வாயு புராணம் (சிவ புராணம்) - 2

 பிரம்ம்னௌம், விஷ்ணுவும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது ஜோதி வடிவமான லிங்கம் ஒன்று வந்து நின்றது.பிரம்மனும், விஷ்ணுவும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, வந்தது யார்? என வியந்தனர்.


அந்த ஜோதி கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர்ந்தும்,மிகக் கீழேச் சென்றும் காட்சியளித்தது.விஷ்ணு பிரம்ம்னைடம் ,"நாம் சண்டையிடுவதை நிறுத்திக் கொள்வோம்,இந்த விஷயத்தில் நாம் ஆதியையும், அந்தத்தையும் காண வேண்டும்.நான் காட்டுப் பன்றி உருவெடுத்து இதன் அந்தத்தைக் காண்கிறேன்.நீ அன்னப் பறவையாக வடிவெடுத்து..இதன் முடி எங்கிருக்கிற்டஹு எனப் பார்"என்று கூறினார்.


விஷ்ணுவின் யோசனையைக் கேட்ட பிரம்மன் அன்னப்பறவையாகி மேலே பறந்து சென்றார்.விஷ்ணு ஆண் பன்றி உருவெடுத்து பூமையைத் துளைத்துக் கொண்டு கீழே சென்றார்.அவர்கள் பல காலம் தேடும் பணியில் ஈடுபட்டும் லிங்கத்தைன் அடியையும், முடியையும் காண முடியவில்லை.பிறகு இருவரும் பழைய இடத்திற்கேச் சென்று சிவனைத் துதித்தனர்.அப்போது 5 முகங்களும், 10 கைகளும் கொண்ட லிங்க வடிவில் ஈசன் தோன்றினார்.இவர்களைப் பார்த்து,"பிரம்மனே!விஷ்ணுவே! நீங்கள் இருவரும் என்னில் ஒரு பகுதியாகும்.நாம் மூவரும்  ஒன்றுதான்.பிரம்மனாகிய னீ படைக்கும் தொழில்.விஷ்ணூவாகிய உமக்கு காக்கும் தொழில் கொடுக்கப் படுகிறது.சிவனாகிய நான் அனைத்தையும் அழிக்கும் தொழில் செய்வேண்.என்னிலிருந்து ருத்ரன் என்பவன் தோன்றுவான்.அவனும், நானும் ஒன்றுதான்.அவன் இந்த அழித்தல் தொழிலைச் செய்வான்.நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதையும்,ஒரு பணியைச் சேர்ந்து செய்கிறோம்  என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்" என்றார். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11