16 _ ஏகாதசி மகிமை

 


அவந்தி நகரத்தின் வெளியே நாடு கடத்தப்பட்ட கொடிய பாதகன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவந்தி நகரைச் சுற்றி ஓடும் சிர்பா நதியின் கரையில் இரு விஷ்ணு ஆலயம் இருந்தது.அப்பாதகன் ஒரு விழ்ணு பக்தன்.ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து அன்று இரவு விஷ்ணுக் கோயிலுக்குச் சென்று மனமுருகி பாடும் பழக்கத்தை மேற்கோண்டிருந்தான்.ஒருமுறை ஏகாதசி வழிபாட்டிற்குப் புறப்பட்ட அவன்,நதிக்கரையில் இருந்த மரங்களில் பூஜைப் பறிக்கத் துவங்கிய போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டான்.அந்த மரத்தில் இருந்த பிரம்ம ராட்சஷன் :"நில்..பசியால்  துடித்துக் கொண்டிருக்கின்றேன்.உன்னைத் தின்னப்போகிறேன்" என்றான்,அதைக் கேட்டவன்..சிறிதும் அச்சம் கொள்ளாது"நல்லது..உனக்கு உணவாவதில் எனக்கு மகிழ்ச்சி.ஆனால் 20 ஆண்டுகளாக ஏகாதசி விரதம் இருந்து வருகிறேன்.இன்று ஏகாதசி.கோயிலுக்குச் சென்று வழி பட்டுவிட்டு வருகின்றேன்.நாளைக் காலை உனக்கு உணவாகிறேன்"என உறுதி அளித்தான்.அதைக் கேட்ட பிரம்ம ராட்சஷனும் அவனுக்கு அனுமதி கொடுத்தான்.  

கொடியவனும் தன் வார்த்தைத் தவறாது  மறுநாள் ராட்சஷனிடம் சென்றான்.ஆச்சரியம் அடைந்த ராட்சஷன்.."எவ்வளவு நாளாக ஏகாதசி விரதம் இருக்கிறாய்?" என்றான்.

"20 ஆண்டுகளாக"

"நான் ஆதியில் பிராமணனாக இருந்தேன்.பூணூல் போடுவதற்கு முன் எந்த யாகத்திலும் கல்ந்து கொள்ளக் கூடாது என்று இருந்தும் திருட்டுத்தனமாக  ஒரு யாக்த்தில் கலந்து கொண்டேன்.என் தந்தை பெயர் சோம சர்மா.என் பெயர் சர்மா.இப்போது நான் உன்னை சாப்பிடுவதற்கு பதிலாக நீ உன் ஒரு ஏகாதசி புண்ணியத்தை எனக்குத் தந்தால் இந்நிலைமை எனக்கு நீங்கி விடும்'என்றான் ராட்சஷன்.அவன் மேல் இரக்கம் கொண்ட கொடியவனும்..ஒரு ஏகாதசி விரதத்தின் இரண்டு மணி நேரபங்கை அவனுக்குத் தந்து..அந்த இழி பிறப்பிலிருந்து விடுதலை செய்தான்.


கொடியவனும், தீர்த்த யாத்திரை மேற்கொண்ட போது தன் முந்தையப் பிறப்பை உணர்ந்தான்.துறவியாக ஆசிரம வாழ்க்கை நடத்தும் போது..பிச்சைப் பெற்றுக் கொண்டு வந்த உணவைதூக்கி எறிந்த காரணமாக இப்பொழுது கொடியவனாக பிறந்துள்ளான்.அதன்பிறகு தீர்த்தயாத்திரை செய்து மன்னிப்பும் பெற்றான்.


கதையை தொடங்கிய நைமிசாரண்ய வனத்தில் உரோமஹர்ஷனர் இக்கதையை முடித்தார்.

பிரம்ம புராணத்தை கூடியவரை சுருக்கி..சாராம்சம் குறையாது எளிமைப் படுத்தி தந்துள்ளேன்.


இப்புராணத்தின் பிற் பகுதி யோகம் பற்றியும்..அதை செய்ய வேண்டிய முறையினும் பற்றியே கூறுகிறது


(பிரம்ம புராணம் முற்றும்..நாளைமுதல் "பத்ம புராணம்)

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11