13 - நாகேஸ்வரனின் கதை
பிரதிஷ்டனா என்ற நகரை "சுரசேனா" என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.நீண்டகாலம் அவனுக்கு மகப்பேறு இல்லை.பல தவங்கள் செய்து இறுதியாக ஒரு குழ்னஹ்தை பிறந்தது.ஆனால்..அக்குழந்தை மனித உருவில் இல்லாமல் ஒரு பாம்பாக இருந்தது.அரசனும், அரசியும் யாருக்கும் சொல்லாமல் அக்குழந்தையை வளர்த்தனர்.திருமணப்பருவம் வந்ததும் அந்த பாம்பு மகன் ,"எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்..இல்லாவிடின் தற்கொலை செய்து கொள்வேன்" என்றான்.அரசர் உடனே வயது முதிர்த்த அமைச்சர் ஒருவரிடம் விவரங்களைக் கூறினார்.அந்த அமைச்சரும்"கீழ்த்திசையை ஆட்சி செய்யும் விஜயன் எனும் அரசனுக்கு யோகவதி என்ற மகள் இருக்கீறாள் அவளை மண்மௌடித்து வைக்கின்றேன்"என்றர.அதன்படியே அம்மன்னனிடம் சென்று பேசினார்.
பின் ராஜபுத்தர முறையில் மணமகள்..மணமகனின் வாளுக்கு மாலையிட்டாள்.திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்த யோகவதிக்கு , தாதி ஒருத்தி.."இந்த வீட்டில் தேவன் ஒருவன் பாம்பு வடிவில் உள்ளான்.அவனுக்குத்தான் நீ மாலையிட்டுள்ளாய்" என்ராள்.தேவன் என்றதும் மணமகல் மகிழ்ந்து பாம்புக் கணவனைச் சென்று பார்த்தாள்.இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர்.முற்பிறவியில் இருவரும் கைலாயத்தில் சிவனின் ஆபரணமாக இருந்தனர்.இருவரும் இப்போது கங்கையில் சென்று குளித்தனர்.மூழ்கி எழுந்ததும் பாம்பு கணவன் அழகான மனிதனாக மாறியிருந்தான்.நீண்டகாலம் ஆட்சி செய்த பின் இருவரும் கைலாயம் சென்றனர்.
நான்முகன் கதை
-----------------------------------
முன்னொரு காலத்தில் தேவ..அசுர போர் மிகக் கடுமையாக நடந்தது.இப்போரில் தேவர்கள் தோற்றனர்.தோற்ற தேவர்கள் பிரம்மாவிடம் ஓடிச் சென்று தங்கள் பரிதாப நிலையைக் கூறி வருந்தினர்.அப்பொழுதெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன.நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலைகளாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது.அவர்கள் குறையைக் கேட்ட பிரம்மன், "ண்ஹீங்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டால் அவரால்தான் அசுரரகளை அழிக்க முடியும்..அவரிடம் செல்லுங்கள்"என்றார்.தேவர்கள் சிவனிடம் முறையிட ..அவர்களிடம் இரக்கம் கொண்ட சிவன்..தான் ஒற்றையாக நின்று அசுரர்களுடன் போர் தொடுத்தார்.அசுரர் படை சின்னாபின்ன மாக்கியது.தேவர்கள் உலகத்தைக் கடந்து பூமிக்கு ஒடி அங்கும் துரத்தப்பட்டதால் அசுரர்கள் கீழ் உலகம் சென்றனர்.சிவபெருமான் தனித்து போரிட்டதால்,அவர் உடலிலிருந்து வியர்வைத் துளிகள் வெளிப்பட்டு தரையில் சிந்தின.அத்துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாத்ரிகள் எனப்படும் சிவ கணங்கள் தோன்றின.இப்போது இந்த மாத்ரிகளும் அசுரர்களை விரட்டி அடித்தனர்.ஒருவாறு அசுரர்கள் ஓடி மறைகின்ற நிலையில் ஒரு புது திருப்பம் ஏற்பட்டது.கங்கைக் கரையில் ஏனைய ட்ஹேவர்களுடன் தங்கியிருந்த பிரம்மனின் ஐந்தாவது கழுதைத்தலை அசுரர்களைக் கூவி அழைத்து,"நீங்கள் ஏன் அஞ்சி ஓடுகிறீர்கள்?மீண்டும் வந்து சண்டையைத் துவக்கினால் உங்களுக்கு உதவியாக நான் இருக்கின்றேன்"என்றது.இதைக் கேட்டுக் கொண்டிருந்த ட்ஹெவர்கள்..பிரம்மன் தங்களுக்குத் துணையாக இருக்க..அவனது ஐந்தாவது தலை தங்கள் விரோதிகளான அசுரர்களுக்குத் துணை போகிறேன் என்று கூறியது பெரும் கலக்கத்தை விளைவித்தது.
செய்வதறியாது தேவர்கள் விஷ்ணுவிடம் ஓடிச்சென்று மூறையிட்டனர். அதைக் கேட்ட விஷ்ணு, "பிரம்மனின் ஐந்தாவது தலையை நான் கிள்ளி விடலாம்..ஆனால் அதிலும் ஒரு ஆபத்து உள்ளது.கிள்ளப்பட்ட தலை கீழே விழுந்தால் பூமி சுக்குநூறாகிவிடும்.அதனால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.நீங்கள் சிவனிடம் சென்று முறையிடுங்கள்"என்றார்.தேவர்கள் சிவனை அடைந்து கழுதைத் தலையினைப் பற்றியும், அது கீழே விழுந்தால் பூமிக்கான ஆபத்தையும் கூறினார்.சிவன் சிறிது யோசித்து விட்டு "கவலை வேண்டாம்.அந்தத தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஓட்டினை என் கையிலேயே வைத்துக் கொள்கிறேன்"என்றார்.தான் கூறியவாறே பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஓட்டை சிவன் கையிலேயே வைத்துக் கொண்டார்.அன்றிலிருந்து பிரம்மா "சதுர்முகன்"(நான்முகன்) என அழைக்கப்பட்டார்.பிரம்மாவின் தலை கிள்ளப்பட்ட இடம் பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப் பட்டது.சிவபெருமான் வியர்வையில் கிளம்பிய மாத்ரிகள் அசுரர்களைக் கொன்ற இடம் "மாத்ரி தீர்த்தம்" என வழங்கப்படுகிறது.
Comments
Post a Comment