பிரம்ம புராணம் - 11
விஸ்வாமித்திரர் தீர்த்தம்
-----------------------------------
ஒரு காலத்தில் நாடு முழுதும் பயங்கரமான பஞ்சத்தில் சிக்கியது.விஸ்வாமித்திர முனிவர்,அவர் குடும்பம், சீடர்கள் என அனைவருக்கும் எந்த உணவும் கிடைக்காது வடை வதங்கினர்.விஸ்வாமித்திரர் சீடர்களைப் பார்த்து, எங்கிருந்தேனும், எதையேனும் தேடிச் சென்று கிடைத்ததை கொண்டுவருமாறு கூறினார்.அவர்களும் தேடிச் சென்று எதுவும் கிடைக்காமல்..கடைசியில் இறந்து கிடந்த நாய் ஒன்றின் உடலைக் கொண்டு வந்தனர்.முனிவர், "இதன் புலாலை நன்று கழுவி சுத்தம் செய்து முதலில் தெய்வங்களுக்கும்,பிதுரர்களுக்கும் படையுங்கள்..பின் நாம் உண்போம்" என்றார்.நாயின் புலாலை இறைவனுக்கு படைப்பதா? இதை அறிந்த இந்திரன் வல்லூறு வடிவில் வந்து நாய் உடல் இருந்தக் கிண்ணத்தைத் ட்ஹூக்கிச் சென்றான்.இதை அறிந்த விஸ்வாமித்திரர், இந்திரனை சபிக்க முற்பட,அவரின் சாபத்திற்கு அஞ்சிய இந்திரன்..அந்தக் கொண்ணம் முழுதும் அமிர்தத்தைக் கொண்டு வந்து, "இதனை சாப்பிடுங்கள்"என்றான்.
அதை மறுத்த முனிவர்,"இந்திரா,உலகமே பட்டினியில் வாடும் போது நான் மட்டும் அமிர்தத்தை உண்ண விரும்பவில்லை.நாய் உடல் உள்ள கிண்ணத்தையேக் கொண்டு வா" என்றார்.முனிவரின் முடிவினை மாற்ற முடியாது என அறிந்த இந்திரன்,மேகங்களை எல்லாம் ஏவி மழையைப் பொழியுமாறு செய்தான்.அதன் பிறகே விஸ்வாமித்திரர் அமிர்தத்தை வாங்கி உண்டார்.இந்த நடந்த இடம் விஸ்வாமித்திரர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
கௌதமி கங்கையின் சிறப்பு
------------------------------------------------
கங்கைக் கரையில் சுவேதா என்ற வேதியன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒரு சிவ பக்தன்.அவனது காலம் முடிந்ததும் யம தூதர்கள் அவனைக் கொண்டு போக வந்தனர்.ஆனால், அவனது ஆஸ்ரமத்திற்குள் நுழைய முடியாதபடி சிவனின் படைகள் ஜாவல் காத்து வந்தன.சென்ற தூதர்கள் திரும்ப வராததால் மிருத்யு (சாவு)எனும் தன் தோழனை அனுப்பினான் யம்ன.மிருத்யு தன் பாசக்கயிற்றை சுவேதாவின் கழுத்தில் மாட்ட முயன்ற போது சில கணங்ககளால் கொல்லப்பட்டான்.இதைக் கேள்விப்பட்ட யமன் தானே படைகளுடன் வந்து போர் தொடங்கினான்.சிவனுடன் இருந்த நந்தி,விக்னேஸ்வரன்,கார்த்திகேயன் ஆகிய அனைவரும் யமனுடன் போரிட்டனர்.இப்போரில் கார்த்திகேயன் யமனையும் கொன்றுவிட, தேவர்கள்..யமன் இல்லையேல் சாவு,வாழ்வு நடைபெறாது என முறையிட்டனர்.ஒரு நியதியுடன் சிவனும் சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டார்.சிவ பக்தர்கள் இறந்தால் யம தூதர்கள் அங்கு வரக் கூடாது.அவர்கள் நேரே சிவலோகம் சென்று விடுவர்.இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள, நந்துத் தேவர் கங்கை நீரைக் கொண்டு வந்து யமன்,மிருத்யு மீது தெளிக்க அவர்கள் உயிர் பெற்றனர்.கௌதமி கங்கையின் சிறப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
குபேரன்
---------------
விஸ்ரவனுக்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவியின் மகள் குபேரன்.பெரும் செல்வந்தன்.இலங்கையை ஆட்சி செய்து வந்தான்.அரக்கியாகிய இரண்டாவது மனியவியின் பிள்ளைகள் ராவணன்,கும்பகர்ணன்,விபீஷணன் ஆகியோர்.முதலில் இவர்கள் குபேரனுடன் நட்புடன் இருந்தனர்.ராவணனின் தாய் மகனை அழைத்து ..:"நீ அரக்கன்.குபேரன் தேவ வர்க்கம்.நீங்கள் எல்ளோரும் நடந்து கொள்வது தவறு.கலம் காலமாக தேவர்களுக்கு பகை அரக்கர்களுக், அசுரர்களும்.அவனை எப்படியாவது வென்று அவன் செல்வத்தை பறித்து கொள்"என்று கூறினாள்.
ராவணன் முதலிய மூவரும் பிரம்மனைக் குறித்து பெரும் தவம் செய்து பல வரங்களைப் பெற்றனர்.அதன் பயனாக குபேரனை வென்று இலங்கையை விட்டே விரட்டி விட்டனர்.தாத்தாவாகிய புலத்தியனுடைய அறிவுரையின்படி குபேரன் கௌதமி கங்கையின் கரைக்கு வந்து சிவனைக் குறித்துப் பெரும் தவம் இயற்றினான்.இறுதியில் சிவன் தோன்றி, குறையாத செல்வத்தின் தலைவனாக குபேரனை ஆக்கினார்.
Comments
Post a Comment