வாயு புராணம் (சிவ புராணம்) - 9

 நாரதரும் சம்பங்கி மரமும்

-------------------------------------

(சிவன் சம்பங்கி மலரை ஏற்காததற்கு சொல்லப்ப்ட்டுள்ள மற்றொரு சம்பவம்)


ஓருமுறை நாரதர் திருக்க்கோகர்ணம் சென்று சிவனை வணங்கப் புறப்பட்டார்.வழியில் ஒரு அழகான சம்பங்கி மரம் பூத்துக் குலுங்கி நின்றது.அதன் அருகே ஒரு அந்தணன் வந்தான்.அவன் கையில் ஒரு பாத்திரம் இருந்தது.நாரதர் அவனிடம், "நீ யார்? எங்கு போகிறாய்?" என்று கேட்டார்.அதற்கு அவன், "நான் பிச்சை எடுக்கப் போகிறேன்" என்று பொய் சொன்னான்.நம்பிய நாரதரும் கோயிலுக்குள் சென்று சிவனை வழிபட்டுவிட்டு வந்தார்.அந்த அந்தணன் கையில் இருந்த பாத்திரத்தில் சம்பங்கிப் பூக்களை நிறைத்துக் கொண்டு, அதை மூடி வைத்திருந்தான்.


அவன் மீது சந்தேகப்பட்ட நாரதர் சம்பங்கி மரத்திடம்,"ஏ..மரமே..அவன் உன் பூக்களைப் பறித்தானா?"எனக் கேட்டார்.அந்த அந்தணனைப் போல மரமும் "என் பூக்களை யாரும் பறிக்கவில்லை"என பொய் சொன்னது.நாரதர் மீண்டும் கோயிலுக்குள் சென்றார்.சிவலிங்கத்தின் தலையில் புதிய சம்பங்கிப் பூ வைக்கப் பட்டிருந்தது.பக்கத்தில் தியானம் செய்து கொண்டிருந்தவரிடம்"இந்தப் பூவை யார் லிங்கத்தி நீது வைத்தார்கள்?"என்று கேட்டார்.


அந்த அன்பர்,"மிகத் தீயவனும்,பொய் பேசுபவனும் ஆகிய ஒரு அந்தனன் இருக்கின்றான்.சிவன் தயவை வைத்துக் கொண்டு..இந்த ஊர் அரசனை ஏமாற்றிப் பணம் பறிப்பதுடன்..மக்களையும் ஏமாற்றுகிறான்" என்றார்.

நாரதர், சிவலிங்கத்தைப் பார்த்து,"இந்த அநியாயம் ந்டைபெற நீங்கள் உதவியாக இருக்கலாமா?"என்றார்.அதற்கு சிவனோ, "என்னை வந்து பூஜிப்பவர்களை நான் ஒதுக்க முடியாது" என்றார். 


இச்சமயம் ஒருத்தி "ஓ" என அழுதுக் கொண்டே கோயிலுக்குள் வந்தாள்.தன் கணவன் பக்கவாத நோயால் அவதிப்படுவதாகவும்,தன் மகளின் கல்யாணத்துக்கு அரசனிடம் முறையிட்டு, கொஞ்சம் பணமும்,ஒரு பசுவையும் அன்பளிப்பாகப் பெற்றதாகவும்..அந்தப் பணத்தை..அந்த அந்தணன் பிடுங்கிக் கொண்டதாகவும் சொல்லி அழுத்தாள்


.கோபம் கொண்ட நாரதர் அந்தத் தீய அந்தணனை விராதன் எனும் அரக்கனாகப் போகுமாறு சபித்தார்.பொய் சொன்ன சம்பங்கி மரப் பூவை இனி சிவன் ஏற்க மாட்டார்  என்றும் கூறினார்.சாபம் அடைந்த அந்தணன் சிவனுக்கு பூக்களைப் போட்டதால் ராமன் வந்து விராதனைக் கொன்று சாப நீக்கம் செய்தான்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11