விஷ்ணு புராணம் - 7

 ஜடாபரதன் கதை

----------------------------

முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மக்ன இருந்தான்.அவன் எப்போதும் விஷ்ணுவை தியானித்தபடியே இருந்தான்.ஒருநாள் அவன் நீராட ஆற்றிற்குச் சென்றபோது,அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்த வந்தது.அந்த சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு பயந்த மான்,தன் குட்டியை ஈன்றதும் இறந்தது.ஆற்றில் விழுந்து விட்ட மான் குட்டியிய பரதன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான்.நன்கு உண்டு வளர்ந்த மான் பின் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவு அருந்தி வந்தது.


தன் அரச பதவி, மக்கள்,உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டு,அதை நினைத்தபடியே உயிர் நீத்தான்..பரதன் மானை எண்ணியபடியே உயிர் நீத்ததால் மறுபிறவியில் பூர்வ ஜென்ம நினியவுகளை மறக்காமல் தன் பழைய ஊரான சாலக்கிரமாவிற்கு வந்து அங்கு வாழ்ந்து வந்தான்.சிலகாலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் அந்தணனாகப் பிறந்து வேத சாத்திரங்களில் தேர்ச்சிப் பெற்றான்.பரப்பிரம்மம் பற்றிய ஞானம் பெற்றதால் வேதங்களில்  நாட்டமின்றி துர்நாற்றமுடையத் தோற்றத்துடன் உலாவி வந்தான்.அவன் தந்தையின் மரணத்திற்குப் பின் உறவினர்கள் அவனுக்கு கெட்ட உணைவையேத் தந்தனர்.


இகவுமதி ஆற்றின் கரையில் கபில முனிவரின் ஆசிரமம் இருந்து வந்தது.ஒருநாள் கௌபிர எனும் அரசன் ஞானம் பற்றித் தெரிந்து கொள்ள பல்லக்கில் ஏறி கபில முனிவர தரிசிக்கச் சென்றான்.பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவன் குறைந்ததால்..  அழுக்கு உடம்புடன் இருந்த அந்தணனைப் பல்லக்குத் தூக்க வைத்தார்கள்.


பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் வேகமாகச் செல்லவும்,பரதன் மட்டும் சற்று மெதுவாக நடந்ததால்..பல்லக்கை சீராக கொண்டு செல்ல இயலவில்லை.இதனால் அவனை மற்றவர்கள் கோபித்தனர்.கோபமடைந்த அரசனும், "மிகுந்த பலமுடைவனாகத் திகழும் நீ. எப்படி சிறிது தூரம் நடந்து வந்ததற்கே களைப்புற்றாய்?" என்றான்.அதற்கு பரதன், "பல்லக்கை நான் சுமக்கவில்லை..எனக்குக் களைப்பும் இல்லை.நான் பலமுடையவனும் இல்லை" என்றான்.


வியந்த அரசன்.."நீ பல்லக்கை சுமந்து செல்கிறாய்.பலமுடையவனாகவும் இருக்கின்றாய்.இதை எப்படி மறுக்க முடியும்"என்றான். 


பரதன் கூறத் தொடங்கினான்.."நான் யார்? நீயார்? நீ பார்ப்பது என்னுடைய உடம்பும், உன்னுடைய உடம்புமே.நான் என்பது என் உடம்பும் அல்ல..நீ என்பது உன் உடம்பும் அல்ல.நம்முடைய ஆத்மாதான் நாம் யார் என்பதை அறிவிக்கும்.அந்த அத்மாவிற்குக் களைப்போ,பலமோ ஏதுமில்லை.அந்த ஆத்மா பல்லக்கைத் தூக்கி சுமப்பதும் இல்லை"

இப்படிச் சொல்லிவிட்டு அவ்ன அமைதியானான்.வியப்புற்ற அரசன் கீழே இறங்கி வந்து  அவனை விழுந்து வணங்கினான்.இவ்வளவு ஞானம் உள்ள அவன் யார்? எனத் தெரிந்து கொள்ள விரும்பினான்.


பரதன் ஆத்மாவைப் பற்றிக் கூறினான்,"ஓவ்வொரு பிறப்பிலும்..ஒரு உடம்பிலிருந்து மற்றொரு உடம்பிற்குச் செல்லுகின்ற இந்த ஆத்மாவிற்கு அழிவேக் கிடையாது.இதுவே ஜீவாத்மா எனப்படும்.எங்கும் வியாபித்திற்கும் பரம்பொருளாகிய விஷ்ணுவே  பரமாத்மா எனப்படுபவர்.முழுமையான ஞானம் பெற்றவனுக்கு ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை.மாயையில் அகப்பட்டு இருப்பவனுக்கே ஜீவாத்மாவும், பரமாத்வாவும் வேறுபட்ட பொருள்களாகத் தெரியும்" 


பரதன் அரசனுக்கு ஒரு கதையையும் கூறினான் .பல ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மனின் மகனாகிய ரிபுவும்,ரிபுவின் சீடனும் புலத்தியனின்      மகனுமாகிய நிடகாவும், தேவிகா நதியின் கரையோரம் அமைந்துள்ள விராநகரா எனும் ஊரில் வசித்து வந்தனர்.   பரம்பிரம்மத்தைப் பற்றி அறிந்து கொள்ள தயாராக இல்லாததால் நிடகாவை ஊருக்குள் சென்று வசிக்குமாறுக் கூறி விட்டான் ரிபு.


ஒருநாள் தன் சீடனாகிய நிடகாவை காணச் சென்றான் ரிபு.தன்னைக் காண வந்த தன் ஆசிரியனை உள்ளே அழைத்தான் நிடகா.அவனைப் பார்த்து ரிபு, "எனக்கு என்ன உணவு படைக்கப் போகிறாய்?..தூய்மையானதானதா?" என்றான்.


அதற்கு நிடகா, "அரிசி, பழங்கள்,மற்ற இனிப்புகளும் இருக்கின்றன" என்றான்.


'இது  அசுத்தமான உணவு.அரிசியில் செய்யப்பட்ட உண்வௌ மற்றும் தயிர் கொடு" என்றான்.அதைக் கொடுத்த நிடகா, "பசியாறி விட்டதா.எதற்காக இப்போது வந்துள்ளீர்கள்.எங்கு செல்கிறீர்கள்?" என்றான்.



அவனைப் பார்த்து ரிபு, "பசியோடு இருப்பவனுக்கே உணவு உணடபின் பசி அடங்கும்.எனக்கு பசியில்லை.அதனால் இந்தக் கேள்விக்கே இடமில்லை.உடம்பிற்குத்தான் பசி எடுக்கும்.நான் உடம்பு அல்ல.நான் எங்கு செல்கிறேன்? என்று வினவினாய்.     என் ஆன்மா எங்கும் நிறைந்திருக்கிறது. நீ காணும் நான்..நானல்ல...நீ...நீயல்லநீ அளித்த உணவைப் பற்றிக் கவலையில்லை.ஏனெனில் அனைத்துமே ஒரே மூலப்பொருளில் இருந்து செய்யப்பட்டவை.இதுவே உண்மையான ஞானம்"என்றான்.


சில வருடங்களுக்குப் பிறகு,நிடகனைக் காண மீண்டும் வந்தான் ரிபு.ஊருக்கு வெளியே புல்லைத் தின்றுக் கொண்டு மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட நிடகா ,மற்றவர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வந்தான்.பரமாத்மாவினின்று வேறு பட்டது ஏதுமில்லை என்ற  உண்மையான ஞானத்தை போதித்து விட்டு விடை பெற்றான்.


இக்க்தையைக் கூறி விட்டு பரதன், "ஓரு அரசன் அறிந்து கொள்ள வேண்டிய ஞானம் இதுவே.மேகம் ஒன்றாயினும், சில சமயம் நீலமாகவும்,சில சமயம் வெள்ளையாகவும் தோன்றுகிறது.அதுபோல மாயையின் வசப்பட்டவன் ஆத்மாவை வேறு வேறு என நினைக்கின்றான்.உண்மையில் ஆத்மா என்பது ஒன்றுதான்.ஆத்மாவினைத் தவிர உலகில் வேறு ஏதுமில்லை.நாம் அனைவரும் இந்த ஆன்மாவின் பிரிவுகளே" என்று கூறினான்.

        

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11