பத்ம புராணம் - 2




சிவசர்மாவின் கதை

----------------------------- 

மேற்குக் கடற்கரையில் துவாரவதி எனும் துவாரகையில் சிவ சரமா என்றொரு அந்தணர் சகல சாஸ்திரங்கள்,வேதங்கள்,யாகங்கல் ஆகியவற்றைக் கற்றவராக இருந்தார்.அவருக்கு பஜ்ஞ சர்மா,வேத சர்மா,தர்ம சர்மா,விஷ்ணு சர்மா,சோம சர்மா என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.அவர்களும் வேத, சாஸ்திர விற்பன்னர்களாய் சகல சாஸ்திரப் பண்டிதர்களால்,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என விளங்கினர்.ஆனால், அவர்கள் எந்த அளவு தன்னிடம் பயபக்தி உடையவர்களாக இருக்கிறார்கள் என அவர்களை சோதித்துப் பார்க்க விரும்பினார் சிவசர்மா.சகல வேதங்களையும் உணர்ந்த சிவ சர்மாவிற்கு பலவகை மந்திர தந்திரங்களும் தெரிந்திருந்தது.அவர் தன் மனைவி இறந்து கிடப்பதாக ஒரு மாயத்தைத் தோற்றுவித்துத் தன் பெரிய மகனான யக்ஞசர்மாவிடம் அந்த உடலை வாள் கொண்டு துண்டு துண்டுகளாக்கி வீசி எறியுமாறு கூற..அவனும் அவ்வாறே செய்தான்.அவன் தந்தையிடம் பக்தியுள்ளவன் என சிவசர்மா தீர்மானித்தார்.

 

அடுத்து ஒரு அழகியப் பெண்ணை உருவாக்கி,இரண்டாவது மகன் வேத சர்மாவிடம்,அவளை தன்னை மணக்குமாறு ஏற்பாடு செய்யச் சொன்னார்.அவளோ..மறுத்து தந்தைக்கு பதில் வேத சர்மாவை மணப்பதாகக் கூற..அவனோ..அவள் தந்தையையே மணக்க வேண்டும் என்றான்.அதற்கு அவள்..அப்படியயைன் வேத சர்மா தன் தலையை வெட்டி அவளுக்கு வெகுமதியாக தந்தால் அவன் தந்தையை மணப்பதாகக் கூற, அவனும் அப்படியே செய்ய ..வேத சர்மாவும் தன்னிடம் பக்தியுள்ளவனே என நிச்சயித்தார் சிவசர்மா..சிவ சர்மா, வேத சர்மாவின் தலையினைக் கொய்து மூன்றாவது மகன் தர்ம சர்மா விடம் கொடுக்க அவன் தர்ம தேவதையைப் பிரார்த்தித்து வேத சர்மாவை உயிருடன் வருமாறு வரம் பெற்றான்.இருவரும் தந்தையை வண்னகினர்.இதன் மூலம் மூன்றாவது மகன் தர்ம சர்மாவும் தன்னிடம் பக்தியுள்ளவன் என்பதை உண்ரந்தார்.


இப்போது நான்காவது மகனான விஷ்ணு சர்மாவை அழைத்து "நீ இந்திர லோகம் சென்று இந்திரனிடம் இருந்து அமிதத்தை வாங்கி வா"என்றார்.அவனும் இந்திரலோகம் சென்று அமிர்தத்தைத் தேடுகையில்..இவனது நோக்கத்தை மாற்ற இந்திரன் மேனகையை இவனிடம் அனுப்பினார்."நாம் இருவரும் மணந்து கொள்வோம்" என மேனகை அவனது ஆசையைத் தூண்டிவிட முயன்று தோற்றாள்.இதை அறிந்த இந்திரன் ,ஒரு பாத்திரத்தில் அமிர்தத்தை அவனுக்கு அளித்தார்.அதை எடுத்து வந்து சிவ சர்மாவிடம் கொடுத்தான் மகன்.நான்கு பிள்ளைகளையும் சிவ சர்மா விஷ்ணு லோகம் போகுமாறு அனுப்பி வைத்தார். 


கடைசியாக சோம சர்மாவை அழைத்து"நானும் உன் தாயாரும் தீர்த்த யாத்திரை போகிறோம். நாங்கள் வரும்வரை இதனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள் என அமிர்தத்தை அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.சில காலம் கழித்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட உடம்புடன் சோமசர்மாவிடம் வந்தனர்.முகம் கோணாது அவர்களுக்கு அவன் பணிவிடை செய்தாலும்..சிவ சர்மா கடுஞ்சொல் கூறி அவனை ஏசியவாறே இருந்தார்.ஒருநாள்..வர் கொடுத்து வைத்திருந்த அமிர்தத்தை காணாமல் போகச் செய்து விட்டு..அவர் சோமசர்மாவிடம் "நான் கொடுத்துச் சென்ற அமிர்தத்தை எடுத்து வா" என்றார்.அமிர்தம் காணாமல் போயிருந்ததைக் கண்ட சோம சர்மா தன் சக்தியால் அமிர்தத்தை வரவழைத்து அதைத் தந்தையிடம் எடுத்து வந்தான்.மகனின் சக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவ சர்மா தன் மனைவியுடன் விஷ்ணு லோகம் சென்றார்,


தனித்து விடப்பட்ட சோமசர்மா..ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது துர்த்தேவதைகள் வந்து அவனை பயமுறுத்த..அந்த பயத்திலேயே இறந்தான்.


அடுத்த ஜென்மத்தில் ஹிரண்யன் எனும் அரக்கன் மகனாய் பிரகலாதன் என்ற பெயரில் பிறந்தான்.மிகுந்த புண்ணியம் செய்திருந்தபடியால் அரக்கனாகப் பிறந்தாலும் தீவிர விஷ்ணு பக்தனாக விளங்கினான். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11