விஷ்ணு புராணம் - 14

 சகர மன்னன் கதை

-------------------------

மாந்தாதாவின் பரம்பரையில் வந்தவன் புருட்சா எனும் அரசன்.அவன் காலத்தில் நாகலோகத்தில் வசிக்கும் நாகர்களின் மாணிக்கங்களைத் திருடுவத்ற்காக கந்தர்வர்கள் நாகலோகத்தில் புகுந்து முற்றுகையிட்டனர்.கந்தர்வர்களை எதிர்க்கமுடியாத நாகர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.விஷ்ணுவும், "உலகை ஆளும் புருட்சாவை அழையுங்கள்.அவனது உடம்பில் நான் புகுந்து கொண்டு கந்தர்வர்களை அழிக்கிறேன்" என்றார்.நாகர்தள், நர்மதா என்ற பெண்ணை புருட்சாவிடம் அனுப்பினர்.அவள் சென்று புருட்சாவை நாகலோகத்திற்கு அழைத்து வந்தாள்.புருட்சாவின் உடலில் புகுந்து விஷ்ணு கந்தர்வர்களைத் தோற்கடித்தார்.புருட்சாவை அழைத்துக் கொண்டு வந்த  நர்மதாவை நாகர்கள் பாராட்டினர்.மேலும் அவளை காலை, மாலை வணங்குபவர்களை விஷம் தீண்டாது, பாம்புகளும் அவர்களைக் கடிக்காது என்ற வரத்தைப் பெற்றாள். 


அந்த பரம்பரையில் வந்தவன் பகு என்ற மன்னன்.அவன் மைந்தன் சகரன் ஆவான்.பெருவலி படைத்தலைவனாகிய சகரன் உலகம் முழுதும் ஆண்டு ஒரு அசுவமேயாகம் செய்ய எண்ணினான்.அவன் இரு மனைவிகளில் ஒருத்திக்கு ஒரு மகனும் மற்றொருத்திக்கு அறுபதனாயிரம் மகன்களும் இருந்தனர்.இவர்கள் அனைவரும் தீயவர்களாக இருந்தனர்.இந்நிலையில் அசுவமேத குதிரையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை சகர மன்னன் இப்பிள்ளைகளிடம் ஒப்படைத்தான்.குதிரை காணாமல் போக தேடிச் சென்ற பிள்ளைகள் கீழுலகிற்குக் குதிரைச் சென்றதை அறிந்தனர்.அவர்களும் கீழுலகம்செல்ல குதிரை ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருப்பதையும்,அதன் அருகில் கபிலர் எனும் முனிவர் அமர்ந்திருப்பதையும் கண்டனர். அறிவு குறைந்த பிள்ளைகள் கபிலர் தான் குதிரையைத் திருடினார் என்று அவர் மீது ஆயுதங்களைப் பிரயோகித்தனர்.முனிவரிடம் இருந்து புறப்பட்ட தீப்பிழம்பு பிள்ளைகள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கியது.இதைஅறிந்த சகரன்,தன் மூத்த மனைவியின் மகன் அசமஞ்சனின் பிள்ளையை கபிலரிடம் நௌப்பினான்.அமுஷ்மனன் என்ற வன் கபிலரிடம் சென்று வணங்கி,தன் தந்தை,சிறிய தந்தைகள் அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வழி சொல்லுமாறு வேண்டினான்.அவன் மீது இரக்கம் கொண்ட கபிலர் உங்களது பரம்பரையில் ஒரு மன்னன் வருவான்.அவன் பாகீரதி என்று சொல்லப் படும் கங்கையை தேவலோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வருவான்.இவர்களின் எரிந்த சாம்பல் மீது கங்கைத் தண்ணீர் பட்டதும் அனைவரும் மோட்சம் செல்வார்கள் என்றார்.


பகீரதனின் பரம்பரையில் வந்தவர்களே ராம, லட்சுமண,பரத,சத்ருகன் ஆவார்கள் 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11