வாயு புராணம் (சிவ புராணம் ) - 6

 சிவ பார்வதி திருமணம்

-----------------------------------------

கயிலையில் இருந்த சிவன் சப்தரிஷிகள் என சொல்லப்படும் ஏழு முனிவர்களை அழைத்து இமவானிடம் சென்று அவளது மகளான பார்வதியை தான் மணக்க விரும்புவதாகச் சொல்லுமாறு பணித்தான்.மிக்க மகிழ்ச்சி கொண்ட முனிவர்கள் இமவானிடம் சென்று விஷயத்தைக் கூர அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான்.திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.


திருமணத்தன்று முனிவர்கள், யோகிகள்,ரிஷிகள்,கந்தர்வர்கள்,அப்சரஸ்கள்,தேவர்கள்,திக்பாலர்கள் ஆகியவர்களும், திருமால், நாரதர்,பிரம்மன் ஆகியோரும் வந்து கூடினர்.பார்வதியின் தாயாகிய மேனகைக்குக் தன் மருமகனாகிய சிவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே வந்தவள்..கந்தர்வர்களின் தலைவனாகிய விஸ்வவசு அழகாக இருந்ததால் அவன் தான் மருமகன் என நினைத்தாள்.நாரதர், "இல்லை" என்று சொன்னதும் அவனைவிட அழகனான குபேரனைப் பார்த்தாள்.அழகில் சிறந்த வருணன்,அக்னி,இந்திரன்,சந்திரன், சூரியன்,பிரம்மன், பிரகஸ்பதி,விஷ்ணு என ஒவ்வொருவராகப் பார்த்து ..ஒருவரோடு ஒருவர் அழகாய் இருப்பதால்..இவர்தான் மாப்பிள்ளையோ என சந்தேகப்பட்டாள்.நாரதர், "இவர்கள் அனைவரும் சிவனின் பணியாட்கள்.அதோ பார் சிவ பெருமான் வருகிறார் "என்றார்.  மேனகை திரும்பிப் பார்த்தாள்.என்னஒரு கொடுமை.ஒரே பிசாசுக் கூட்டங்கள்.எல்லாம் கறுப்பு நிறம்.அந்தக் கூட்டத்தின் நடுவே ஐந்து தலைகளும்,பத்து கைகளும் கொண்ட ஒரு வடிவம் முழுதும் சாம்பல் பூசப்பட்டு இருந்தது.கழுத்தில் எலும்பு மாலை,பாம்பு..இடுப்பில் புலித்தோல்.தலையில் சடை.இவர்தான் மாப்பிள்ளை என நாரதர் சொன்னதும் மேனகை மயங்கி விழுந்தாள்.


மயக்கம் தெளிந்து எழுந்ததும்,"என்ன சொன்னாலும் சரி.இந்தப் பைத்தியத்திற்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன்.என் மகள் இந்திரன் முதலிய வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும்...மாட்டேன் என்று அவள் சொன்னால் அவளுக்கு விஷத்தைக் கொடுத்து கொன்று விடுவேன்.இந்தத் திருமணத்தை நடக்க விட மாட்டேன்"என்றாள்.


இதைக் கேட்ட நாரதர், சிவனிடம், "ஐயனே! தயவு செய்து தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு மேனகையின் துயரத்தைப் போக்குங்கள்"என்றார்.


ஒரு விநாடி நேரத்தில், சிவன் தன் உருவத்தை மாற்றிக் கொண்டர.அழகாக மாறிவிட்ட அவரைப் பார்த்து மேனகை ,அவர் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள்.


பிரம்மன் சடங்குகளைச் செய்ய சிவ-பார்வதி திருமணம் இனிதே நடந்து முடிந்தது. 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11