15 - பிரம்ம புராணம்

 தர்மத்தின் வழி நடந்தால்..

-----------------------------------

பவனா என்ற ஊரில் கௌதமன் என்பவன் வாழ்ந்து வந்தான்.பிறப்பால் பிராம்மணன் ஆனாலும்..அவன் தாயின் தூண்டுதலால எந்தத் தீயக் காரியத்தையும் அஞ்சாமல் செய்யும் துணிவினைப் பெற்றிருந்தான்.அப்படி இருந்தும் வைசிய குலத்தியச் சேர்ந்த மணிகுண்டலன் என்பவன் இவனுக்கு நண்பனாக இருந்தான்.மணிகுண்டலன் பெரிய செல்வந்தரின் மகன்.சூழ்ச்சிகாரனாகிய கௌதமன் தோழனிடமிருந்து பொருளைக்கொள்ளையடிக்க நினைத்தான்.அது உள்ளூரிலேயே முடியாத காரியம் என்பதால்..நல்லவன் போல நண்பனைப் பார்த்து "வெளியூர் சென்று நாம் பொருள் ஈட்டி வரலாமே " என்றான்.இதற்கு மணிகுண்டலன்"என் தந்தையிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது.நான் ஏன் வெளியூர் சென்று பொருள் தேட வேண்டும்?"என்றான்.

"மலை போல செல்வம் தந்தையிடம் இருந்தாலும்..மகன் அதை அனுபவிப்பதில் பெருமை இல்லை.தானாக சம்பாதிப்பதே சிறந்தது" என்றான் கௌதமன்


இதனையேற்ற மணிகுண்டலன் பெரும்பொருளுடன் கௌதமனையும் அழைத்துக் கொண்டு வாணிபம் செய்ய வெளியூருக்குச் சென்றான்.கௌதமன் ஏழை.ஆதலால் முதலாகப் போடப்பட்ட பொருள் முழுதும் மணிகுண்டலனையேச் சேரும்.வியாபாரம் நன்கு நடக்கவே தோழர்கள்  வருமானத்தைப் பங்கிட்டுக் கொண்டனர்.

எந்த நிலையிலும் தர்மமே சிறந்தது.தர்மவழி என்பதே சிறந்தது என மணிகுண்டலன் சொல்லிக் கொண்டிருப்பான்.பிராம்மணனாகப் பிறந்த கௌதமன், "இது பைத்தியக்காரத்தனம்.தர்மமாவது..ஒன்றாவது..எப்படியாவது பொருளைச் சேகரித்து வாழ்வதே புத்திசாலித்தனம்"என்றான்.கருத்து வேற்பாடு முற்றவே கௌதமன் ஒரு வழி சொன்னான்."மணிகுண்டலா..நாம் வெளியில் பார்க்கும் பலரையும் கேட்டுப் பார்ப்போம்.அவர்கள் தர்மமதான் சிறந்தது என்று சொன்னால்..என் பங்குக்குரிய செல்வம் முழுவதையும் உனக்குக் கொடுக்கின்றேன்.நான் சொல்வதுதான் சரியென்றால் உன் பங்குக்குரிய செல்வம் முழுவதும் எனக்கு தந்துவிட வேண்டும்" என்றான்.அப்பாவியாகிய மணிகுண்டலன் அதற்கு சம்மதித்தான்.வழியில் போவோர்களைச் சந்தித்துக் கேட்டார்கள்.அறிவில்லாத அந்தச் சாதாரண மக்கள் கௌதமன் சொல்வதே சரி யென்றனர்.மணிகுண்டலன் பங்கு முழுதும் கௌதமனுக்கேக் கொடுக்கப் பட்டது.மறுபடியும் வியாபாரம் நடந்தது.மணிகுண்டலன் தான் சொன்னதையே மீண்டும் சொன்னான்.இரண்டாம் முறையும் பந்தயம் கட்டி மணிகுண்டலன் கருத்தை யாரும் பேசாததால் கௌதமன் அவன் கைகளை வெட்டி எறிந்தான்.அந்நிலையிலும் மணிகுண்டலன் தர்மத்தின் சிறப்பைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.அவனை ஒழித்துவிட எண்ணிய கௌதமன்..மறுபடியும் பந்தயம் கட்டி தான் ஜெயித்ததும் மணிகுண்டலனின் இரு கண்களையும் பிடுங்கிக் கொண்டான்.

அப்பொழுதும் மணிகுண்டலன் தன் கொள்கைகளிலிருந்து மாறவேயில்லை.தர்மம்தான் இறுதியில் வெல்லும் என சொல்லிக் கொண்டு எங்கெங்கோ அலைந்து கங்கைக் கரையில் உள்ல விஷ்ணுவின் சிலைக்குப் பக்கத்தில் வந்துத் தங்கினான்.அங்கேயும் படுத்திருந்த போது..ஒரு இரவில் இலங்கையில் இருந்து விபீஷணன்,அவன் மகன் மற்றும் காவலர்களுடன் விஷ்ணுவின் சிலைக்கு பூஜை செய்ய வந்தான்.அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த விபீஷணனின் மக்ன, கண்ணிழந்த மணிகுண்டலனைப் பார்த்து, அவனது வரலாற்றைத் தெரிந்து கொண்டான்.அந்த சோகக் கதையை விபீஷணனிடம் சொன்னான்.அப்போது அவர், "மகனே!ராம,ராவண யுத்தத்தின் போது அனுமன் மருந்து மலையினைக் கொண்டு வந்தான்.திரும்ப அம்மலையை அனுமன் எடுத்துச் செல்கையில் அதி அற்புதம் வாய்ந்த விஷல்யகரணி என்ற மரத்தின் ஒரு பகுதி இங்கே விழுந்து விட்டது.அதைத் தேடிப் பார்க்கலாம்" என்று சொல்லித் தேடி,அது ஒரு பெரிய மரமாக வளர்ந்திருப்பதைக் கண்டார்கள்.அதில் ஒரு சிறு கிளையை உடைத்து வந்து மணிகுண்டலனின் மேல் போட்டதும் இழந்த கைகள்,கண்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற்றான்.

ஒரு சிறிய நாட்டை ஆண்டு வந்த அரசனுடைய மகள் கண்களை  இழந்து சோகத்தில் இருந்தாள் .அவள் கண்களை யார் சரி செய்கிறார்களோ.அவர்கள்  அவளைத் திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளலாம் என அந்நாட்டு மன்னன் கூறியிருந்தான்.இதை அறிந்த மணிகுண்டலன் தனக்குத் தெரிந்த மருந்துச் செடியால் அரசகுமாரியின் கண்களை சரி செய்து, அவளை மணந்து அந்நாட்டை ஆளத்தொடங்கினான்.சிலகாலம் கழித்து காவலர்கள் ஒருவனை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அவன் தன் பொருள்களை அபகரித்து..தன்னை இம்சித்த கௌதமன் என்பதை அறிந்து கொண்டான் மணிகுண்டலன். ஆனாலும் அவனை மன்னித்து,திரவியங்களும் தந்தான்.

தருமமே இறுதியில் வென்றது.    

  


 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம் - 20

விஷ்ணு புராணம் - 22

வாயு புராணம் (சிவ புராணம்) - 11