பத்ம புராணம்

 



இப்புராணம் பற்றி...

வேத வியாசர் எழுதிய பதினென் புராணங்களில் இரண்டாவது "பத்ம புராணம்"

 ஆதியில் ஒரு புராணம்தான் இருந்தது.நூறு கோடி பாடல்களைக் கொண்டதாக அது இருந்தது.

பிரம்மனின் ஒருநாள் என்பது ஒரு கல்பகமாகும்.பிரம்மனின் ஒரு நாள் முடிவில் இந்த பேரண்டம் அழிவுற்றது.எங்கும் இருள் சூழ்ந்தது.அடுத்தநாள் காலையில் உலகம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது.ஒவ்வொரு கல்பகத்திலும் ஒரு புராணம் இயற்றப்பட்டது.

சென்ற கல்பகத்தில் இருந்த புராணம்..மனித வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்ம,அர்த்த,காமம் ஆகிய மூன்றையும் பற்றி  கூறி,அவற்றை முறையாக கடைபிடித்தால்தான் மோட்சம் கிட்டும் எனக் கூறியது.


மிகப் பழங்காலத்தில் மனித வாழ்க்கை என்பது ஆன்மீகம்,உலகியல் என்ற இரண்டையும் ஓரளவில் கலந்து கடைபிடிப்பதையேக் குறிக்கோளாகக் கொண்ட சமுதாயம் ஆகும்.பத்ம புராணம் மிகப் பெரியதாக இருந்ததால் அதை சாதாரண மக்கள் படிப்பது என்பது கடினமாக இருந்தது.ஆகவே வேத வியாசர் அதைச் சுருக்கி நான்கு லட்சம் பாடல்களாகத் தொகுத்தார்.


பிரம்ம புராணத்தை அடுத்து பத்ம புராணம் ஆகும்.ஒரு காலத்தில் இப்பூமி ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால்..இதற்கு பத்ம புராணம் என்று பெயர்.வேத வியாசருக்குப் பின் இப்புராணம் மேலும் சுருக்கப்பட்டு 55000 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது. 


இக்காண்டங்கள் சிருஷ்டி காண்டம்,பூமி காண்டம்,சுவர்க்க காண்டம்,பிரம்ம காண்டம்,பாதாள் அகாண்டம்,உத்திர காண்டம்,கிரியா யோகா முத்லியவையாகும்

 (தொடரும்)

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11