வாயு புராணம் (சிவ புராணம்) - 13

  அத்ரிஈஸ்வரதீர்த்தம்

---------------------------------------

சுமதா என்றொரு காடு இருந்தது.அங்கு பல ஆண்டுகள் மழையில்லாததால் மரங்கள் கருகி உயிரினங்கள் மிகவும் துன்புற்றன.அவ்வனத்தில் அத்திரி என்றொரு முனிவரும்..அவரது மனைவி அனுசுயாவும் வாழ்ந்து வந்தனர்.மழை வேண்டி சிவனைக் குறித்து அத்ரி தவமிருந்தார்.அன்ன, ஆகாரமின்றி அவர் தவ்ம இருப்பதைக் கண்ட அவரது மனைவி அனுசுயாவும் சிவனை வேண்டி தவமிருந்தாள்.பல ஆண்டுகள் தவம் நீடித்தது.திடீரென அத்ரிக்கு அதிக தாகம் எடுக்க அனுசுயாவைப் பார்த்து..எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்..என்றார்.அனுசுயாவும் ஒரு குடத்தியத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்.


அப்போது அவள் எதிரே ஒரு பெண் தென்பட்டாள்.அப்பெண் இவளைப் பார்த்து,"அனுசுயா..நான் கங்காதேவி..உன் தவத்தைக் கண்டு மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றாள்.


உடன் அனுசுயா, "நீதான் கங்கை என்றால் இங்கே ஒருகுளத்தை உண்டாக்கி அதில் கங்கை நீரை நிரப்புவாயாக" என்றாள்.அவ்வறே நடந்தது.


அனுசுயாவும், குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு அத்ரியிடம் வந்து நடந்ததைக் கூறினாள்.அவர் உடன் அனுசுயாவுடன் குளக்கரைக்குச் சென்று கங்கையைப் பார்த்து,"தாயே! நீ இங்கேயே இருக்க வேண்டும்"என  வேண்டினார்.கங்கையும் ஒப்புக் கொண்ட பிறகு, சிவன் அங்கு வந்து அனுசுயாவிடம்"உன் தவத்திற்கு மெச்சினேன்..என்ன வரம் வேண்டும்?" என்றார்."தாங்களும் இவ்வனத்தில் தங்க வேண்டும்" என அவள் வேண்ட சிவனும் ஒப்புக் கொண்டார்.


சிவனும் ,கங்கையும் தங்கிய அந்த இடம் அத்ரிஈஸ்வர் தீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது. 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11