23 - கலியுகம்

 கலியுகம் பிறந்து விட்டால் அது எப்படி இருக்கும்? என கேட்க பராசர முனிவர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.


தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள வர்ணாஸ்சிர தர்மங்கள் கலியுகத்தில் பின்பற்ற மாட்டாது.


கடவுளை ஒருவரும் வழிபடமாட்டார்கள்


குரு-சிஷ்யன் உறவு மறையும்


தடி எடுத்தவ்ன எல்லாம் தண்டல்காரன் ஆவான்


பெண்கள் கூந்தலை அழகு செய்வதிலேயே  காலம் தள்ளுவர்


பணம் பாதாளம்வரை பாயும்.பணத்தை பிறர் பொருட்டு செலவு செய்யாமல்..செல்வந்தர்கள் தன் நலனுக்கே பயன்படுத்துவர்.


பணத்தை அறவழிகளில் சம்பாதிக்காது தீயவழிகளிலேயே சேர்ப்பார்கள்


ஆண்கள் சாப்பிடும் முன் குளிக்கக்கூட மாட்டார்கள்


ஆண்களும், பெண்களும் குட்டையாகிவிடுவர்


பெண்கள் கணவனுக்குப் பணிந்து நடக்க மாட்டார்கள்


அரசர்கள் குடிமக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். அதற்கு பதிலாக வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதையேத் தொழிலாகக் கொள்வார்கள்


இளமையிலேயே முதுமை அடைவார்கள்


யாரும் விஷ்ணுவை வணங்க மாட்டார்கள்


சத்திய யுகத்தில் பத்து ஆண்டுகள் தவம் செய்து பெரும் பயனை, திருதாயுகத்தில் ஒரு ஆண்டிலும், துவாபர யுகத்தில் ஒரு மாதத்திலும்..கலியுகத்தில் ஒரே நாளிலும் தவம் செய்து அதன் பலனை அடைய முடியும்.கலியுகத்தின் சிறப்பு அது ஒன்றே!





 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11