பத்ம புராணம் - 3



விருத்ராசுரன் கதை

--------------------------------- 

காசிப முனிவரின் மனைவியருள் திதி என்பவள் தைத்தியர்களைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.மற்றொரு மனைவியும், திதியின் சகோதரியுமான அதிதி தேவர்களைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.அவருள் இந்திரன் நான்கு கைகளும்,கோடி சூர்ய பிரகாசத்துடன் பிறந்தான்.நாளாவட்டத்தில்  இந்திரன் மிகுந்த பலவானாக ஆகி தேவர்களின் தலைவனாகவும் ஆகி விட்டான்.திதியின் பிள்ளைகளாகிய தைத்தியர்களை அழித்துக் கொண்டிருந்தான்.இதை அறிந்த திதி காசிபரிடம் மூறையிட்டாள்.பின்..அவர் உதவியுடன் பலி என்ற பிள்ளையைப் பெற்றாள்.மிகவு பலசாலியான அவன் தேவர்களை அழிக்க வேண்டி பெரும் தவம் செய்தான்.அவன் குறிக்கோளை அறிந்த இந்திரன்..இவன் தவத்தில் இருக்கும் போதே வஜ்ராயுதத்தால் இவனை அழித்தான்.இதை அறிந்த திதி, இந்திரன் செய்த அநியாயத்தை காசிபரிடம் சொல்ல..அவரும் அவன் செய்தது தவறு என்று கூறினார்.


எப்படியாவது இந்திரனை ஒழிக்க வேண்டும் என விரும்பிய திதி,மீண்டும் காசிபரிடம் முறையிட்டாள்.காசிபர் தன் தலையில் இருந்து ஒரு முடியைப் பிடுங்கி பூமியில் போட..அம்முடியிலிருந்து விருத்ராசுரன் எனும் அசுரன் தோன்றினான்.அவனிடம், காசிபர் "எப்படியாவது இந்திரனை ஒழித்துவிடு"என்றார்.அவனும்..அதற்காகப் போர்க்கலைகளை பயிலத் தொடங்கினான்.இதனை அறிந்த இந்திரன்..இவனை போரினால் அழிக்க முடியாது, தந்திரத்தால் மட்டுமே அழிக்க முடியும் என உணர்ந்து..சப்தரிஷிகளையும் அழைத்தான்.'நீங்கள் என்சார்பாக விருத்ராசுரனைப் பார்த்து..தேவர்களைப் பகைக்க வேண்டாம்..எனக் கூறுங்கள்.மேலும் என் ஆட்சியில் பாதியை அவனுக்குக் கொடுப்பதாகவும் கூறுங்கள்.ஓற்றுமையாய் ஆட்சி செய்வோம் என கூறுங்கள்"என்று அவர்களை அந்த அசுரனைப் பார்க்க அனுப்பினான்.


முனிவர்கள் சென்று சொன்னதற்கு அவனும் இசைந்தான்.இந்திரனும் ஆட்சியிலிருந்து ஒரு பகுதியை அவனுக்கு அளித்தான். 


இதனிடையே..இந்திரன் எப்படியாவது அவனை காலம் பார்த்து அழிக்க நினைத்தான்.ஒருநாள் நந்தனகானகம் எனும் இடத்தில் விருத்ராசுரன் உலவிக் கொண்டிருந்த போது..ரம்பை என்னும் தேவ கன்னி வந்தாள்.அவள் அவன் மீது ஆசைப்பட்டு தன்னை மணக்குமாறு கூறினான்.ஆனால் ரம்பையோ "தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க வேண்டும்.அதன்படி நடக்க வேண்டும்"என கட்டளையிட்டாள்.விருத்ராசுரனும் "சரி"எனக் கூற ரம்பா அவனை மணம் செய்து கொண்டாள்.பின் ஒருநாள் ரம்பா "இந்த அருமையான திராட்சை ரசத்தை அருந்துங்கள்"எனக் கொடுக்க விருத்ராசுரன் "காசிபன் எனும் பிராமணன் மகன் நான்.மது அருந்துவது பாவம்" என்றான்.ஆனால் ரம்பாவோ, பிடிவாதம் பிடித்ததால் அதனை அருந்தி மயங்கினான் அவன்.இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்ட இந்திரன் விருத்ராசுரனைக் கொலை செய்து விட்டான்.ஒரு பிராமணனைக் கொன்றதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.

(இதனை அடுத்து வெனாவின் கதை,பிருதுவின் கதை வருகிற்டஹு.இதை பிரம்ம புராணத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டேன்)

(தொடரும்))  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11