விஷ்ணு புராணம் - 22

 பிண்டாரகா எனும் க்ஷேத்திரத்தில் கண்வர்,விஸ்வாமித்திரர்,நாரதர் ஆகிய முனிவர்கள் பலர் தங்கியிருந்தனர்.ஆணவம் படைத்த யாதவ இளைஞர்கள் சிலர், கிருஷ்ணன் மகனாகிய சம்பாவிற்கு பெண் வேடமிட்டு அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்றனர்.முனிவர்களிடம், "இப்பெண்ணுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா" எனச் சொல்லுமாறுக் கேட்டனர்.முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் இவர்களின் கேலியியப் பார்த்து, கோபம் அடைந்து.."இது பெண் அல்ல..ஆண்.இவன் உடம்பிலிருந்து ஒரு இரும்பு உலக்கைத் தோன்றப் போகிறது.அந்த உலக்கை யாதவ சமுதாயத்தையே அழிக்கப் போகிறது"என்றனர்.


பயந்து போன இளைஞர்கள்..அரசன் உக்ரசேனனிடம் சென்று நடந்ததைக் கூறினர்.உரிய காலத்தில் சம்பாவின் உடலிலிருந்து ஒரு உலக்கை வெளியாயிற்று.அரசன் அந்த உலக்கையைப் பொடிப் பொடியாக்கி சமுத்திரக் கரையில் தூவி விட்டான்.முழுதும் பொடி செய்ய முடியாமல்,உலக்கையின் சிறு பகுதி மட்டும் நின்றது.அது பொடியாகவில்லை.அத்துண்டை கடளுக்குள் வீசி ஏரிந்துவிடச் சொன்னான்.கடல் கரையில் தூவப்பட்ட சிறு துகள்கள் மிகக் கூர்மையான ..வலிமையுடைய கோரைகளாக முளைத்தன.அக்கோரைகள் முளைத்த இடத்தில் "பிரபஸ்கா" என்ற க்ஷேத்திரம் அமைந்திருந்தது.


ஒருமுறை யாதவர்கள் அனைவரும் இந்தத் தலத்தில் வழிபாட்டிற்குக் கூடி இருந்தனர்.இவர்களில் ஒருவனான "உத்தவா" என்பவன் மட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் "கந்தமாதனம்" எனும் மலைக்கு தவம் செய்ய கிளம்பி விட்டான். கூடியிருந்த யாதவர்கள் அனைவரும் அதிகமாக மது அருந்தியதால் அறிவிழந்து தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினர்.கைகலப்பு முடிந்து..இரும்புப் பொடியில் இருந்து முளைத்த கோரையைப் பிடுங்கி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்தனர்.கிருஷ்ணனும் அவனது நண்பன் தாருகனனும் எவ்வளவோ முயன்றும் இதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.இறுதியில், இவர்கள் இருவர்..மற்றும் எங்கோ அமர்ந்திருந்த பலராமன் தவிர யாரும் மிஞ்சவில்லை.யாதவர்களின் பெரும் பகுதி இவ்வாறு அழிந்ததும்,கிருஷ்ணனும், தாருகனும்..பலராமன் இருக்குமிடம் தேடிச் சென்றனர்.பலராமன் பக்கத்தில் சென்றதும்..பலராமன் வாயிலிருந்து மிக்ப பெரிய பாம்பு ஒன்று வெளிப்பட்டு கடலுக்குள் சென்றது.தங்களுடைய முடிவை அறிந்து கொண்ட கிருஷ்ணன் தாருகனிடம்"பலராமன் முடிவிற்குப் பிறகு எனது காலமும் முடிந்து விடும் என அறிகிறேன்.நீ துவாரகைக்குச் சென்று மன்னன் உக்கிரசேனனிடம் இங்கு வந்த யாதவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர்.நானும் சென்று விடுவேன்.பின் துவாரகையைக் கடல் பொங்கி எழுந்து முழுங்கிவிடும்.அதற்குள் ஓடிச் சென்று அர்ச்சுனனை அழைத்து வந்து,துவாரகையில் எஞ்சியுள்ள யாதவர்களை தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு நான் சொன்னதாகச் சொல். உடனடியாக அவர்கள் துவாரகையைக் காலி செய்ய வேண்டும்"என்று கூறினான்.பின் ஓய்வு எடுத்துக் கொள்ள பல்ராமனின் பக்கத்தில் படுத்தான்.


உக்கிரசேனன்,இரும்பு உல்ககையை பொடி செய்தபோது..பொடியாகாத ஒரு பகுதியை கடலில் வீசி எறிந்தான் அல்லவா?ஆதனை ஒரு மீண் உண்டது.அந்த மீனை ஒரு வேடன் பிடித்து அரியும்போது அதில் இருந்த இரும்புத் துண்டை எடுத்து ஒரு அம்பாக தீட்டினான்.


அவனுக்கு படுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் பாதம்..ஒரு மான் போலத் தெரிய அதை வேட்டையாட எண்ணி தன் அம்பை  செலுத்தினான்.அது கிருஷ்ணன் மீது தைத்து அவன் இறக்க நேரிட்டது.அந்த வேடன் ,கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்க, அவனும் அவனிய மன்னித்து மோட்சத்திற்கு அனுப்பினான்.


துவாரகைக்கு வந்த அர்ச்சுனன், கிருஷ்ணர்,பலராமன் மற்றும் யாதவர்கள் இறந்ததைக் கண்டு,அவர்களுக்கு இறுதிக் கடன் செய்தான்.உக்கிரசேனன்,வசுதேவர்,தேவகி, ரோஹிணி முதலானோர் தீயில் பாய்ந்து தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.கிருஷ்ணன் வீட்டில் இருந்த பாரிஜாத மரம்,சுதர்வா என்ற மண்டபம் ஆகியவை தேவலோகம் சென்று விட்டது. 


இந்நிகழ்ச்சி நடந்து முடிந்து கலியுகம் பிறந்து விட்டது.கடல் பொங்கி கிருஷ்ணனின் வீட்டைத் தவிர துவாரகை முழுதும் மூழ்கடித்தது.எஞ்சியவர்களை அழைத்துக் கொண்டு அர்ச்சுனன் புறப்பட்டான்.வழியில் கொள்ளைக்காரர்கள் இவர்களை சூழ்ந்து சொத்துகளை கொள்ளையடிக்க வளைத்துக் கொண்டனர்.அர்ச்சுனன் தன் வில்லை எடுத்தான்.ஆனால், அதை எய்யும் சக்தியை இழந்துவிட்டான்.கிருஷ்ணன் போனதோடு தன் பலம் முழுதும் போய்விட்டதை உணர்ந்தான்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11