விஷ்ணு புராணம் - 4


 

துருவனின் கதை

--------------------------

பிரம்மனின் உடம்பிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் தோன்றினர்.மனு எனும் பெயரைப் பெற்றிருந்த அவர்கள் மரபில் பல மக்கள் தோன்றினர்.மனுவின் மரபில் தோன்றியதால் அவர்கள்"மானவர்கள்"என்று அழைக்கப் பட்டார்கள்.இவர்களை உத்தானபாதன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.சுனிதி,சுருச்சி என்ற இரு மங்கயர்களை அவன் மணந்தான்.இளையவளாகிய சுருச்சியின் மகன் உத்தமன்.அவன் ஒருநாள் அரசனின் மடியின் மீது அமர்ந்திருந்தான்.மூத்தவளான சுனிதியின் மகன் துருவன் தானும் தன் தந்தையின் மடியில் அமர விரும்பினான்.அப்படி அமர விரும்பும் போது இளையவளாகிய சுருச்சிஅவனை தடுத்தாள்.அரசன் மடியில் அமரும் உரிமை உத்தமனுக்கு மட்டுமே உண்டு என்றும், அடுத்தபடியாக ஆளப்போகிறவன் அவன்தான்என்றும் கூறினாள்.மிக வருத்தத்தோடு தாயிடம் வந்த துருவன் நடந்ததைக் கூறினான்.தாய் சுனிதியும் ,"மகனே!இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.முன்பிறவியில் நல்ல காரியங்களைச் செய்தவர்கள் நல்பதவிகளையும், சுகங்களையும் அடுத்தப் பிறவியில் அடைவர்.,  சுருச்சியும், உத்தமனும்..போன பிறவியின் புண்ணியம் செய்து இப்பிறவியில் இந்நிலையில் உள்ளனர்.நானும், நீயும் அவ்வாறு செய்யவில்லை.எனவே இப்போது நல்ல காரியங்களைச் செய்தால் அடுத்தப் பிறவியில் நல்லநிலை அடையலாம்"என்றாள்.   

அதைக்கேட்ட துருவன் தவம் செய்ய வேண்டும் என் உறுதியுடன் பக்கத்தில்  இருக்கும் காட்டிற்குச் சென்றான்.அங்கு சப்தரிஷிகள் என சொல்லப்படும் முனிவர்களைச் ச்ந்தித்தான்.ஐந்து வயது பாலகனானவன் காட்டிற்குள் வந்திருப்பதைப் பார்த்த முனிவர்கள்..அவன் வந்தக் காரணத்தைக் கேட்டனர்.நடத்ததைக் கூறிய துருவன், தான் தவம் செய்து உரிய இடத்தைப் பெறுவதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்தான்.அவன் முடிவினைமாற்ற முடியாது என உணர்ந்த முனிவர்கள்..அவன் எண்ணம் நிறைவேற வேண்டுமானால்..அவன் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய வேண்டும் என்று கூறி அவனுக்கு ஒரு மந்திரத்தையும் உபதேசித்தனர்.துருவனும் ஒரு இடத்தில் அமர்ந்து..விஷ்ணுவை தியானித்து மந்திரத்தை ஜெபிக்கலானான்.நாட்கள் நகர்ந்தன.

துருவனின் தவ வலிமை தேவர்களையும் அச்சம் செய்யக் கொள்ளச் செய்தது.ஒருவேளை இந்திர பதிவிக்கு ஆசைப்பட்டு தவமிருக்கின்றானோ என சந்தேகித்தவர்கள் அவன் தவத்தைக் கலைக்க முயன்றனர்.அசுரரகளும் அவனது தவத்தைக் கலைக்க முயன்றனர்.அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


விஷ்ணு அவனுக்கு நேரே தரிசனம் தந்து.."என்ன வரம் வேண்டும்?" என வினவினார்.  துருவனோ, "தங்களை தரிசித்ததேப் போதும்.இதற்கு மேல் எதுவும் வேண்டும்"என்றான்.இருப்பினும் "ஏதேனும் கேள்" என விஷ்ணு சொல்ல,அவனும் எவரும் அடைய முடியாத இடத்தைத் தான் அடைய வேண்டும்..என்றான்.அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் அசையாத துருவ நட்சத்திரமாக அவனை மாற்றி..சப்த ரிஷி மண்டலத்தின் அடியில்  இருக்கும்படி வரம் வந்தார்.சப்தரிஷி மண்டலம் உட்பட எல்லா நட்ச்னஹ்திரங்களும் இன்றும்..துருவனைச் சுற்றி வருவதைக் காணலாம்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11