விஷ்ணு புராணம் - 21

 சம்பாவின் திருமணம்

-------------------------------------- 

கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனாகிய சம்பா,துரியோதனனின் மகளைக் களவாடி மணம் புரிந்துகொண்டதால் கௌரவர்களால் கைது செய்யப்பட்டான்.இதை அறிந்த யாதவர்கள் கௌரவர்களின் மேல் போர் தொடுக்க விரும்பினர்.அதைத் தடுத்த பலராமன் தான் தனியாகச் சென்று , காரியத்தை முடித்து வருவதாகக் கூரிவிட்டு அஸ்தினாபுர எல்லையினை அடைந்தான்.


பலராமன் வருவதைக் கேள்வியுற்ற பீஷ்மர்,கர்ணன்,துரியோதனன் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வந்து அவனை வணங்கி வரவேற்றனர்.உபசரனை முடிந்த பின்னர் பலராமன் "சம்பாவை விடுவித்துத் தன்னுடன் அனுப்ப வேண்டும்" என யாதவர்கள் விரும்புவதாகக் கூறினான்.  இதைக் கேட்ட கௌரவர்கள் கடுங்கோபம் கொண்டனர்."யாதவர்கள் எங்களுக்குச் சமமானவர்கள் இல்லை.எங்கள் தரத்திற்கு மிகவும் கீழாக உள்ள அவர்கள் எங்களை இவ்வாறு கேட்பது, வேலைக்காரன் தன் முதலாளியைப் பார்த்து ஏவுவது போல உள்ளது.பலராமரே..நீர் திரும்பிச் செல்லலாம்" என்று அவர்கள் கோபத்துடன் சொல்லிவிட்டு , போய் விட்டனர்.


அவர்கள் சென்ற பின் பலராமன் நகர எல்லைக்குள் காலடி எடுத்து வைத்த பலராமன், தன் கலப்பையை பூமியில் ஊன்றி அழுத்தினான்.


அஸ்தினாபுரம் முழுதும் கங்கைக்குள் அமிழ்ந்திட வேண்டும் என்பதே அவன் விருப்பம்.நகரத்தின் ஒரு பகுதி சாய்ந்து கங்கைக்குள் அமிழ்ந்து போவதைக் கண்ட கௌரவர்கள் கலங்கிப் போய் ஓடி வந்து பலராமனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.பின் சம்பாவையும் அவன் மனைவியையும் பலராமனுடன் அனுப்பி வைத்தனர்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11