விஷ்ணு புராணம் - 11

 நான்கு வர்ணங்கள்

-------------------------

விஷ்ணு பக்தன் என்பவர்கள் விஷ்ணுவினால் நியமிக்கப்பட்ட வர்ணாசிரம  தர்மங்களைத் தவறாமல் கடை பிடிப்பர்.நான்கு வர்ணங்கள்..பிராமணர், சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்பவை ஆகும்.


பிராமணர் கடமைகள் - கற்றல், கற்பித்தல்,வேட்டல், வேட்பித்தல், ஈதல்,ஏற்றல் என் ஆஅறும் ஆகும்.


சத்திரியர் கடமைகள் - கற்றல்,வேட்டல், வேட்பித்தல்,ஈதல் இவற்றுடன் தனுர் வேதம் அறிந்து நாட்டைக் காக்கப் போர் புரிதல் .அரசனுடைய கடமை தீயவர்களைத் தண்டிப்பதும்,நல்லவர்களைக் காத்தலும் ஆகும்.


வைசியர்கள் கடமை - விவசாயம், ஆடு மாடு வளர்த்தல்,வாணிபம் என்பவற்றுடன் கற்றல்,யாகம் செய்தல்,ஈதல் என்பவற்றைச் செய்ய வேண்டும்


சூத்திரர்கள் கடமை - ஏனைய மூவருக்கும் தொண்டாற்றுதல்..தவிர்த்து வாணிபம்,கைத்தொழிலிலும் ஈடுபடுதல்.


நால்வருக்கும் பொதுவாக சில கடமைகள் உண்டு..அவை..பிறரிடம் அன்பு பாராட்டுதல்,தூய்மையுடன் இருத்தல்,கடினமாக உழைத்தல்,சத்தியத்தைக் கடைபிடித்தல்,நட்புப் பாராட்டல்,துன்பத்தைப் பொறுத்தல்,கொள்முதல் ஆகியவை ஆகும்.


இவற்றையெல்லாம் பிரம்மச்சரியம்,கிரஹஸ்தம்,வானப்ரஸ்தம்,சந்நியாசம் என நான்கு நிலைகளையும் ஒருவன் மேற் கொள்ள வேண்டும்.

முதலாவது நிலை..பிரம்மச்சரியம்- பூணூல் அணிந்ததும் குருவினை நாடிச் சென்று அவருடனேயே தங்கி,அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்தல்.குரு உறங்கிய பின் உறங்கி..அவர் எழுமுன் எழுந்து..காலைக் கடன் களை முடித்து,மலர்,தண்ணீர் முதலியவற்றைக் கொண்டு வர வேண்டும்.எக்காரணம் கொண்டும் குருவை மறுத்துப் பேசுதல்,எதிர்த்தல் கூடாது.எல்லாவற்றையும் கற்ற பின் குருதட்சணை கொடுத்து விட்டு அவரது உத்தரவின் பேரில் கிரஹஸ்தன் ஆக வேண்டும்.இதுவே இரண்டாம் நிலை.


கிரஹஸ்தனானவன் தக்க ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து இல்லறம் நடத்த வேண்டும்.புதல்வரைப் பெறுதல்,வேள்வி செய்தல்,மேலும் கற்றல்,விருந்தினர்களை உபசரித்தல் ஆகியவை இதன்பாற் வரும்.மற்ற நிலைகளைக் காட்டிலும் இல்லறத்தின் நிலையே உயர்ந்ததாகும்.பிராமணர்கள்,பிரம்மசாரிகள் பிச்சை ஏற்பதை மேற் கொள்ளலாம்.


மூன்றாவது நிலை..வானபிரஸ்தம்.நிறைவான வாழ்க்கைக்குப் பிறகு ஒருவன் காட்டிற்குச் சென்று தவம் செய்யலாம்.அவ்வாறு செய்கையில் மனைவியை அழைத்துக் கொண்டோ அல்லது மகனின் பாதுகாப்பிலோ அவளிய விட்டுச் செல்லலாம்.வானப்பிரஸ்தர்கள் காய்..கனி..கிழங்குகளை உண்டு..தெய்வங்களை வழிபடுவதோடு..தன்னை நாடி வரும் விருந்தினருக்குத் தன்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டும்.அவனது தலையாய கடமை தியானம் செய்வதாகும்.


கடைசி நிலையாக இருப்பது சந்நியாச நிலை.பந்த பாசங்களை விட்டுவிட்டு,நிலையில்லா உல்கப் பொருட்களின் மீதுள்ள ஆசையையும் துறந்தவனே சந்நியாச நிலையினை ஏற்க் அமுடியும்.சந்நியாய்ஸ்யைப் பொறுத்தவரை எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். அவற்றிற்கு எந்தத் ட்ஹீங்கும் செய்ய மாட்டான்.தனிமையில் அமர்ந்து யோகத்தில் ஈடுபடுவட்ஹே அவன் கடமையாகும்.அவன் ஒரு இரவுக்கு மேல் ஒரு கிராமத்திலும், ஐந்து நாட்களுக்கு மேல் ஒரு நகரத்திலும் தங்கக் கூடாது.சந்நியாசி நிலையில் உள்ளவன் பிச்சை எடுத்து தன் உணவை உண்ண வேண்டும்.ஆனால், ஒரு வீட்டில் பிச்சை எடுக்கும் முன்பு,அவ்வீட்டில் உள்ளவர்கள் உண்டுவிட்டார்களா என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டு அவ்வீட்டில் பிச்சை கேட்க வேண்டும்.




Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11