வாயு புராணம் (சிவ புராணம்) - 7

திரிபுரத்தின் அழிவு

--------------------------


தாரகாசுரனின் மைந்தர்களாகிய வித்யுனமாலி,தாரகாட்சன்,வீர்வயனா ஆகிய மூவரும் கடும் தவம் செய்தனர்.ஒரே காலில் நின்றனர்.நீரின் இருந்தும், தலை கீழாக நின்றும் வருடக்கணக்கில் தவம் செய்தனர்.தவத்தின் முடிவில் எதிர்ப்பட்ட பிரம்மனிடம் தாங்கள் சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டினர்.அப்படி ஒரு வரத்தைத் தர  தனக்கு ஆற்றலில்லை என பிரம்மன் கூறியதும்,அப்படியானால் தங்கம், வெள்ளி,இரும்பு ஆகியவற்றில் ஆன மூன்று கோட்டைக  அமைத்துக் கொண்டு தாங்கள் ஆயிரம் ஆண்டுகள் அவற்றுள் வாழ வேண்டும் என்றும்,அதன்பின் மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டையில் அடங்கி பலம் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டனர்.மேலும் யர தன்னை அழிக்க வந்தாலும் ஒரே அம்பை மட்டும் பயன்படுத்தி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இந்த மூன்று கோட்டைகளை அழித்தால் அதை ஏற்பதாகவும் கூறினர்.


பிரம்மன் தந்த வரத்தின் படி மூன்று கோட்டைகளை அமைத்து ஆயிரக்கணக்கான தைத்திய்ரகள் அவற்றுள் வாழ வழி செய்தனர்.பல்லாண்டுகள் கழிந்து,அவர்கள் சிவ பூஜை செய்வதை மறந்து அகங்காரம் மிக்கவர்களாக தங்களை யாரும் அழிக்க முடியாது என்ற காரணத்தால் தவறான வழிகளில்  செல்ல முற்பட்டனர்.தேவர்கள்,பிரம்மா, விஷ்ணு அகைய அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர்.தவறான வழிகளில் செல்லும் அவர்களிய அழிக்க சிவன் ஒப்புக் கொண்டார்.விஸ்வகர்மா முழுதும் தங்காத்தால் ஆன தேரைத் தயாரித்தார்.பிரம்மனே சாரதியாக இருந்து தேரோட்ட முன் வந்தார்.திரிபுரத்தை நோக்கிச் சென்ற அத்தேரிலிருந்து "பாசுபதம்" என்னும் ஒரே அஸ்திரத்தை செலுத்தி திருபுரத்தை எரித்து சாம்பலாக்கினார்.  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11