விஷ்ணு புராணம் - 13

 ககுத்தனின் முன்னோர்

-----------------------------

மனுவின் தும்மலில் பிறந்தவன் இட்சவாகு.இட்சவாகுவின் மகன் பிரஞ்செயன்.ஒருமுறை தேவர்களும்,அசுரர்களும் கடும் போர் புரிந்தனர்.போரில் வெல்ல முடியாத தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர்.அவர்களிடம் விஷ்ணு..தான் பரஞ்செயன் என்ற பெயரில் பூமியில் அவதரித்திருப்பதாகவும்..அவ்வாறு அவதரித்த பரஞ்செயன் தலைமையில் தேவர்கள், அசுரர்களை வெல்ல முடியும் என்றும் கூறினார்.


தேவர்கள் பரஞ்செயனிடம் வந்து தங்களுக்குத் தலைமையேற்று போரிட வேண்டுமென வேண்டினர்.அதற்கு பரஞ்செயன், "இந்திரனின் தோளில் ஏறிக்கொண்டுதான் போரிட வேண்டும்" என்றான்.அதற்கு  தேவர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்குத் தான் தலைமைத் தாங்கி போரிடத் தயார் என்றான்.உடன் இந்திரனும் காளை உருவெடுக்க, காளையின் மீது அமர்ந்து போரிட்டு அசுரர்களை வென்றான் பரஞ்செயன்.தோள் என்ற பொருளுடையது "ககுத்" எனும் சொல்.தோளின் மீது அமர்ந்து போரிட்ட்டதால் பரஞ்செயன் அன்று முதல் ககுத்தன் என அழைக்கப்பட்டான்.


ககுத்தனின் வழியில் வந்தவன் யுவனசா என்ற அரசன்.நீண்டநாள் குழந்தை பேறு இல்லாததால்,அதற்கு வேண்டி யாகம் செய்யுமாறு முனிவர்களிடம் கூறினான்.சடங்குகள் நடு இரவில் முடிவு பெற்றதால்..முனிவர்கள் புனித நீரினை இரவு முழுதும் ஒரு பானையில் வைத்திருந்தனர்.யுவனசாவின் மனைவிக்கு அந்த புனித நீரைக் கொடுத்தால் பலம் வாய்ந்த மகன் பிறப்பான் எனக் கருதிய முனிவர்கள் அதைப் பத்திரமாக வைத்திருந்தனர்.ஆனால், மிகவும் தாகம் எடுத்ததால்,மன்னன் யுவனசா ,அப்புனித நீரை...சாதாரணத் தண்ணீர் என நினைத்து பருகிவிட்டான்.இதனால் ஒரு குழ்ந்தை யுவனசாவின் உடலில்  புகுந்து வளர ஆரம்பித்தது.இவ்வுலகில் அது ஜனனம் புரிய  வேண்டிய வேளையில்,மன்னனின்  வலது பக்கத்தைப் பிளந்து கொண்டு  பூமியில் வந்த்து.ஆனால்..இதனால் மன்னன் இறக்கவில்லை.ஆயினும், அக்குழந்தைக்குத் தாய் யார்? என கேள்வி எழுந்தது.இச்சூழலில், இந்திரனே அக்குழந்தைக்குத் தாயாக இருக்க இசைந்தான்.அக்குழந்தை "மாந்தாதா" எனும் பெயர் பெற்றது.இந்திரன் வளர்த்ததால் அக்குழந்தை ஒரே நாளில் முழு வளர்ச்சி அடைந்து முழு உலகத்தையும் அதுவே ஆட்சி செய்யத் தொடங்கியது. 


மாந்தாதாவின் ஆட்சிக் காலத்தில் "சௌபரி" எனும் முனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் நீருக்கு அடியில் வாழ்ந்து வந்தார்.நீரில் மீன்களின் அரசன் தன் குழந்தைகள்,பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதைப் பார்த்தான்.உடன் தானும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் விளையாட விரும்பினான்.மாந்தாதா அரசனுக்கு ஐம்பது பெண்கள் இருந்தனர்.அவர்களில் ஒருவரைத் தனக்கு செய்து வைக்குமாறு கேட்டான்.ஆனால் வயதான முனிவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க மன்னன் விரும்பவில்லை.ஆனால், அந்தக் காரணத்தைக் கூறினால்,முனிவர் சபித்து விட்டால் என்ன செய்வது? என நினைத்து,தங்கள் குல வழக்கப்படி தன் பெண்களே தேர்ந்தெடுக்கும் மணமகனுக்கே மணமுடிக்க வேண்டும் என்றான்.


ஆனால், அரசனின் எண்ணத்தைத் தெரிந்து கொண்ட முனிவன்,ஒருமுறை அவனது மகள்களைப் பார்க்க அனுமதித்தால்,அவர்களைப் பார்ப்பாதாயும்,அவர்களில்  யாரேனும் தன்னை விரும்பினால் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினான்.அவர்கள் மறுத்து விட்டால் தானும் சென்று விடுவதாகவும் கூறினான்.இதற்கு அரசனும் ஒப்புக் கொண்டான்.தன் தவ வலிமையால் சௌபரி     முனிவன் அரசனின் பெண்களைப் பார்க்கப் போகுமுன் தன்னை அழகான ஒரு இளைஞனாக மாற்றிக் கொண்டான்.அப்போது ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து வர..அவர்கள் ஒவ்வொருவரும் தனித் தனியே  அவனை விரும்பினர்.


முனிவன் அவர்கள் அனைவரையும் மணந்து கொண்டு,தன் ஐம்பது மனைவிகளையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தான்.விஸ்வகர்மாவை அழைத்து ஒவ்வொருவருக்கும் அழகான மாளிகையை, நீர் நிரம்பிய தடாகங்கள்,அதில் தாமரை மலர்கள், அன்னப் பறவைகளுடன் அமைக்கச் சொன்னான்.விஸ்வகர்மாவும் அப்படியே அமைத்தான்.


ஒருநாள் மாந்தாதா,தன் பெண்களைக் காண வந்தான்.முதல் மகளைக் கண்டான்.அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும்,தன் கணவன் தன்னுடனேயே இருப்பதால் மற்ற சகோதரிகள் வருந்துவார்களோ என நினைப்பதாகவும் கூறினாள்.மற்றொரு மகளிடம் சென்ற போது அவளும் அப்படியே சொன்னாள்.சௌபரி முனிவன் தன் தவ வலிமையால் தன்னைப் போல ஐம்பது உருவங்களை உண்டாக்கி அனைவருடனும் தனித்தனியே வசித்து வந்ததை அறிந்தான் மாந்தாதா..அவனது தவ வலிமையினைக் கண்டு அரசன் அவனை விழுந்து வணங்கினான்.


சில நாட்களுக்குப் பிறகு தன் மக்களிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்த "சௌபரி" முனிவன்,அந்தப் பாசமே தன் தவத்திற்கு  இடையூறாக இருப்பதாக நினைத்தான்.மேலும் இது மாயையின் காரணமாகவே ஏற்பட்டது என்று அறிந்து அன்று முதல் விஷ்ணுவை தியானிப்பதிலேயே தன் மீதமுள்ள நாட்களைக் கழித்தான். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11