பதம புராணம் - 9

 அழுகையில் மலர்ந்த மலர்கள்

-------------------------------------------

ஆலமரத்தில் இருந்த குஞ்சலா என்ற தந்தைக் கிளி, கபிஞ்சலா என்ற நான்காவது மகனைப் பார்த்து,"மகனே! நீ பார்த்த அதிசயத்தைக் கூறு" என்றது


கபிஞ்சலா சொன்னது..

"நான் தினமும் கைலாச மலைக்குச் செல்கிறேன்.கைலாயம் மிகவும் அழகாக, இயற்கை எழில் கொஞ்ச உள்ளது.கங்கை முதல் நூற்றுக்கணக்கான் புண்ணிய நதிகள் அங்கே ஓடுகின்றன.லைலாயத்தின் ஒரு புறத்தில் ஒரு பெரிய ஏரியில்நீர் நிறைந்துள்ளது.அந்த ஏரியில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.அதன் ஒரு புறத்தில் ஒரு கற்பாறை உள்ளது.அதன்மீது ஒரு பெண் அமர்ந்து அழுதுக் கொண்டிருக்கிறாள். அவள் கண்ணீர் ஏரியில் வந்து விழுந்ததும் தாமரை மலர் போல ஒரு மலர் பூக்கின்றது.அந்தப் பாறையின் பக்கத்தில் சிவனுடைய விக்கிரகம் உள்ளது.அந்த மலர்ந்த மலரை ஒரு தவசி எடுத்து சிவனுக்குச் சாத்துகிறார்.பல மலர்களியச் சாத்தியப் பிறகு பாடுகிறார்,நடனம் ஆடுகிறார்.பிறகு கதறி அழுகிறார்.அவர் உடம்பு வெறும் எலும்புக் கூடாகத்தான் இருக்கிறது.காய்ந்து போன சரகுகளையே அவர் உண்கின்றார்.எனக்கு எதுவும் புரியவில்லை.அந்தப் பெண் ஏன் அழுகிறாள்?அவள் கண்ணீர் ஏன் மலர் ஆகிறது?அந்தத் தவசி ஏன் அழ வேண்டும்?"


தந்தைக் கிளி சொல்ல ஆரம்பித்தது."கைலாயத்தில் மிக அற்புதமான நந்தவனம் உண்டு.மிக அற்புத மரங்கள் அங்கே பூத்துக் குலுங்கும்.ஒருநாள் சிவனும்,பார்வதியும் அதைப் பார்க்க வந்தனர்.எல்லா மரங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்த பார்வதி ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்து அதிசயித்து நின்றாள்."இது என்ன மரம்?" என சிவனைக் கேட்க, அவரும் "இது கற்பக மரம்.என்ன வேண்டுமென்று கேட்கிறோமோ அதை கொடுக்கும்"என்று கூறினார்.பார்வதி அந்த மரத்தைப் பார்த்து மிக அழகான பெண் ஒருத்தி வேண்டும்" என்று கேட்டாள்.அடுத்த கணமே ஈடு இணையில்லா அழகுடன் ஒரு பெண் வந்து பார்வதியை வணங்கி "என் பணி என்ன?"என்றாள் பணிவுடன்.பார்வதி "இந்த வனத்திலேயே இருந்து வா.நகுஷன் எனும் மன்னன் உன்னை வந்து மணப்பான்" என்று கூறிவிட்டு அப்பெண்ணுக்கு அசோகசுந்தரி என்று பெயரிட்டு மறைந்தாள். அசோக சுந்தரியும் அந்த வனத்தில் இருந்து வந்தாள்.


விப்ரசித்தி என்ற அசுரனுக்கு ஹீண்டா என்ற மகன் இருந்தான்.அவன் ஒருநாள் கைலாயத்தில் உள்ள நந்தவனத்துக்கு வந்தான்.அசோகசுந்தரியைப் பார்த்து அவள் மீது காதல் கொண்டு தன்னை மண்னஹ்து கொள்ளுமாறு வற்புறுத்தினான்.அசோகசுந்தரி மறுக்கவே, பல மந்திர தந்திரங்கள் தெரிந்த ஹீண்டா ஒரு பெண் வடிவம் எடுத்து அவளைச் சந்தித்தான்.அந்தப் பெண்ணையப் பார்த்து, "யார்?" என அசோகசுந்தரி கேட்க, "தான் ஒரு அனாதை"என்று சொன்னதுடன்..தன் ஆசிரமத்தில் தவம் புரிந்ததாகவும் கூறிவிட்டு,அசோகசுந்தரியைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்தான்.அந்த வார்த்தைகளை நம்பிக் கொண்டு அப்பெண்ணுடன் சென்றவளுக்கு பெரிய இடையூறு வந்தது.தன் இடம் போனதும் ஹீண்டா தன் பழைய வடிவை எடுத்துக் கொண்டு அசோகசுந்தரியை பலாத்காரம் செய்ய முயன்றான்.தன் கணவன் நகுஷன் வந்து அவனைக் கொல்வான் என்று கூறித் தப்பித்து வந்தாள்.  

இது நடைபெறுகின்ற காலத்தில் நகுஷன் பிறக்கவே இல்லை.அயு என்ற அரசனுக்கும் இந்துமதி என்ற அரசிக்கும் பிறந்தவன் நகுஷன்.நகுஷன் தன்னைக் கொல்லப் பிறந்தவன் என்பதனை அறிந்த ஷீண்டா அந்த இளம் பிள்ளையைக் கடத்திக் கொண்டு சென்று விட்டான்.தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்து சமைக்கச் சொன்னான்.குழந்தைமேல் இரக்கப்பட்ட அவள் மாங்கறியை சமைத்து ஷீண்டாவிற்குக் கொடுத்து விட்டு,குழந்தையை எடுத்துச் சென்று வசிட்டரிடம் ஒப்படைத்தாள்.ஒரு அரசனுக்கு வேண்டிய அனைத்து கலைகளையும் ,ஆயுதப் பிரயோகங்களையும் வசிட்டர் நகுஷனுக்குக் கற்பித்தார்.எதைக் கண்டாலும் பயநுக் கொண்டிருந்த குழந்தைக்கு ந + ஹூசன்..நகுஷன் (அச்சமில்லாதவன்) என்ற பெயரைத் தந்தார்.நாளாவட்டத்தில்  நகுஷன் வளர்ந்ததும் அசோகசுந்தரியைத் திருமணம் செய்து கொண்டான்.அவளை அடைவதற்காகச் செய்த போரில் ஷீண்டாவைக் கொன்றுவிட்டான்.நகுஷனுக்கும், அசோகசுந்தரிக்கும் பிறந்த குழந்தையே பிரசித்திப் பெற்ற யயாதி ஆவான்.


இறந்துபோன ஷீண்டாவின் மகன் விகுண்டன் பெரியவனாகி,தன் தந்தையைக் கொன்ற நகுஷனைக் கொல்வதற்காக சக்தி பெற விஷ்ணுவைக் குறித்து தவம் புரிந்தான்.அத்தவம் பலித்தால் அதனால் ஏற்படப் போகும் பெரிய பிரச்னை கருதி விஷ்ணுவே தவத்தைக் கலைக்கப் புறப்பட்டார்.ஒரு அழகிய பெண் உருவை எடுத்துக் கொண்டு, அவன் முன் நடனமாடினார்.அப்பெண்ணின் அழகைக் கண்ட விகுண்டன் ,அவள் தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினான்.அதற்கு அப்பெண்,"உன்னை மணக்கத் தடையில்லை.ஆனால் ஏழு கோடி சுமோடா பூக்களைக் கொண்டு சிவனை அர்சித்து விட்டு..அதை ஒரு மாலையாக்கிக் கட்டி என் கையில் கொடுத்தால் உன்னை மணந்து கொள்வேன்"என்றாள்.'சரி"என ஒப்புக் கொண்ட   விகுண்டன் சுமோடா புஷ்பங்களைக் காட்டில் தேடினான்..காட்டில் அப்படி ஒரு பூவே இல்லை என்று உணர்ந்து தங்கள் குருவான சுக்ராச்சாரியாரை நாடினான்.அவர்,"இது  மண்ணில் பூக்கும் பூ அல்ல"என்று கூறிவிட்டு.."பாற்கடல் கடைந்த போது வெளிவந்த சுமோதா என்ற பெண்..இவள் கங்கைக் கரையில் இருக்கின்றாள்.இவள் சிரித்தால் மஞ்சள் நிறமுடைய சுமோதா பூக்கள் தோன்றும்.அதை சிவனுக்கு அர்சித்தால் நினைத்தது எல்லாம் கைகூடும்.ஆனால் அப்பெண் அழுதால் மணமில்லாத சிவந்த பூக்கள் வெளிவரும்.அதைத் தொடக் கூடாது" என்றார்.


கங்கைக் கரையில் சுமோதாவைத் தேடிச் செல்லப் புறப்பட்டார் விகுண்டன்.நாரதர் எதிரே வந்து ,"நீ அவள் இருக்குமிடம் தேடிச் செல்ல வேண்டாம்.அவளிடமிருந்து வரும் பூக்கள் கங்கையில் மிதந்து வரும்.அவற்றை எடுத்து நீ சிவனுக்கு அர்ச்சித்தால் போதும்"என்று கூறினார்.விகுண்டன் அதை ஏற்றுக் கொண்டதுடன் ,நாரதர் சுமோதாவிடம் சென்று "விஷ்ணு உலகத்தில் சென்று பிறக்கப் போகிறார்"எனக் கூறினார்.அதைக் கேட்ட சுமோதா, விஷ்ணு அவரது லோகத்தில் இருந்து பூலோகம்  போகப் போகிறார் என்பதைக் கேட்டு,கண்ணீர் சிந்தி அழலானாள்.கங்கையில் வந்த பூக்களை எடுத்து செய்யத் துவங்கிய விகுண்டன் சுக்ராச்சாரியார் சொன்னதை மறந்து விட்டான்.பூக்கள் கங்கையில் வருவதைப் பார்த்து மகிழ்ந்த அவன்..இது சுமோதாவின்  அழுகையில் பிறந்ததா..சிரிப்பில் பிறந்ததா என அறிந்து கொள்ளும் அறிவை இழந்து தொடக்கூடாதாந்தப் பூக்களை சிவனுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கினான்.சிவனுக்கு ஆகாத பூக்களை அர்சித்ததால் பார்வதி தோன்றி தன் சூலாயுதத்தால் விகுண்டனைக் கொன்றாள்.   

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11