியாக இருந்தாள்.எவ்வித நற்பண்புகளும் இல்லாமல் செல்வச் செருக்குடன் இருந்தாள்.கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு அவனை விட்டுச் சென்றாள்.சென்ற அவளை மனித ரூபத்தில் இருந்த லட்சுமி தேவி..அவளது துயரம் நீங்க வேண்டுமானால் லட்சுமி விரதம் இருக்க வேண்டும் என்று கூறினாள்.இந்த வைசியன் மனைவி நன்கு லட்சுமி விரதம் இருந்தாள்.அதன் பயனாக அவள் இறந்ததும் விஷ்ணு லோகம் சென்று பல காலம் அங்கு வாழ்ந்தாள்.புண்ணிய பலன் தீர்ந்ததும் இப்பொழுது  என்றப்பெயருடன் அரசனின் மனைவியாக இருக்கின்றாள்.இப்பொழுதும் செல்வச் செருக்கால் எல்லாம் மறந்து விட்டாள்.லட்சுமி விரதம் இருப்பதையும் மறந்து விட்டாள்.அதை அவளுக்கு நினைவூட்டத்தான் வந்தேன்..


பிராமணப் பெண் கூறியதைக் கேட்ட காவலாளி, உடன் அரசியிடம் சென்று விவரங்களைச் சொல்ல,அரசி அவளை உடன் அழைத்து வரச் சொன்னாள்.லட்சுமி தேவி கூறியதைக் கேட்டதும்..மிகுந்த கோபம் கொண்ட அரசி அவளை அடித்துத் துரத்திவிட்டான்.அழுது கொண்டே வந்தவளை விளியாடிக் கொண்டிருந்த சிறுமி"ஏன் அழுகிறீர்கள்?" எனக் கேட்டாள்.பிராமணப் பெண் நடந்ததைக் கூற..குழந்தை,"விரதம் இருக்கும் முறையை எனக்குச் சொல்லிக் கொடுத்தால் நான் செய்கிறேன்" என்றது.லட்சுமி விரதம் எப்படியிருக்க வேண்டும் என சியாமபாலாவிற்குச் சொல்ல அவளும் அதை அனுஷ்டயித்தாள்.


உரிய காலத்தில் அவள் சித்தேஷ்வரா என்பவரின் மகன் மாலிதார என்பவனை மணம் செய்து கொண்டு கணவன் வீடு வந்தாள்.அவள் போனதும் தாய்,தந்தையருக்கு செல்வம் அழிந்து..வறுமை வாட்டியது.ஒருமுறை அரசன் பத்ராஷ்ரவன் மகளைப் பார்க்க வந்தபோது..தந்தைக்கு உணவளித்து..அவர்     புறப்படுகையில் பொன்னையும், மணிகளையும் மூட்டைக் கட்டி கொடுத்தாள்.மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றவன் வீட்டில் வந்து பார்த்த போது கல்லும், மண்ணுமாய் மாறியிருந்தது.சிலநாட்கள் கழித்து அரசி தன் மகளைப் பார்க்கச் சென்றாள்.நல்லவேளையாக லட்சுமி விரதம் என சொல்லக்கூடிய நாளாக அது அமையவே மகளின் பிடிவாதத்தால் இணங்கி அரசியும் லட்சுமி விரதம் இருந்தாள்.இதனால் இழந்ததையெல்லாம் மீட்டு மீண்டும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினாள். லட்சுமி விரதத்தின் மகிமை இது. 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11