விழ்ணு புராணம் - 12

 சடங்குகள்

--------------------

ஒரு குழந்தை பிறந்த போதும்,ஒருவன் மரித்த போதும் வெவ்வேறு வகையான சடங்குகள் செய்யப்படுகின்றன.குழந்தை பிறந்த பத்தாம் நாள் தந்தை குழந்தைக்குப் பெயர் சூட்டுகின்றான்.

திருமணங்கள் எட்டு வகியப்படும்.அவை ,பிரம்மம்,தெய்விய,அர்ஷ,பிரஜாபத்ய,அசுர,காந்தர்வ,ராட்சச,பைசாச என்பவை ஆகும்.ஒவ்வொரு வர்ணத்திற்கும் குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் குறிக்கப் பட்டுள்ளன.ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் சில கடமைகள் வகுக்கப் பட்டுள்ளன.கடவுளை வணங்குதல்,பசு, பிராமணர்கள்,முனிவர்கள்,வயது முதிர்ந்த ஆசிரியர் ஆகியோரை வணங்க வேண்டும்.திருடுதல்,பொய் பேசுதல்,பிறரை நோகச் செய்தல் ஆகியவற்றை செய்யக் கூடாது.பிறர் குற்றம் கூறக்கூடாது.பிறரது செல்வம் கண்டு பொறாமைப் படக் கூடாது.தீயவர் சேர்க்கை கூடாது.தீப்பிடித்த வீட்டிற்குள்ளோ,மரத்தின் உச்சியின் மீதோ நுழையவோ/ஏறவோக் கூடாது.வாய் பொத்திக் கொட்டாவி விட வேண்டும்.கொடிகளையும்,வணக்கத்துக்குரிய தெய்வங்களின் நிழல்களையும் மிதிக்கக் கூடாது.வீட்டிலும்.காட்டிலும் தனித்து வாழக்கூடாது.கொடிய விலங்குகள் அருகே செல்லக் கூடாது.வீட்டை விட்டு புறப்படும் முன் வீட்டுத் தலைவன் தெய்வம்,மலர்,ஆபரணம்,நெய், மதிக்கத் தகுந்த நபர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை பார்த்து விட்டு,புறப்பட வேண்டும்.நாட்டிலும், காட்டிலும் நடக்கும் போது கையில் ஒரு தடிக் கொம்புடனும்..காலில் செருப்புடனும் நடக்க வேண்டும்.உண்மை பேச வேண்டும்.உண்மை பேசுவதால் பிறருக்குத் தீங்கு உண்டாகும் எனும் நிலை வந்தால் பேசாமல் இருக்க வேண்டும். 

மகன், மகள் ஆகியோர் திருமணம்,புதுமனை புகுதல்,குழந்தைக்கு பெயர் சூட்டுதல்,முதன்முறையாகப் பிறந்த சிசுவைச் சென்று பார்த்தல் ஆகியவை நிகழும் போது அதற்குரிய சடங்குகளைச் செய்ய வேண்டும்.

சிரார்த்தம் செய்ய சிறந்த இடம் கைலை ஆகும்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11