வாயு புராணம் (சிவ புராணம் ) - 3

 பிரபஞ்ச தோற்றம்

--------------------------------

எங்கும் நிரம்பியிருந்த நீரில் விஷ்ணு ஒரு மிகப் பெரிய முட்டையை உண்டாக்கினார்.பின், விஷ்ணு மிகப் பெரிய வடிவெடுத்து அம்முட்டைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.இதனிடையே பிரம்மன் தியானத்தின் மூலமாக கர்தமன்,தட்சன்,மரீச்சி ஆகிய முனிவர்களை உண்டாக்கினான்.மரீச்சியின் பிள்ளை காய்ஸ்பன் தட்சனின் 60 பெண்களில் 13 பேரை மணந்து கொண்டான்.காசிபனின் பிள்ளைகளும்,தட்சனின் மற்ற பெண்களும் ஆதித்தகளாகவும், தைத்தியர்களாகவும்,தானவர்களாகவும்,மரங்களாகவும்,பறவைகளாகவும், பாம்புகளாகவும் ஆயினர்.


ருத்ரன் என்ற பெயரில் தோன்றிய சிவன், தட்சனின் மகளாகிய சதியைத் திருமணம் செய்து கொண்டார்.ஆனால் ருத்ரனும், தட்சனும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர்.ருத்ரனை தள்ளி வைத்து விட்டு தட்சன் யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தான்.சதியை அழைக்காவிடினும் அவள் சென்று அதில் கலந்து கொண்டாள்.தட்சன் அவளைப் பேசிய ஏச்சுக்களால் சதி தன் உயிரை விட்டு விட்டாள்.இதனால் கோபமடைந்த ருத்ரன் தன்னுடைய துணைவனை அழைத்து தட்சனின் யாகத்தை அழித்து,அவனையும் கொன்றுவிடுமாறுக் கூறினார்.தட்சன் யாகம் அழைக்கப்பட்டு,அங்கு வந்திருந்த தேவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.இறுதியில் ருத்ரனின் கோபம் தணீக்க்பபட்டு தேவர்கள் பிழைக்கவைக்கப் பட்டனர்.சதி,இமயவானுக்கும்,மேனகைக்கும் ,பார்வதி என்ற பெயரில் மகளாகப் பிறஹ்தாள்.பின்னர் சிவபெருமானை மணந்தாள்.  


Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11