வாயு புராணம் (சிவ புராணம் ) - 8

 சிவன் ஏற்காத சம்பங்கிப் பூ

----------------------------------- 


லோமஹர்ஷன் முனிவர் மற்ற முனிவர்களுக்கு சிவ புராணத்தை சொல்லிக் கொண்டு வரும் போது"சிவனை திருப்தியடைய செய்வது எளிது.சம்பங்கிப் புவைத் தவிர வேறு எந்தப் பூ கிடைத்தாலும் அதைச் சிவனுக்கு அர்ப்பணித்தால் அதை அவர் ஏற்று மகிழ்வார்"என்றார்.முனிவர்கள் "அது ஏன் அவர் சம்பங்கிப் பூவை ஏற்பதில்லை"என்றனர்.லோமஹர்ஷன் கூற ஆரம்பித்தார்.


ராம, லட்சுமணர்கள் சீதையை அழைத்துக் கொண்டு வனவாசம் சென்றனர்.அவர்கள் காட்டில் இருக்கும் போது தசரதன் இறந்த செய்தி அவர்களுக்கு எட்டிற்று.உடன் ராமன் லட்சுமணனிடம் அருகில் இருக்கும் கிராமம் சென்று சிரார்த்தம் செய்ய தேவையானப் பொருள்களை பெற்று வரச் சொல்லி அனுப்பினார்.லட்சுமணன் சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததாலும், உச்சி நேரத்தில் சிரார்த்தம் செய்து முடிக்க வேண்டும் என்பதாலும் ராமன், லட்சுமமணனைத் தேடிச் சென்றார்.இருவருமே நீண்ட நேரம் வராததாலும்..உச்சி காலம் நெருங்கியமையினாலும் சீதாவே சிரார்த்தத்தை செய்து முடிக்கச் சென்றாள்.பால்கு நதியில் குளித்து விட்டு,ஒரு விளக்கை ஏற்றி, பக்கத்தில் இருந்த சம்பங்கிச் செடியிலிருந்து பூக்களைப் பறித்து சிரார்த்தத்தை முடித்தாள்.முடிவில் ஆகாயத்திலிருந்து இரண்டு கைகள் மட்டும் தோன்றி..அவள் அளித்த பூக்களை ஏற்றுக் கொண்டன.


பின் அசரீரி, "சீதா மகிழ்ச்சியடைந்தேன்.உன்னை வாழ்த்துகிறேன்" என்றது. 


சீதைக்கு ஆச்சரியம்..அந்தக் கைகளைப் பார்த்து."நீங்கள் யார்?" என வினவினாள்.


அசரீரி, "மருமகளே! நான்தான் உன் மாமனார்,நீ செய்த இறுதிச் சடங்கை மகிழ்வுடன் ஏற்கிறேன்"


உடனே சீதை, "என் கணவ்ரும்,மைத்துனரும் இதை நம்ப மாட்டார்கள்"என்று கூறினாள் 


அதற்கு அசரீரி, "கவலை வேண்டாம்.இந்த நதி,இந்த விளக்கில் உள்ள சுடர்,சம்பங்கிப் பூ,பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் பசு இந் நான்கும் நடந்ததற்கு சான்று கூறும்"என்று கூறியது.


சற்று நேரத்தில் ராம,லட்சுமணன் திரும்பினர்.சீதையை நோக்கி<விரைவில் சமையல் செய்.உச்சிப் பொழுதிற்குள் சிரார்த்தம் செய்ய வேண்டும்" என்றனர்.சீதை, "அது தேவையில்லை.சடங்கு நடந்து முடிந்து விட்ட்டது"என்று கூறி நடந்ததைக் கூறினாள்.

அதை நம்பாத இருவரும்,மறுபடியும் சமையல் செய்து தர்ப்பணத்திற்கு போகுமுன்,அவள் கூறிய சாட்சிகளை அழைத்து "நடந்ததை நடந்தபடி சொல்லுங்கள்"என்றனர்.

 நான்கும் ஒன்றும் நடைபெறவில்லை என்றன.அடுத்து இருவரும் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு சிரார்த்த சடங்கு செய்யச் சென்றனர்.அப்போது தசரதன் அசரீரியாய் பேசினார்."மகனே! மருமகள் அளித்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு திருப்தி அடைந்து விட்டேன்.மறுபடியும் ஏன் அழைக்கிறாய்?"

என்றார்."நீங்கள் சொல்வது உணமையெனில்,ஆறு, பசு,விளக்கு,பூ இவை ஏன் சான்று சொல்லவில்லை?" என்று கேட்டனர் ராமனும், லட்சுமணனும்.


"உனககு சந்தேகமெனில்..சூரியனைக் கேள்"

சூரியன்நடந்தது "உண்மை" எனச் சொல்ல..இருவரும் சீதையைப் போற்றி,அவளிடம் மன்னிப்புக் கேட்டனர்.இந்நான்கின் மீதும் கோபமடைந்த சீதை..பால்கு நதையைப் பூமிக்குள் மறைந்து போகுமாறு சபித்தாள்.விளக்கில் இருந்த சுடரை"நீ எதைப் பற்றினாலும்,அது எத்த்ன்மைத்தாயினும் அவற்றை அழித்துவிடும் கொடிய சக்தியினைப் பெறுவாய்"என்றாள்.பசு மாட்டைப் பார்த்து,"உன் வாய் பொய் சாட்சி சொன்னதால் அது தூய்மையற்று போகட்டும்.இன் பின் பகுதியே பூஜைக்கு உரியதாகட்டும்:ஏன்றவள்..சம்பங்கிப் பூக்களைப் பார்த்து இன்றிலிருந்து சிவபெருமான் ஏற்காத பூக்களாக ஆவீர்கள் என்றாள்.

அன்றிலிருந்து சிவபெருமான் சம்பங்கிப் பூக்களை ஏற்பதில்லை.    

  



Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11