விஷ்ணு புராணம் - 15

 ஜனக மன்னனின் கதை

--------------------------------------

இட்சுவாகுவின் மகனாகிய நிமி ஒரு யாகம் செய்தான்.அது ஆயிரம் வருடங்கள் நடந்தது.அதற்கு வசிட்டனை ஆச்சார்யனாக வர வேண்டும் என வேண்டினான்.அச்சமயம் ஐந்நூறு வருடங்கள் நடைபெறும் யாகம் ஒன்றினை இந்திரன் தொடங்கப் போவதாகவும், அதற்கு தலைவனாக தான் இருக்க வேண்டியிருப்பதால்,அது முடிந்த பின் நிமியின் யாகத்தைத் தான் ந்டத்தித் தருவதாக வசிட்டன் கூறினான்.அதற்கு ஏதும் பதில் கூறாது நிமி சென்று விட்டான்.


நிமி ஐந்நூறு ஆண்டுகள் வசிட்டனுக்காகக் காத்திருந்து யாகம் செய்ய விரும்பவில்லை.கௌதம முனிவரைத் தலைவனாகக் கொண்டு,மற்ற முனிவர்களையும் வைத்துக் கொண்டு நிமி யாகத்தை நடத்தினான்.இந்திரனின் யாகத்தை முடித்து விட்டு வசிட்டன், நிமியின் யாகத்தைத் தொடங்க வசிட்டன் வந்தான்.கௌதமரை தலைவனாக் கொண்டு யாகம் ந்டைபெற்றுக் கொண்டிருப்பதை வைஸ்ட்டன் கண்டான்.தன்னைக் கேட்டு,தான் சொன்னபடி நடக்காத நிமி ,தன்னை அவமதித்து விட்டதாக எண்ணி கோபத்தில் நிமியின் பூத உடல் இல்லாமல் போகட்டும் என சாபமிட்டான் வசிட்டன்.நிமியும் வசிட்டனின் கோபம் நியாயமற்றது என நினைத்து வசிட்டனின் பூத உடல் இல்லாமல் போகட்டும் என சாபமிட்டான்.இரண்டு பேர் பூத உடல்களும் இல்லாமல் போயின.ஆனால்ம் வருணன் முதலிய தேவர்கள் உதவியால் வசிட்டனுக்கு வேறொரு உடல் கிடைத்தது. நிமியின் உடலையோ தைலத்தில் போட்டு வைத்திருந்தனர்.ஆனால் அது தேவையில்லை என்று கூறிவிட்ட நிமி,அதற்கு பதிலாக ஒவ்வொருவர் கண் இமையிலும் தான் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான்.அவ்வாறே முனிவர்கள் தந்தார்கள்.கண் புருவம் அடிக்கடி கண்ணிய மூடுவதால் நிமியின் செயல் அன்று முதல் நிமிஷ்ம என்று சொல்லும்படி ஆயிற்று.


நிமிக்கு பிள்ளைகள் இல்லாததால் ராஜ்ஜியத்தை ஆள யாரும் இல்லை.அதனால்  முனிவர்கள் நிமியின் உடலைப் பொடி செய்தார்கள்.அந்தப் பொடியிலிருந்து தோன்றிய பிள்ளைக்கு ஜனகன் என்று பெயர் வந்தது.அவனது தந்தைக்கு உடம்பு இல்லாததால் வைதேகன் என்றும் பெயர் பெற்றான்.ஜனகன் யாகம் செய்வதற்காக பூமியை உழுதான்.உழுபடைச்சாலில் இருந்து ஒரு பெண் மகவு வெளியே வந்தது.அப்பெண்ணே சீதை ஆவாள். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11