விஷ்ணு புராணம் - 18

 சந்தனுவின் கதை

------------------


குரு வம்சத்தில்  வந்த பிரதிபாவின் மகனாகிய சந்தனு இரண்டாவது மகனாகப் பிறந்தும் முதல் மகனாகிய தேவபி காட்டிற்கு சென்று விட்ட படியால் அரசுப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.சந்தனு கங்கையையும், சத்தியவதியையும் மணந்தர.கங்கையின் மகனாக பீஷ்மர் பிறந்தார்.சத்தியவதியின் வயிற்றில் விசித்திரவீரியனும்,சித்ராங்கதனும் பிறந்தனர்.விசித்திரவீரியன் மரபில் திருதிராஷ்டிரனும், பாண்டுவும் தோன்றினர்.திருதிராஷ்டிரன் புதல்வர்கள் துரியோதனன் முதல் நூறுபேர் ஆவர்.பாண்டுவின் புதல்வர்கள் ஐவர்.அவர்கள் பஞ்ச பாண்டவர்கள் ஆவர். ,


கலியுகத்தின் தோற்றம்

--------------------------------

விஷ்ணு புராணத்தில் நான்காம் பகுதி கலியுகத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளை விரிவாகத் தெரிவிக்கிறது.பத்மநந்தன் என்ற மன்னன் தோன்றி,சத்திரியர்கள் அனைவரையும் இரண்டாவது பரசுராமனைப் போல ஒழித்து விடப் போகிறான்.அவனுக்கு எட்டு பிள்ளைகள் தோன்றுவர்.இவர்கள் நூறு ஆண்டுகள் ஆட்சி புரிவர்.ஆனால் கௌடில்யன் எனும் அந்தணன் இவர்களைக் கொன்று விடுவான்.அதன் பிறகு மௌரியர்கள் எனப்படுபவர் ஆள்வர்.சந்திரகுப்தனையே கௌடில்யன் அரசனாக நியமிப்பான்.மௌரியர்கள் 137 ஆண்டுகள் ஆள்வர்.பிறகு வரும் அங்க அரசர்கள் 112 ஆண்டுகளும் ,கன்வ அரசர்கள் 456 ஆண்டுகளும் அரசாள்வர்.அதன் பிண் வேறு பரம்பரையினர் ஆள்வர்.


கலி மிகவும் கொடுமியயான யுகமாக இருக்கும்.ஆட்சி செய்பவ்ரகள் போடு வரிக்கொடுமையினைத் தாளாது மக்கள் மலைப்பகுதிக்குள் ஓடிவிடுவர்.உண்ண உணவும், உடுக்க உடையும் இன்றி வருந்துவர்.தர்மம் அழிக்கப்படும்.மறுபடியும் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார்.அதன் பின்னர் தருமன் மீண்டும் நிலை நிறுத்தப்படும்.கலியுகம் மூன்று லட்சத்து அறுபது ஆண்டுகள் நீடிக்கும். 


தேவக அரசனின் மகளாகிய தேவகியை வசுதேவர் மணந்தார்.அவர்களை எற்றி வந்த ரதத்தை கம்சன் செலுத்தினான்.அப்போது வானில் அசரீரி"கம்சா..நீ யாரை ரதத்தில் ஏற்றி வருகிறாயோ..அவர்களது எட்டாவது மகன் உன்னை கொல்வான்" என்றது.உடன் கம்சன் தன் வாளை உருவி தேவகியை வெட்டப் பார்த்தான்.வசுதேவர் அவனைத் தடுத்து..தங்களுக்குப் பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறினார்.  


சுமேரு மலையிலுள்ள தேவதைகளிடம், ப்ருத்வி ஆகிய பூமிசென்று"தைத்திரியர்களின் கொடுமை தாங்கவில்லை.முன்னொரு காலத்தில் கலாநேமி என்ற அசுரனைக் கொன்றார் விஷ்ணு.அந்த கொடியவன் உக்கிரசேனனின் மகனாக கம்சனாகப் பிறந்துள்ளான்.கொடிய ஏனைய தைத்தியர்களாகிய  அரிஷ்டா,தேனுகா,கேசி,நரகா,சுந்தர ஆகியவர்களுடன் சேர்ந்து  கம்சன் செய்யும் கொடுமைகள் பொறுக்க முடியதாக இல்லை" என்று முறையிட்டனர். 


அவர்கள் கூறியது உண்மை என பிரம்மாவும்  கூறினார்.எல்லா தேவதைகளும் சேர்ந்து வடக்கே உள்ள கடற்கரைக்குச் சென்று விஷ்ணுவை வேண்டிக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.உலகத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழும் போதெல்லாம் விஷ்ணு பல அவதாரங்கள் எடுத்து பூமியை காப்பாற்றியுள்ளார்.  


பிரம்மன் முதலிய தேவர்களின் பிரார்த்தனியயைக் கேட்ட விஷ்ணு,தன் தலையிலிருந்து இரு முடிகளை கீழே போட்டு "இரண்டும் பூமியில் தீங்கிழைப்பவர்களை அழிக்கும்.நானே தேவகியின் எட்டாவது மகனாக பிறக்கப் போகிறேன்.கவலை வேண்டாம்" என்றார்.


அசரீரிக்கு பயந்த கம்சன், வசுதேவரையும்,தேவகியையும் சிறையில் அடைத்தான்.தேவகிக்குப் பிறந்த ஆறு ஆண் குழந்தைகளையும் வசுதேவர் தான் கொடுத்த வாக்குப்படி கம்சனிடம் ஒப்படைக்க அவன் அவற்றைக் கொன்று தீர்த்தான்.தேவகியின் ஏழாவது குழந்தை சங்கர்ஷன் என்ற பெயருடன் சிறையிலிருந்து வெளியே சென்று மறைந்து வசுதேவரின் இரண்டாவது மனைவியாகிய ரோகிணியிடம் வளர்ந்து வந்தது.தேவகிக்கு பிறந்த எட்டாவது குழந்தை வசுதேவரால் நந்தகோபர் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.நந்தகோபர் வீட்டில் அவருடைய மனைவி யசோதை பெற்ற பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக இந்த ஆண் குழ்ந்தையை யசோதையிடம் விட்டு விட்டு வசுதேவர் சிறைச்சாலை சென்றார். 


சிறையில் குழந்தை பிறந்ததைக் கேட்டு, அதுவும் பெண் குழந்தையாயினும்,கம்சன் அதை வெட்டி கொலை செய்ய முற்பட்ட போது..அக்குழந்தை ஆகாயத்தில் பறந்து எட்டுக் கைகளைக் கொண்ட காளிதேவியாக மாறி "டேய்..கம்சா.போன ஜென்மத்தில் உன்னைக் கொன்றவனே இப்போது பிறந்துள்ளான்"எனக் கூறி மறைந்தாள்.


எட்டுக் குழந்தைகள் பிறந்து விட்டதால் தேவகியையும், வசுதேவரையும் சிறையிலிருந்து விடுதலை செய்தான் கம்சன்.பின் தன் தோழர்களை அழைத்து"என் ஆற்றலில் எனக்கு நம்பிக்கை உண்டு.என்னுடன் போரிடமுடியாது இந்திரன் ஓடிய ஓட்டத்தை நீங்கள் அறீவீர்கள்.நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை.ஆனாலும் முன் ஜாக்கிரதையாக ,இப்போது மதுராவில் பிறந்துள்ள அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விடுங்கள்"என்றான்.மேலும், "என் குருவான ஜராசந்தனைத் தவிர வேறு யாருக்கும் இந்த கம்சன் அஞ்சமாட்டான்" என்றான்.


இதன் பின்னர் பாலகிருஷ்ணனும், பலராமனும் கோகுலத்தில் வளர்ந்த வரலாறு,பூதன் எனும் அரக்கி பாலூட்ட முயன்று இறந்தது..ஆகிய விஷ்ணு லீலைகள் சொல்லப்பட்டுள்ளன.யசோதை "தாமு" என வடமொழியில் சொல்லப்பட்டும் கயிற்றால் கண்ணனைக் கட்டிப் போட்டதால் தாமோதரன் என்ற பெயர் கண்ணனுக்கு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11