வாயு புராணம் (சிவ புராணம்) - 11

 கணேசனும்..கார்த்திகேயனும்

-----------------------------------------

சிவனுக்கும் , பார்வதிக்கும்...கணேசன்,கார்த்திகேயன் என இரு மகன்கள் இருந்தனர்.பருவம் அடைந்த இருவருக்கும் திருமணம் செய்விக்க தாய்- தந்தை எண்ணினர்.ஆனால்..இருவரில் யாருக்கு முதலில் திருமணம் செய்விப்பது என்பதில் இருவருக்கும் பிரச்னை.ஒருவருக்கு முதலில் செய்தால்..மற்றவரின் மன்ம வருத்தப்படுமே என நினத்தவர்கள்..அவர்களை அழைத்து.."நீங்கள் இருவரும் உலகைச் சுற்றி வர வேண்டும்..யார் முதலில் வருகிறார்களோ..அவர்களுக்கு முதலில் திருமணம் செய்து வைக்கிறோம்" என்றனர்.

இதைக் கேட்ட கார்த்திகேயன் உடன் புறப்பட்டு விட்டான்.ஆனால் கணேசனோ சிறிது தூரம் கூட  களைப்பின்றி தன்னால் போக முடியாது என சிறிது நேரம் யோசனை செய்தான்.பின் குளித்து வந்து தந்தை-தாய் இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் அமரச் செய்தான்..பின் அவர்களை வணங்கி..ஏழு முறை சுற்றி வந்து..உடன் தன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்.சிவன் அவனிடம், "உலகை சுற்றி வர வேண்டுமென உனக்குக் கட்டளையிட்டோமே..நீ இங்கேயே இருக்கின்றாயே....கார்த்திகேயன் புறப்பட்டுச் சென்று விட்டான்.நீயும் செல்" என்றாள்.

கணேசன் அவரைப் பார்த்து, "தாய்-தந்தையை ஒருதரம் பிரதட்சணம் செய்தாலே..உலகை வலம் வந்ததாக அர்த்தம்..என வேதங்களில் சொல்லியுள்ளது.இது இல்லை யெனில் வேதங்களில் சொன்னது பொய் என்றாகி விடும்.ஆகவே..உடனே என் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவும் "என்றான்.

அதற்கு மறுப்பு கூற முடியாமல் சிவன், கணேசன் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.காசிப முனிவரின் பெண்களாகிய சித்தி,புத்தி என்ற இருவரையும் கணேசனும் மணம் செய்வித்தார்.சித்திக்கு, "லக்ஷா" என்ற மகனும், புத்திக்கு "லபா" என்ற பிள்ளையும் பிறந்தனர்.


உலகைச் சுற்றிவிட்டு வந்த கார்த்திகேயன், ஏற்கனவே கணேசனுக்கு திருமணமும் ஆகி இரு பிள்ளைகளும் பிறந்திருப்பதைப் பார்த்து..இனி பெற்றோருடன் தங்குவதில்லை என சொல்லிவிட்டு கிரௌஞ்ச மலைக்குச் சென்று தங்கி விட்டான்.சிவனும், பார்வதியும் தனியே இருக்கும் மகனை  முறையே அமாவாசை அன்று ஒருவரும், பௌர்ணமி அன்று ஒருவருமாக கிரௌஞ்ச மலைக்குச் சென்று பார்த்து வருவது என்றாகியது.அதனால்தான் வடநாட்டில் உள்ள கார்த்திகேயன் கோயிலுக்கு பெண்களை அனுமதிப்பதில்லை    


லிங்க வடிவங்கள் 

------------------------

பக்தர்கள் எங்குக் கூடினாலும் அங்கே சிவன் லிங்க வடிவில் தோன்றுகிறார்.ஆயிரக்கணக்கான இடங்களில் சிவன் இருந்தாலும் 12 முக்கியமான லிங்கங்கள் "ஜோதிர் லிங்கங்கள்" எனப் போற்றப்படுகின்றன.அவை, "சோமநாதபுரம்",மல்லிகார்ஜூனம்,பீமசங்கரன்,விசுவநாதன்,திரியம்பகம்,வைத்தியனாதன்,நாகேசுவரன்,ராமேஷ்வரம்,குஷ்மேஷா ஆகியவை ஆகும். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21