வாயு புராணம் (சிவ புராணம்) - 12

 நந்திகேசுவர தீர்த்தம்

---------------------------------


வெகு காலத்திற்கு முன் கர்ணகி என்ற இடத்தில் ஒரு வேதியன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரு பிள்ளைகள்.மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு விட்டு அவன் வாரணாசி சென்றான்.அங்கேயே  அவன் இறந்துவிட்டதாக செய்தி வந்ததால்..அங்கேயே பிள்ளைகள் சடங்கு செய்தனர்.வேதியனின் மனைவியும் இறக்கும் நேரம் வந்தது.ஆனாலும் உயிர் பிரியாது அவதிப் பட்டாள்.அவளது பிள்ளைகள் "அம்மா! உன் விருப்பம் ஏதோ ஒன்று நிறைவேறாமல் இருக்கின்றது..ஆகவேதான் உன் உயிர் பிரிய மறுக்கின்றது.அது என்னவெனக் கூறினால்..அதைச் செய்கிறோம்" என்றனர். அதற்கு  அவள்"இறப்பதற்குள் உங்களது தந்தையைப் போல வாரணாசி போக நினைத்தேன்.அது முடியவில்லை.ஆகவே நான் இறந்ததும் என் எலும்புகளை அங்குக் கொண்டு செல்வதானால்..நான் அமைதியாகச் சாவேன்" என்றாள்.பிள்ளைகளும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர்.உடன் அவள் உயிர் பிரிந்தது.


அவளது மூத்த மகன் சுவடி..எலும்புகளை எடுத்துக் கொண்டு வாரணாசி சென்றான்.மிகவும் நீண்ட தூரமானதால்..இரவு ஒரு அந்தணன் வீட்டுத் திண்ணையில் தங்கினான்.அந்தணன் காலையில் எழுந்து அவன் வீட்டுப் பசுவிடம் பால் கறக்க முயற்சித்தப் போது கன்றுக் குட்டி மிகவும் அடம் செய்தது.கோபத்துடன் அந்தணன் அந்தக் கன்றுக் குட்டியை நையைப் புடைத்தான்..பின் பாலைக் கறந்துக் கொண்டு சென்றான்.அப்போது தாய்ப்பசு, கன்றுக்குட்டியுடன் பேச ஆரம்பித்தது.அந்த உரையாடலை சுவடி கேட்டான்.

"ஏன் அருமைக் கன்றே! அவன் உன்னை அடித்து விட்டான் என வருந்தாதே! நான் அவன் மகனை என் கொம்புகளால் குத்திக் கொன்று விடுகின்றேன்" என்றது.இதைக் கேட்ட சுவடி வியப்படைந்தாஅன்.என்ன நடக்கப் போகிறது என அறிய அடுத்த நாளும் அங்கேயே தங்கினான்.அடுத்தநாள் விடியலில் பால் கறக்க வந்த அந்தணனின் மகனை, பசு தன் கொம்புகளினால் குத்திக் கொன்றது.ஆனால்..என்ன அதிசயம்..வெண்மை நிறம் கொண்ட அப்பசு கருமை நிறமாக மாறியது.அந்தணனைக் கொன்றதால் "பிரம்மஹத்தி" தோஷம் அதனைப் பிடித்துக் கொண்டது.


வீட்டை விட்டு வெளியேறியது அப்பசு.சுவடியும் அது எங்கேப் போகீறது என அறிய அதனைத் தொடர்ந்தான்.அது நர்மதை ஆற்றில் நந்தி தீர்த்தம் எனும் இடத்தில் ஆற்றில் இறங்கிக் குளித்தது.உடன் அது மீண்டும் வெண்மை நிறத்துக்கு மாறியது.நந்தி தீர்த்தத்தில்  குளித்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பதை அறிந்தான் அவன்.பின்..அவனும் அங்குக் குளித்துவிட்டு வாரணாசி கிளம்பினான்.அப்போது ஒரு அழகியப் பெண் அங்குத் தோன்றி..அவனை எங்கே செல்கிறாய்? எனக் கேட்டது.


அவனும், தன் தாயின் எலும்புகளை எடுத்துக் கொண்டு வாரணாசியில் கங்கையில் கலக்கச் செல்வதாகக் கூறினான்.பின் அப்பெண்ணைப் பார்த்து "நீ யார்?" என்றான்.


அதற்கு  அப்பெண், "நான் தான் கங்கை.நீ வாரணாசி வரத் தேவையில்லை.இந்த நந்தி தீர்த்ததிலேயே உன் தாயின் எலும்புகளைக் கரைத்து விடலாம்"என்றாள். அவனும் அப்படியேச் செய்ய வானில் அவன் தாய் தோன்றி"மகனே! நான் திருப்தியடைந்து விட்டேன்.இப்போது மோட்சம் செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.


நந்தி தீர்த்தம் இப்படி பெயர் பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு.முன்னொரு காலத்தில் ஒரு பெண் சிவனை நோக்கி இங்கு கடும் தவம் செய்தாள்.அந்த தளமே இதுவாகும். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11