வாயு புராணம் (சிவ புராணம்) - 14

    ஜோதிர்லிங்கங்கள்

---------------------------------- 


1) சோமநாதர்

------------------------

தட்சனின் 27 பெண்களை மணந்து கொண்ட ச்னஹ்திரன், ரோகிணியின் மீது மட்டும் அதிக அளவில் அன்பு செலுத்தி வந்தான்.இதனால்  மற்றவர்கள் மனம் வருந்தினர்.அவர்கள் தட்சனிடம் சென்று முறையிட்டனர்.தட்சனும் சந்திரனிடம்..எல்லோரிடமும் சமமாக நடந்துக் கொள்ளுமாறுக் கூறினான்,.இப்படி பலமுறை எச்சரித்தும் சந்திரன் அதைக் காதில் வனகிக் கொள்ளவே இல்லை.இதனால் கோபம், அடைந்த தட்சன்,"நீ தேய்ந்து போவாயாக" என சாபமிட்டான்.பயந்து போன சந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான்..பிரம்மன், "உனக்கு உதவும் சக்தி எனக்கில்லை.நீ சிவனிடம் சென்று முறையிடு"என்று கூற..சந்திரன் சரஸ்வதி நதியின் கரையில் பிரபச தீர்த்தத்தில் ஒரு லிங்கம் அமைத்து ஆறுமாதங்கள் தீவிரமாக வழிபட..சிவன் நேரில் தோன்றி,"என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.


சோமன், நடந்ததையெல்லாம் கூறி,தன்னைக் காக்கும்படி வேண்டினான். செய்த தறுக்கு கொடுத்த தண்டனையை போக்க முடியாது என்ற சிவன்.."இதற்கு ஒரு வழி சொல்கிறேன்..கிருஷ்ணபட்சம் 14 நாட்கள் உன் மாமனார் சாபப்படி நீ தேய்ந்து போவாயாக.பின், சுக்கிலபட்சம் 14 நாட்கள் நீ வளர்ந்து முழு வடிவம் பெற வரம் தருகிறேன்" என்றார்.


அதிலிருந்து சந்திரன் தேய்வதும்..வளர்வதும் நிலைத்து விட்டன.சோமன் வழிபட்ட இடமே சோமநாதர் இருப்பிடமானது.   


2) மல்லிகார்ஜுனர்

-------------------------

தனக்கு முன்னர் கணேசனுக்கு திருமணம் ஆகிவிட்டதால் பெற்றோர்கள் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று கோபம் கொண்ட கார்த்திகேயன்,கிரௌஞ்ச மலையில் வந்துத் தங்கினான்.பெற்றோர்கள் மகனைப் பிரிந்தத் துயரத்தில் அடிக்கடிப் பார்க்க வந்த போது கார்த்திகேயன் அவர்களை நெருங்க விடவில்லை.தூரத்தில் இருந்து வருவது சிரமம் என்பதால் கிரௌஞ்ச மலைக்கு சமீபத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனத்தில் சிவ்னௌம், பார்வதியும் வந்து தங்கினர். 


3)மகாகாளர்

--------------------

சிப்ரா நதிக்கரையில் உள்ள அவந்தியில் வேதப்பிரியா அனும் அந்தணன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு தேவப்ரியா,பிரியமேதா,சுவரிதா,சுவரதா எனும் பிள்ளைகள் இருந்தனர்.இந்த அந்தணர்கள் வேதவழியைப் பற்றி சிவனை வழிபட்டனர்.இவர்கள் இருந்த இடத்திற்கு பக்கத்தில் ரத்னமாலை என்ற மலையிருந்தது.அம்மலையில் துஷ்ணன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான்.இவர்கள் சிவ வழிபாட்டைத் தொற்றவது அவனுக்குப் பிடிக்கவில்லை.இவ்வேலையில் தந்தை இறந்துவிட பிள்ளைகள் சிவனை வணங்குவதில் தீவிரமாக இருந்தனர்.அரக்கன் அவந்தியை முற்றுகையிட்டு இவர்களை அழிக்க நினைத்தான். நால்வரும் சிவலிங்கத்திடம் சென்று தங்களின் கூறையைக் கூற..திடீரென பெரும் சப்தத்துடன் வெளிப்பட்ட சிவன் அரக்கனான தூஷ்ணனை எரித்து சாம்பலாக்கினார்.பின் அவர்களின் வேண்டுகோளின்படி மகாகாளர் அங்கேயே தங்கிவிட்டார்.   


4)ஓம்காரலிங்கம்

----------------------

விந்தியமலை எல்லா மலைகளையும் விட தான் உயர்ந்ததாகவும்,தன்னிடம்  எல்லாப் பொருளும் இருக்கின்றது என்றும் அதிகக் கர்வம் கொண்டிருந்தது.ஒருமுறை நாரதர்  அங்கு வந்தபோது தன் பெருமையைச் சொல்லிக் கொண்டது. உடனே நாரதர்,"அதிகக் கர்வம் வேண்டாம்.சிவன் வாழ்கின்ற காரணத்தாலேயே மேரு மலை உன்னை விட உயர்ந்தது"என்று கூறினார்.அதைக் கேட்ட விந்திய மலை உடனே சிவனை நோக்கித் தவம் செய்தது.ஆறுமாதம் தவம் செய்த பின் சிவன் வெளிப்பட்டார்.விந்தியம் தன்னிடத்தில் சிவன் தங்கியிருக்க வேண்டும் என் அவேண்ட ஓம்காரலிங்கமாக அங்கேயே தங்கிவிட்டார்


5)கேதார லிங்கம்

---------------------------

விஷ்ணு ஒருமுறை தன்னையே நரேன் என்றும் நாராயணன் என்றும் இரு முனிவர்களாக மாற்றிக் கொண்டார்.இமயமலையில் உள்ள "பத்ரிகாசரமம்"என்ற இடத்தில் இந்த இரு முனிவர்களூம் சிவனைக் குறித்துத் தவம் செய்தனர்.கடைசியாக சிவன் நேரில் தோன்றி,"என்னை ஏன் அழைத்தீர்கள்? நீங்களே வணங்கத் தக்கவர்கள்தானே" என்றார். இருவரும் ஆசிரமத்தின் பக்கத்தில் உள்ள கேதாரம் எனும் மலையுச்சியில் சிவன் என்றும் லிங்க வடிவில் இருக்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர்.அவர் அப்படித் த்ங்கிய இடமே கேதாரம்.அந்த லிங்கமே கேதார லிங்கமாகும்.


6 - பீம சங்கர் லிங்கம்

-----------------------------

சகிய என்ற மலையில் பீமன் என்ற அரக்கனும் அவன் தாயும் வாழ்ந்து வந்தனர்.ஒருநாள் பீமன் தாயைப் பார்த்து,"ண்ஹாம் ஏன் தனியாக வாழ்கிறோம்? என் தந்தை யார்?" என்று கேட்டான்.மிகவும் வருத்தத்துடன் தாய் கூர்கதி தன் வரலாற்றினைச் சொன்னாள்.


விராதன் என்ற ராட்சசனுக்கு தான் மனைவியாக இருந்ததாகவும்,விராதனை ராமன் கொன்று விட்டதால்..ராவணனின் தம்பி கும்பகர்ணனை தா ன் மணந்து பீமன் எனும் இப்பிள்ளையைப் பெற்றதாகவும்..இலங்கைக்குச் சென்ற கும்பகர்ணனை ராமன் கொன்றுவிட்ட்டதால்,வேறு போக்கிடம் இன்றி காட்டில் இருப்பதாகவும் கூறினாள்.ராமன், விஷ்ணுவின் அவதாரம் என்பதால் அவனை அழிக்க பீமன் பல ஆண்டுகள் தவம் செய்தான்.பிரம்மா நேரில் வந்ததும் அவனிடம் அனைவரையும் கொல்லக் கூடிய சக்தி தனக்கு வேண்டுமென கேட்டுக் கொண்டான்.அது கிடைத்ததும் பக்கத்தில் இருந்த விஷ்ணுவின் பக்தனான காமரூபனை வெண்று சிறையில் அடைத்தான் பீமன்.சிறையில் இருந்த காமரூபன்..அங்கிருந்தபடியே சிவனை வழிபட்டு வந்தான்.இதை அறிந்த பீமன் சிறைக்குள் சென்று காமரூபனை வாளால் வெட்ட முயன்றான்.சிவன் தோன்றி தன் சூலாயுதத்தால் பீமனின் வாளை கீழே விழச் செய்தார்.பீமன் பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தையும் சிவன் தன் திரிசூலத்தால் பொடியாக்கினார்.இறுதியில் சிவன், பீமனைக் கொன்றார் .காமரூபனின் வேண்டுகோளினை ஏற்று, பீம சங்கரன் என்ற பெயருடன் அங்கேயே சிவன் லிங்கவடிவமாகத் தங்கி விட்டார். 


7) விஸ்வநாதர்

------------------------


ஏழாவது ஜோதிர்லிங்கம் வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் அகௌம்.மிகச் சிறப்பு வயந்த புண்ணியத் தலம்.ஒருமுறை பிரம்மாவே இங்கிருந்து தவம் செய்தார்.மிக உக்கிரமான அத்தவத்தைக் கண்டு விஷ்ணுவே தலையை உலுப்பிய போது..அவர் கடஹில் இருந்து ஒரு மணி வாரணாசியின் ஒரு பகுதியில் விழுந்தது.அப்பகுதிக்கு "மணிக்கரணிகை" என்ற பெயர் உருவானது.பிரளய காலத்தில் உலக்ம முழுதும் நீரில் மூழ்கியபோது சிவன் தனது சூலாயுதத்தால் வாரணாசியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்.பிரளயம் முடிந்து உலகம் படைக்கப்படும் பொழுது வாரணாசியை அந்த இடத்தில் வைத்தார்.


ஒருமுறை சிவனையும், பார்வதியையும் கண்ட பிரம்மன்..தன் ஐந்து முகங்களாலும் சிவனது பெருமையைப் பாடினார்.அதில் ஒரு தலை மந்திரங்களைத் தவறாகச் சொன்னதால் சிவ்ன அந்தத தலையைக் கிள்ளி விட்டார்.அந்தணனாகிய் அபிரம்மனின் தலை கொய்யப்பட்டதால் சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது.சிவனிடம் ஒட்டிக் கொண்ட அந்த்தலை என்ன செய்தும் கீழே விழவில்லை.சிவன் வாரணாசி பக்கம் வந்த போது தலை தானே கீழே விழுந்து விட்டது.வாரணாசியின் பெருமையை அறிந்த சிவன் விஸ்வநாதராக அங்கேயே தங்கி விட்டார். 


8- திரியம்பகமும்...கௌதமரும்

------------------------------------------

நாட்டின் தென் பகுதியில் பிரம்ம பர்வதம் என்ற ஒரு மலை இருந்தது.அதன் ஒரு பகுதியில் கௌதம முனிவரும், அவரது மனைவி அகலியையும் தவம் செய்து கொண்டிருந்தனர்.பல ஆண்டுகளாக மழை இல்லாததால் காடுகள் எல்லாம் எரிந்து சாம்பலாகும் நிலை ஏற்பட்டது.அப்போது கௌதமரும், அகலியையும் வருணனைக் குறித்துத் தவம் செய்தனர்.வருணன் எதிர்ப்பட்டான்."ண்ஹாடு முழுதும் மழை இல்லை.மழை பெய்ய வேண்டும்" என இருவரும் வரம் கேட்டனர்.வருணனும் ,அது தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்று கூறி, ஒரு நீர் நிறந்த குளம் அங்கு இருக்குமாறு செய்தான்.நீர் நிறைந்த குளத்தை மற்ற முனிவர்களூம் பயன்படுத்தி வந்தனர்.கௌதமர் தன் சீடரிடம் ஒருநாள் தாண்ணீர் எடுத்து வருமாறு சொன்னார்.போன சீடன் மிகவும் நேரம் கழித்து வந்தான்.அதற்கான காரணத்தைக் கேட்க..மற்ற ரிஷிகளீன் மனைவிகள் தன்னைத் தண்ணீர் எடுக்க விடவில்லை என்றான்.அடுத்தநாள் அகல்யையே தண்ணீர் கொண்டுவரப் புறப்பட்டாள்.அனைவரும் அவளையும் தண்ணீர் எடுக்க விடவில்லை.மாறாக அவர்கள் தங்கள் கணவன்மார்களை, கௌதமரையும், அகல்யையும் அங்கிருந்தே துரத்தி விடுமாறு நச்சரித்தனர்.வேறுவழியின்றி ரிஷிகள் கணேசனைக் குறித்துத் தவம் செய்தனர்.கணேசன் எதிர்ப்பட்டதும் , அகல்யையும், கௌதமரும் அந்த எல்லையை விட்டே போக வேண்டும் என்றனர்.அந்த வேண்டுகோள் தவறானது  என அறிந்த கணேசன்,இவர்களுக்கு புத்திக் கற்பிக்க தானே ஒரு பசு உருவெடுத்து கௌதமரின் ஆசிரமத்திற்கு பக்கத்தில் வைத்திருந்த தானியங்களை தின்னத் தொடங்குகையில்,கௌதமர்..ஒரு புல்லை எடுத்து பசுவினை விரட்ட முயல..புல் பட்டு பசு விழுந்து இறந்தது.பசுவதை செய்ததால் கௌதமரும், அகல்யையும் அவ்விடத்தை விட்டு விரட்டப்பட்டனர்.


பசுவதைக்கு பிராயச்சித்தம் செய்ய நினைத்தார் கௌதமர்.பிரம்ம பர்வதத்தை நூறுமுறை சுற்றி வரவேண்டும் என்றும் மேலும் சில கடமைகளையும் முனிவர்கள் கூறினர்.சொல்லப்ப்ட்ட சடங்குகளையெல்லாம் முடித்த பிறகு கௌதமரும், அகலியையும் சிவனை நோக்கித் தவம் செய்தனர்.சிவன் தோன்றியபோது தங்களது ஆசிரமத்திற்குப் பக்கத்தில் கங்கை நதி ஓட வேண்டும் என வேண்டினர்.அதற்கு கங்கை, "சிவனும், பார்வதியும் அங்கு தங்குவதாக இருந்தால்..நான் அங்கு ஓட சம்மதம்" எண்றாள்.சிவனும், பார்வதியும் ஒப்புக் கொண்டனர்.சிவன் தங்கிய இடம் திரியம்பகம் என்று போற்றப்பட்டது.கோதாவரி என்ற பெயருடன் கங்கை அங்கே ஓடிக் கொண்டிருக்கிறது.கொடுமை செய்த முனிவர்களையும்,அவர்களது பத்தினிமார்களையும் மன்னிக்கும்படி  கௌதமர்..சிவனிடம் வேண்டினார்.


9- ராவணனும் வைத்தியநாதனும்

-----------------------------------------------

ராவணன் இமயமலையில் பல காலம் தவம் புரிந்தான்.சிவன் வெளிப்படவில்லை.பின் சற்றே தெற்கு நோக்கி வந்து கந்தகம் எனும் இடத்தில் தவம் இருந்தான்.சிவ்ன வெளிப்படவில்லை.பின் இன்னமும் தெற்கே வந்து ஒரு பெரிய குழியினைத் தோண்டி அதனுள் லிங்கத்தியை  பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.அப்போதும் சிவன் வெளிப்படவில்லை.இது கண்ட அவன் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை என எண்ணி பெரிய தீயினை வளர்த்து அதில் தன் ஒவ்வொரு தலையாகக் கிள்ளி அக்னியில் போட்டான்.மிஞ்சி இருந்த கடைசி தலையை அவன் அறுக்க முயன்ற போது,'நில்"  என்றபடியே சிவ்ன வெளிப்பட்டு, "என்ன வரம் வேண்டும்?" என்றார்.அதற்கு ராவணன் , யாவரையும் வெல்லும் வரத்தினையும்..எரிந்து போன தன் ஒன்பது தலைகளையும் திரும்பப் பெற வேண்டும் என வேண்டினான்.சிவனும் அப்படியே ஆகட்டும் என அருள் புரிந்தார்.வெட்டிய இடத்தில் இருப்பதுதான் ஒன்பதாவது ஜோதிர்லிங்கமான வைத்திய லிங்கம் ஆகும்.


ராவணன் மகிழ்ச்சியுடன் லங்கையில் இருந்த போது அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள்..நாரதரை ஏதேனும் செய்யுமாறு வேண்டினர்.உடன் நாரதர் லங்கைக்குச் சென்று ராவணனை சந்தித்து,"சிவனது வரங்களுக்கு அவ்வளவு மதிப்புத் தர வேண்டாம்.இவ்வரங்கள் உண்மையா  என அறிய சிவன் அமர்ந்திருக்கும் கைலாய மலையை நீ தூக்கிப் பார்" என்றார்.ராவணனும் அப்படியே செய்ய, கோபமடைந்த சிவன், "உன்னை அழிக்க ஒரு மனிதன் தோன்றுவான்" என ராவணனுக்கு சாபம் கொடுத்தார்.


10 நாகேச லிங்கம்

-------------------------

மேலைக் கடற்கரையில் தரௌகன் என்னும் அரக்கன் தன் மனைவி தாருகியுடன் வசித்து வந்தான்.பார்வதியிடம் அவன் பெற்ற வரத்தினால்..அவர்கள்எங்கு சென்றாலும் ஒரு பெரிய காடு அவர்களுடன் செல்லும். இந்த வரத்தால், நல்லவர்கள் இருக்குமிடம்,வேள்விகள் நடக்குமிடம் என எல்லா இடங்களுக்கும் சென்று அந்த இடமெல்லாம் காடாக ஆகி அவர்களை அழித்தது.அச்சமடைந்த தேவர்கள் "அவுர்வா" என்ற முனிவரிடத்தில் சென்று தங்களியக் காக்குமாறு வேண்டினர்.முனிவர், அரக்கர் யாரிடம்போர் புரிந்தாலும் அழிந்து விடுவரகள் என சாபமிட்டார்.அரக்கர்கள் பயந்து அமைதியாய் இருந்தபோது,தேவர்கள் அவர்களைத் தாக்கினர்.அரக்கர்களுக்கு தர்மசங்கடம்.தேவர்களுடன் போரிட்டால் அழிய நேரிடும்.போராடாவிட்டால் தேவர்கள் கை ஓங்கிவிடும்.இந்த சங்கடத்திலிருந்து தப்பிக்க சமுத்திரத்தில் சென்று வாழ அரக்கர்கள் ஓடினர்.ஆனால், கடல் மூலம் பயணம் செய்யும் மக்களைத் துன்புறுத்தினர்.ஒருமுறை கப்பலில் சென்ற வைசியனைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.அந்த சுப்ரியா என்ற வைசியன் சிவ வழிபாடு செய்பவன்.எனவே சிறையில் இருந்தே சிவ பூஜை செய்தான்.இதை அறிந்த அரக்கர்கள் அவன் பூஜையைக் கெடுப்பதற்காக அவனைக் கொல்ல பல ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.சிவன் தந்த பாசுபதத்தைக் கொண்டு சுப்ரியா அரக்கர்களை அழித்தான்.வைசியன் வழிபட்ட லிங்கமே போற்றப்படும் நாகேச லிங்கம் ஆகும். 


11- ராமனும்..ராமேஸ்வரமும்

--------------------------------------------

ராமன், வானர சேனியகளுடன் இலங்கைக்கு படையெடுத்துச் செல்ல கடற்கரைக்கு வந்தான்.தாகம் எடுக்கவே..ஒரு குரங்கிடம் தண்ணீர் எடுத்து வருமாறு கூறினார்.தண்ணீர் வந்ததும்..எதையும் முதலில் சிவனுக்கு படைத்த பின்னரே உண்ணும் வழக்கம் உள்ள ராமன்..தண்ணீரையும், ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு படைத்தான்.வழிபாடு முடிந்ததும்..சிவனும், பார்வதியும் வந்து ராமனை வாழ்த்தினார்கள்.பின், அதே இடத்தில் சிவபெருமான் நிலையாய் இருக்க ராமன் வேண்டினான்.ராமலிங்கமாக சிவன் அங்கேயே தங்கி விட்டார். 


12- குஷ்மேஸ லிங்கம்

-----------------------------------

தென்பகுதியில் சுதர்மா என்ற அந்தணன் சுதேஹா என்னும் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.அவர்களுக்குக் குழந்தை இல்லை.அதனால் பிற பெண்கள் அவளைக் கேலி செய்தனர்.அதனால் வருத்தமடைந்த அவள் தன் உறவினளாகிய குஷ்ணா என்பவளை தன் கணவன் மறுமணம் செய்துக் கொள்ள வேண்டினாள்.அப்படியே நான் மணம் புரிந்து, அவளுக்குக் குழந்தை பிறந்தால் நீ பொறாமையில் தூற்றுவாய் என்ரான் சுதர்மா.ஆனால் அவளோ தான் எண்ணியபடியே குஷ்ணாவை அவளுக்கு மணமுடித்தாள். குஷ்ணா ஒரு சிவ பக்தை.தனமும் களிமண்ணினால் 108 சிவலிங்கங்கள் செய்து அவற்றுக்கு பூஜை செய்துவிட்டு அவற்றை குளத்தில் போட்டுவிடுவது அவளது வழக்கமாய் இருந்தது.அதுபோல ஒரு லட்சம் லிங்கங்களை அவள் குளத்தில் போட்டிருந்தாள்.உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த்து.குழந்தை வளர ..வளர..முதல் மனைவியின் மனதில் பொறாமை உண்டானது.ஒருநாள் அக்குழந்தையை வெட்டி,அதன் உடலை குளத்தில் போட்டு விட்டாள் அவள்.


மறுநாள் விழித்ததும்,என்ன நடந்தது என்று தெரியாமல் குஷ்ணா பூஜை செய்யத் தொடங்கி விட்டாள்.இதனிடையே குழந்தையைக் காணாமல்..அனைவரும் கூச்சல் போடத் தொடங்கினர்.இத்தனை கூச்சலிலும்..குஷ்ணா பூஜையிலேயே இருந்தாள்.அவள் பூஜையை  ஏற்றுக் கொண்ட சிவன், அவள் பிள்ளையை பிழக்க வைத்ததுடன்..குஷ்ணா கேட்டுக் கொண்ட படி சுத்ர்மாவை மன்னித்தார்."மற்றொரு  சிவன் லிங்க வரம் தருகிறேன் கேள்" என்றார் சிவன்.அவ்வரத்தைப் பயன் படுத்தி அந்த குளத்தின் அருகிலேயே சிவன் லிங்க ரூபமாக இருக்க வேண்டும் என வேண்டினாள்.


பன்னிரெண்டாவது ஜோதிர்லிங்கமாகக் குஷ்மேஸ லிங்கமாக சிவன் அங்கேயே த்ங்கிவிட்டார்.


Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11