வாயு புராணம் (சிவ புராணம்) - 4

 தாரகாசுரன் கதை

---------------------------


தாரா என்ற அரசனுக்கு தாரகன் என்ற மக்ன பிறந்தான்.அவன் தேவர்களை வெல்ல வேண்டும் என கடும் தவத்தில் இருந்தான்.ஒரு கால் கட்டைவிரலை ஊன்றிக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே ,தண்ணீர் மட்டும் பருகி தவம் இருந்தான்.பின், தண்ணீரும் குடிக்காது..காற்றை மட்டும் உட்கொண்டு தவம் இருந்தான்.நீரின் நடுவே நின்றும்,பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் தவமிருந்தான்.ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி தவம் செய்தான்.


இறுதியில். பிரம்மன் தோன்றி, அவன் தவத்தை மெச்சி, அவனுக்கு என்ன வேண்டும்?எனக் கேட்டார்.


"சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக்கூடாது.என்னளவு பலமுடைய மற்றொருவரை பிரம்மா படைக்கக் கூடாது"என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.சிறிது காலத்தில் தேவர் உலகம் உட்பட அனைத்து உலகங்களையும் எரித்து தேவர்களையெல்லாம் தனக்கு அடிமை ஆக்கினான்.நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர்.


பிரம்மன், "நான் கொடுத்த வரத்தைத் திரும்பப் பெற முடியாது.மகாதேவ்ன இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார்.பார்வதியும் தனியே தவமிருக்கிறார்.இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது"என்று சொன்னார்


தேவர்கள் அனைவரும் சேர்ந்து "கந்தர்பன்" என்னும் பெயரை உடைய மன்மதனிடம் சென்று "எப்படியேனும் மகாதேவனின் தவத்தைக் கலத்து பார்வதியை மணந்து கொள்ள செய்வாயாக" என வேண்டினர்.


அவர்கள் விருப்பப்படி மன்மதன் சிவன் இருக்குமிடம் சென்றான்.அவன் வரவால் இயற்கைக்கூட காலமாறுதல் செய்தது.தென்றல் வந்தது.மரங்களில் மலர்கள் பூத்தன.வண்டுகள் ரீங்காரமிட்டன.பறவைக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாய் ஜோடி ஜோடியாக இசை பாடின.சிவபெருமான் கண் விழித்தார்.அதே நேரம் மறுபக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த பார்வதியும் அங்கு வந்து சேர்ந்தாள்.கண் விழித்த சிவபெருமான் சற்று முற்றும் பார்த்தார்.திடீரென வசந்த காலம்.யாரால் வந்தது..என்று பார்த்தார்.மன்மதனோ ஓடி ஒளிந்தான்.உடனே சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.அவன் மனைவியாகிய ரதி அழுது புரண்டாள். தேவர்கள் சிவபெருமானை வணங்கி "ஐயனே! தாரகாசுரன் கொடுமையைத் தாங்கமுடியாத நாங்கள் செய்த சூழ்ச்சி இது.எங்கள் வேண்டுகோளை ஏற்றதால் மன்மதன் இப்படிச் செய்தான்.அவனை மன்னித்து உயிர் பிச்சைத் தர வேண்டும்"என வேண்டினர்.


சிவபெருமானோ,"அது நடக்காத காரியம்.நடந்தது நடந்து விட்டது.மன்மதன் கிருஷ்ணனின் மகன் பிரதியும்னனாகத் தோன்றுவான்.அதுவரை ரதி பொறுத்திருக்க வேண்டும்"என்று கூறி விட்டார்.தேவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.சிவன் ,பார்வதி மணம் நடைபெறவில்லை.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11